தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மரம்

ஜெயக்குமார் (ஜே.கே)
யார்மீது கோபமோ!
காலையிலேயே சுட்டெரிக்கும் சூரியன்.!
நீண்ட சாலையில்!
தனியாக நடந்துகொண்டிருக்கிறேன்.!
வளர்ந்துவிட்ட!
நகரத்தின் அடையாளமாய்!
நடமாடும் மனித இயந்திரங்கள்!
காங்கிரீட் கட்டிடங்கள்.!
வாகன நெரிசலும், புகையும்...!
வெகுநேரமாக சுற்றுகிறேன்!
எங்கும் தென்படவில்லை!
மரமெனும் மகத்துவம்!
மெதுவாக புரிய ஆரம்பித்தது!
சூரியனின் கோபம்

சோதனைச் சாவடி

றஹீமா-கல்முனை
தெருவுக்குத் தெரு...!
வாந்தி எடுதபடி!
நகர்கிறது பஸ்.!
கேட்டால் சொல்கிறார்கள்:!
சோதனைச் சாவடியாம்!!!
ஏத்தி இறக்கி...!
கையில் இருந்த!
பொதிகளை எல்லாம்..!
பிரித்து மேய்ந்து!
ஆள் அடையாள அட்டையில்!
பழைய முகம்....!!
புதிய முகம் தேடி!
ஆயிரம் முறை!
அடையாள அட்டை!
புரட்டி!
பாதி சந்தேகத்தில்!
வழியனுப்பிவிடும்!
காக்கிச்சட்டைக்காரன்....!!!
கண்ட கண்ட!
இடங்களில் எல்லாம்..!
இழுபட்டு தொடரும்!
மண்ணாங்கட்டிப்!
பயணங்கள்!
இப்போதெல்லாம்!
colombo பயணங்கள்!
துணியாதொங்களிலாம்!!!!!
முறைப்படுகிறார்கள்!
பயணிகள்!
சோதனைச் சாவடிகள்!
நிறைந்த.......!
பயணங்கள் இல்லாமல்!
தொடரட்டும்.....!
நமது!
வாழ்கைப்பயணங்கள்

குறைவில்லாதது

செண்பக ஜெகதீசன்
நம்பிவரும் பெண்ணை!
நடுக்காட்டில் விட்டுவோடும்!
நளன்களுக்குக் குறைவில்லை!
அச்சமொடு நான்கைத்!
துச்சமாக எண்ணியதால் வந்த!
பச்சைப் பிள்ளையை!
எச்சில் தொட்டியில் எறிந்துவிடும்!
குந்திதேவிகளுக்கும் குறைவில்லை!
அண்ணன் தம்பி சொத்தில்!
ஆசைவைத்து அவரைத்துரத்திடும்!
துரியோதனர்களுக்கும் குறைவில்லை!
அடக்க இயலா ஆசைப்பெருக்காலே!
அடுத்தவன் மனையாளை!
அபகரித்து அழிந்துபோகும்!
இராவணர்களுக்கும் குறைவில்லை!
கொடுமையே உருவமாகக்!
கூட இருந்தே குழிபறிக்கும்!
குடிலர்களுக்கும் குறைவில்லை..!!
பெயர்கெட்ட!
பொல்லாரின் மறுபிறப்பாய்ப்!
போகுதடா நாடு,!
சில்லோரேனும்!
நல்லோராய் நாம்வாழ்ந்தால்!
நலம்பெறுமே நாடு..!!
!
இதுவே போதும்..!
விண்ணை விட்டு!
விடுதலை பெற்ற!
மழைத்துளிகள்!
மண்ணை முத்தமிட்டு!
மழலையாய்ச் சொல்கின்றன-!
அன்னைமடி!
இதுவே போதும்

வறுமை

மணிசரவணன், சிங்கப்பூர்
அரசு தொகுப்பு வீடு!
நாற் சட்டங்களுக்குள் அப்பா!
அப்பாவின் அழைப்பினை!
மறுக்கவியலாது காத்திருக்கும்!
அம்மாவின் ஆசையால்!
நடந்தது என் திருமணம்!
வயசுக்கு வராத தங்கைகள்!
வயசுக்கு வந்த தம்பி!
மூன்று நாட்கள் தள்ளிப்போன!
முதல் இரவு!
நான்காம் நாளின் நள்ளிரவில்!
நானும் என்னவளும்!
மொட்டை மாடியில்!
நிலா வெளிச்சத்தினை!
மறைத்து இருள்கொடுத்தது!
பக்கத்து வீட்டு தென்னங்கீற்று!
வறுமை மறந்து!
நடந்தேறியது தாம்பத்தியம்!
புரிந்தது எனக்கு!
தென்னை நட்டால்!
பிள்ளையும் கிடைக்கும் என்று!
!
-மணிசரவணன்

