தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இது நிலாச்சோறு.. நான்மிகப் பெரியவன்

துரை.ந.உ
இது நிலாச்சோறு.. நான் மிகப் பெரியவன் நான்!
01.!
இது நிலாச்சோறு அல்ல!
-------------------------------!
பள்ளிக்கூடம் முடிஞ்சு!
வீடுவந்து சேந்து!
கொஞ்சமா வெளயாடீட்டு!
கையக்கால கழுவீட்டு!
வீட்டுப்பாடம் முடிச்சு!
வயித்த தடவுனா!
பசிக்குதே.......!
வீட்டுக்குள்ள வந்து!
வரிசையா உக்காந்தோம்!
நாந்தான் கடைக்குட்டி!
நாலாவதா இருக்கேன்!
”முத்தத்துக்குப் போவோமா !
நிலாச் சோறு திம்போமா’’!
அம்மாகிட்ட கேக்கேன்!
அவளும் சரீன்னாளே !!
அப்பத்தானே பாக்கேன்!
அஞ்சாவதா அது நிலா!
வட்டமா ஏம்பக்கத்துல!
வாட்டமா அவ இருக்கா!
ஏனோ ஏம்பக்கத்துல!
ஏக்கமா அவ இருக்கா!
வானத்துல இருந்து அவ!
வேகவேகமா வந்திருக்கா!
தரையில இருக்கா - கூரை !
ஓட்டை வழியா வந்திருக்கா!
”அம்மா ....!
இப்போ வேண்டாம்!
நிலாச் சோறு !!
இன்னிக்கு நம்ம வீட்டுல!
நிலாவுக்கே சோறு !!”!
!
02.!
நான்மிகப் பெரியவன்!
--------------------------!
அவன்.....!
லட்சத்தில் குளிக்கிறான் !!
கோடியில் முகம் துடைக்கிறான் !!!
சக்தியின் அதிகார மய்யம் - அவனிடம்!
சத்தியமே கைகட்டி சேவகம் செய்யும்!
பெய்யென்றால் தான் மழையே பெய்யும்!
அவன் வரும் வழியில்!
அமைச்சர்கள் கைகட்டி இருப்பார்கள்!
அதிகாரிகள் வாய்பொத்தி நிற்பார்கள்!
அவனிருக்குமிடத்தில்!
பணம் பந்தியில் விஞ்சி இருக்கிறது!
குணம் கைகட்டி அஞ்சி நிற்கிறது!
காசு கை காட்டும் இடத்தில் - மெய்யது!
தூசு தட்ட காத்திருக்கிறது!
விந்தையாய்த் தெரியாது இது!
அகந்தை உள்ளிருக்கும் வரை!
புதியதாய் அகம் அரியணை ஏறுகிறது!
பழகிய முகம் அடுக்களை ஏகுகிறது!
வீட்டில்...!
எழுப்பிவிட.. தூக்கிவிட !
பல்துலக்க.. பாதம்துடைக்க!
துணி மடிக்க.. துவட்டிவிட!
ஊட்டிவிட.. வாய்துடைக்க!
செருப்பு மாட்ட.. ஆடை பூட்ட!
வாசல் திறக்க.. வழி அணுப்ப!
அப்பப்பா....!
ஆயிரம் சேவகர்கள் !! !
வெளியில்...!
கால் பிடிக்க.. காக்கா பிடிக்க!
செருப்பு துடைக்க.. உறுப்பு துடைக்க!
கார் கழுவ.. கதவு திறக்க!
அழைத்துசெல்ல.. அறிமுகம் சொல்ல!
எழுதிக்கொடுக்க.. எடுத்துப் படிக்க!
வாய்பார்க்க.. திறந்தவுடன் கைதட்ட!
கைகூப்ப.. காலில் விழ!
அப்பப்பப்பா...!
ஆயிரம் ஆயிரம் சேவகர்கள் !!!!
திடீரென.....!
சகாராவில் மழைதுளி போல!
சிம்லாவில் பனித்துளி போல!
சுனாமியில் சுண்டைக்காய் போல!
சூறாவளியில் பஞ்சுமிட்டாய் போல!
எரிமலையில் தண்ணீர் போல!
கடலலையில் கண்ணீர் போல!
ஒருநொடியில் அத்தனையும் !
ஒருங்கே காணாமல்போனது!
பங்குசந்தையின் சரிவில்!
சிக்கி சீரழிந்த காளையாகிறான்!
சீக்கிரமே உயிரிழந்த கரடியாகிறான்!
பணம் பாதாளம்வரை பாயுமாம் - இங்கே!
பணம் பாதாளத்துள் புதைந்துவிட்டது !!
தேரில் வந்து கொண்டிருந்தவன்!
தெருவில் விழுந்து கிடக்கிறான் !!!
இன்று இவன்....!
கண்ணைக் கட்டிக்!
காட்டில் விட்டது போல!
கையைக் கட்டி!
கிணற்றில் இறக்கியது போல!
அடுத்த அடிக்கு பாதை புரியாமல்!
அடுத்த வேளைக்கு வழி தெரியாமல்???!
இங்கே இன்று இவனுக்கு.....!
பெரிசாக எதுவும் வேண்டாம் - வயிறாற!
பரிசாக ஏதாவது கிடைத்தால்போதும் !!
அங்கே அவர்கள் சேவகர்களாகவே!
அவரவர் வேளையில்!
அவரவர் வேலையில்!
அவரவர் நிலையில் நிரந்தரமாய்...!!
அவரவர் பொறுப்பில் கவனமாய்