ரோஜாமலரே

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்!
!
மென்மையான இதழ் கூட்டி!
வண்ண வண்ண நிறமேற்றி!
எண்ணத்தின் அழகையெல்லாம்!
ஒன்றுகூட்டி இயற்கையன்னை!
படைத்துவிட்ட அதிசயமே !!
முள்ளோடு ஒரு மரத்தில்!
முகிழ்த்து நீயும் ஒன்றாக!
தொட்டாலே உதிர்ந்திடும் நின்!
மென்மகளின் காவலுக்காய்!
முள்ளுந்தன் உடன்பிறப்பாய்!
ஆனகதை நாமறிவோம்!
பனியுன்னை குளிப்பாட்ட நல்!
ஆதவனும் உலரவைத்து மென்!
தென்றலது தாலாட்ட அந்த!
நிலவுமகள் தூங்க வைப்பாள்!
ரோஜாமலரே உனக்குரைப்பேன்!
ராஜா வீட்டுத் தொட்டமானாலும்!
ராப்பிச்சைக்காரன் முற்றமானாலும்!
இய்ற்கையன்னை எமக்களித்த ரோஜா!
உன்னழகினிலே குறைவு காண்பதில்லை!
அகலத்தில் மனிதராக பிறந்த நாம்!
ஆயிரம் வேற்றுமை கொண்டதுவை!
எள்ளி நகையாடி கள்ளி நீ செடியினிலே!
ஆடுவதை புரியார் இம் மானிடரே

108 எண் வண்டி

வி. பிச்சுமணி
பெருங்களத்தூர் நிலையத்தில்!
தொடர்வண்டிக்காக காத்திருக்கையில்!
நெடுஞ்சாலையில் 108எண் வண்டி!
அபய சத்தம் எழுப்பியவாறு செல்ல!
சாளரம் வழியாய் பார்வைசெல்ல!
அடிப்பட்டவரின் முகம் தெரியவில்லை!
மனது பதை பதைத்தது!
யாரோ யாவரோ!
பிழைத்து கொள்ள வேண்டுமென !
மனம் வேண்டி கொண்டுதென சொன்னேன்!
எங்கள் கல்லூரி பேரூந்தை!
108 எண் வண்டி கடந்து செல்லுகையில்!
நானும் அப்படி வேண்டி கொள்வேன் !
என என் மகள்!
108ன் அபய சத்தம் !
முன் வழியுடன்!
முன்பின் தெரியாதோரின் !
வேண்டுதல்களையும்!
வாங்கி கொண்டு தான்!
உயிர் காக்கிறது !

அம்மாவின் சேலை

சூர்யா கண்ணன்
எப்போதோ வாங்கின!
அம்மாவின் சேலை!
அக்காவுக்கு தாவணி!
தம்பிக்கு சட்டையென!
கிழித்து தைத்தது போக!
மீதமிருந்தது!
தலையணைக்கு உறையும்!
போன மாதம் வயதுக்கு வந்த!
தங்கைக்கு ஒரு முட்டுத்துணியும்!
-சூர்யா கண்ணன்!
குன்னூர்

விடிவு தருவாளா?