அழும்வரை சிரிப்பேன்.. காதல் ஏக்கம்

கிரிகாசன்
01.!
அழும்வரை சிரிப்பேன்!
-----------------------------!
மனம்கொண்ட துன்பங்கள் மனமேதா னறிந்தாலும்!
மகிழ்வென்ற நிறம்பூசிடும்!
தினம்என்றும் துயர்கூடித் துன்பங்கள் மலிந்தாலும்!
தித்திப்பை விழிகாட்டிடும்!
வனமெங்கும் முள்போல வாழ்வில்பல் லெண்ணங்கள்!
வலிதந்து ரணமாக்கிடும்!
இனம்காட்ட முடியாது இன்பத்தை முகம்பூசி!
எழில்போல உருமாற்றிடும்!
பணமொன்றும் தீர்க்காது பட்டாடை,பல்லக்கு!
தலைதூக்கி எவராடினும்!
பிணமென்று விதிசொல்லிப் பின்வாசல் வழிவந்தால்!
பேசாது உயிரோடிடும்!
மணமென்றும் மனையென்றும் மக்கள்மற் றுறவென்று!
மறந்தேநம் விழிமூடிடும்!
கணந்தன்னில் கரியாகிக் காற்றோடு புகையாகிக்!
கனவென்ற நிலையாகிடும்!
களவாக எமன்வந்து கயிறானதெறிகின்ற!
கணந்தன்னில் எதுகூறினும்!
விளையாது பயனேதும் விரைந்தோடி உயிர்சென்று!
விளையாட்டு முடிவாகிடும்!
களையாது தினம்தோறும் கனவோடு உயிர்கொண்டு!
புவிமீது நடந்தோடினேன்!
வளமான வாழ்வென்று வருந்தாமல் திமிரோடு!
பலநூறு பிழை யாற்றினேன் !
எனையாளும் இறைவா நீ இதுகால வரைதானு!
மிரு என்றாய் புவிமீதிலே!
வினைகொண்டு அழுதாலும் வியந்தேபின் சிரித்தாலும்!
வாழ்ந்தேனே அதுபோதுமே!
சுனையோடு மீன்துள்ளும் சுழன்றோடும், வலைவீச!
தெரியாமல் அதில்மாண்டிடும்!
நினையாது ஒருநாளில் நிகழ்கின்ற வாழ்வீது!
நிழலாகி உயிரோடிடும் !
அதுபோலும் புவிவிட்டு அகல்கின்றவரை நானும்!
மகிழ்வோடு கூத்தாடுவேன்!
புதுநாளில் எந்நாளும் புலர்கின்ற வெயிலோனைப்!
போலாகி ஒளிவீசுவேன்!
மதுவுண்ணும் வண்ணத்து மென்தும்பி எனநானும்!
அழகாகப் பறந்தோடுவேன்!
பொதுவாக இன்பங்கள் இன்பங்கள் எனப்பாடிப்!
போகும்வரை துள்ளுவேன்!!
!
02.!
காதல் ஏக்கம்!
--------------------!
வேலால் வேலால் எறிந்தாள் விழியாற் கொன்றாள்!
வேகும் தீயைத் தேகம் கொள்ளச் செய்தாள்!
பூவால் பூவால் கணைகள் கொண்டே எய்தாள்!
பூவில் தீயை ஏற்றிப் போரைச் செய்தாள்!
பாலாய் பாலாய் பழமாய் கனியாய் நின்றாள்!
பாவை விழிகொண் டுண்ணத் தன்னைத் தந்தாள்!
நாலை நாலாய் பெருகும் வயதைக் கொண்டாள்!
நாவில் இனிதே தமிழைக் குயிலாய் சொன்னாள்!
நூலாய் இடையும் நெளிந்தே குறுகிக் கொண்டால்!
நோகும் உடலே என்றேன் என்னில் சாய்ந்தாள்:!
பாவாய், பாகாய், பனியாய் உருகும் ஒன்றாய்!
படரும் கொடியாய் நெளிந்தே குழைந்தே சோர்ந்தாள்!
காயாய் பழமாய் காணும் உருவத் தெழிலாள்!
கன்னிப்பருவம் கொண்டே மலராய், இதழாய்!
தேயும் வளரும் நிலவாய்த் தென்றல் குளிராய்!
தேகம் எங்கும் பொங்கும் உணர்வைத் தந்தாள்!
வாராய் அருகில் வந்துவ சந்தம் வீசாய் !
வானத் துளிகள் தூவும் நிலமென் றாவாய்!
பாராய் கண்கள் மோதிக் கொள்ளும் போராய்!
பாதிச்சமரில் தோற்றுத் தழுவும் பாங்காய்!
நீயாய் நானும் நின்னை எனதாய்க் கண்டே!
நிற்போம் வெயிலும் நிலவும் சேரும் ஒன்றே!!
ஆகா ததுவே இருளும் தருமே என்றாள்!
அணைத்தேன் நிழலை அவளோ விலகிக்கொண்டாள்!
நோயாய் மனதில் வலியைத் தந்தே சென்றாள்!
நொடியில் திரும்ப மருந்தாய் வந்தே நின்றாள் !
தாயாய் அன்பும் தனிமைத் துணையும் தந்தாள்!
தழலாய் எரியுபோழ்தே நீராய் வீழ்ந்தாள்!
மேகம் எங்கும்தாவிகொள்ளும் மின்னல்!
மேலே நீவித் தூண்டிச் செல்லும் தென்றல்!
தாகம் என்றால் நாவில் தாவும் தண்ணீர்!
தன்னில் யாவும் கொண்டாள் தன்னைத் தந்தாள்!
ஓடும் உருளும் உலகில் எங்கும் துன்பம்!
உரிமை யில்லா வாழ்வில் எதுவும் அச்சம்!
வாடும் மனதுள் மக்கள் எண்ணித் துயரம்!
வந்தா லிவளோ வாழ்வில் தோன்றும் ஒளியும்