கிரிகாசன்
(ஒரு ஈழமகனின் கேள்வி)!
வெள்ளி நிலவொளியும் விரி நீர் தடாகத்து!
துள்ளும் அலையழகும் தூரத்து வானமதில்!
மெல்ல அசைந்துவரும் மேகங்களும் கண்டே,நம்!
உள்ளம் சிலிர்க்குமோர் உதயத்து வேளையிலே!
கோவில் மணியொலிக்க கூவிஒலி சங்கெழுப்ப!
வேதியரின் பூசையொலி விண்பரவும் காலையிலே!
வாசல் திறந்து ஒரு வஞ்சிமகள் நின்றிருந்தாள்.!
'ஆநீ..யார்' என்றேன் அவள் சிரித்து எனைப் பார்த்தாள்.!
'போனது ஓர்வருடம்! புத்தாண்டு நான்' என்றாள்!
'புதியதொரு ஆண்டின் புலர்வுஇது நாள்' என்றாள்!
ஆகட்டும் என்ன! அழிந்தவைகள் ஆயிரமாம்,!
நீமட்டும் என்ன, நிம்மதியைத் தருபவளோ!!
என்றேன் எனைப்பார்த்து இளமுறுவல் கொண்டே,'பார்!
சென்ற வருடத்தாள் சென்றுவிட்டாள், செய்தவைகள்!
இன்று முதல் நிறுத்தி இன்னல் துடைக்கவென!
வந்தேன் நான், விக்ருதி வருடம்' என்பெயர் என்றாள்!
'இல்லை இனி உனக்கு இழிதுயரம் தொல் நீக்கி!
வெல்லத் தமிழ்வாழ விடியல் தர வந்தேன்நான்!
பொல்லாப் பகை முடித்து புது வாழ்வு கொள்வீர்நீர்!
நில்லாத் துயர் ஓடும் நிச்சயமே காண்!' என்றாள்.!
நம்பி அவள் பேச்சில் நான் அமைதி கண்டேன் ஓர்!
வெம்பும் தமிழ் குலத்தின் விடுதலைக்கு வழிகோலி!
புத்தாண்டுப் பொன்மகளாள் புதுவீரம் தருவாளோ..?!
செத்தாலும் கண்மூடி திசைபாராதிருப்பாளோ..????

ஒரு உழைப்பாளி பேசுகிறேன்

ரசிகவ் ஞானியார்
முதலாளிகளெல்லாம்!
மூணாவது காட்சிக்கு!
உழைப்பாளிகளோ!
வீட்டுக் காவலுக்கு!
இன்று!
உழைப்பாளர் தினம் விடுமுறையாம்!
!
வருத்தங்களோடு ஒரு!
உழைப்பாளி பேசுகின்றேன்!
நீங்கள்!
பரிதாபப்பட்டு வீசுகின்ற!
பிரியாணியை விட - எங்கள்!
வியர்வையில் தோன்றிய!
சோத்துக்கஞ்சிக்கு!
சுவை அதிகம்தான்!!
ஆகவே!
தயவுசெய்து எதையும்!
தானமாய் தராதீர்கள்!
தன்மானத்தோடு வாழுகிறோம்!
!
இன்று எந்த!
முதலாளிகளும்!
அட்சயப்பாத்திரத்தை!
அனுப்பவேண்டாம்!
எங்கள்!
வியர்வைக்கு யாரும்!
விழா எடுக்க வேண்டாம்!
மூட்டை சுமந்து சுமந்து!
இந்திய ஜனநாயகத்தைவிட!
கூனிப்போய்விட்ட எங்கள்!
முதுகுக்கு யாரும்!
முத்தம் கொடுக்க வேண்டாம்!
வெயிலில் கறுத்து!
புண்பட்ட தோலுக்கு!
பொன்னாடை வீச வேண்டாம்!
நீங்கள்!
உடுத்து கிழித்த வேட்டியை!
போனஸ் எனச்சொல்லி!
பிச்சையிடவும் வேண்டாம்.!
எதுவுமே வேண்டாம்!
ஒரே ஒரு!
வேண்டுகோள்!
தயவுசெய்து இன்று!
விடுமுறை விட்டுவிடாதீர்கள்!
என் குழந்தை!
பசி தாங்காதுங்கய்யா..!
அன்புடன்!
ரசிகவ் ஞானியார்

சுயரூபம்

ஜெ.நம்பிராஜன்
எல்கேஜி சிறுவனின் ஏபிசிடி கிறுக்கல்கள்!
வட்டத் தலையுடன் குச்சிக் கால்களுடன்!
வண்ண வண்ண பொம்மைகள்!
குளிக்கப் போகுமுன் எடுத்து ஒட்டிய!
ஸ்டிக்கர் பொட்டுகள் சில!
கணக்கு தெரியாத பால்காரியின்!
கரிக்கோடுகள் ஆங்காங்கே!
எண்ணெய் தேய்த்த பின் கையைத் தேய்த்த!
அடையாளங்கள் சில!
இவையனைத்தையும் தாண்டி எட்டிப் பார்க்கிறது!
நான்கு ஆண்டுகளுக்கு முன் அடித்த!
பச்சை டிஸ்டம்பரின் வண்ணம்!
வெளி வார்த்தைகளால் பூட்டி வைத்தாலும்!
வெளிப்பட்டு விடும் என்...!
சுயரூபத்தைப் போலவே.!
-ஜெ.நம்பிராஜன்