அன்பை பற்றிடடா

தமிழ் ராஜா
நாலு பேரின் நடிப்பிலே!
நாடக மேறியது மேடையில்!
இன்று நாலாப் பக்கமும் நடிப்பிலே!
மேடையின்றி நாடகமே!
முறையோடு வாழ்பவர்க்கு!
முதுகுக்கு பின்னே கண் வேண்டாம்!
குறையை முறையாக்கிக் கொள்பவர்க்கு!
கால் பாதத்திலும் கண் வேண்டும் !
சாக்கடையும் சந்தன சாயம் பூசி!
சமுதாய வீதியில் வலம் வரவே!
வேசித் தொழிலும் நாசமாகும்!
இந்த வீண் கெட்ட நாட்டினிலே!
தாயும், தந்தையும் ரெண்டாகவே!
தாரங்கள் மகனின் மனதினிலே!
இந்த கோரங்கள் இங்கு நிலைத்திடவே!
பதிகள் கோர்ட்டின் வாசலிலே !
போலிகள் நிறைந்த சமூகத்திலே!
புன்னகை பொலிவு கடை வீதியிலே!
தாலிகள் சேலையின் மறைவினிலே!
சில வேசியும் பத்தினி வடிவினிலே!
தோழிகள் தொட்டில் சுமக்கையிலே!
கட்டின மனைவி மலடியாய் வீட்டினிலே!
பாவிகள் காவிகள் போர்வையிலே !
பரம்பொருளும் பாவியாய் வீதியிலே!
பெண்மையின் சாரம் நகைக்கையிலே!
பொம்மையும் தாய்மை அடையுதடா!!
ஆண்மை வேடம் தரிக்கையிலே!
இயந்திரம் தந்தை ஆனதடா!!
தூக்க மாத்திரை உண்டிடவே!
உனக்கு வாழ்க்கை தேவையா என்னிடடா!!
சொர்க்கம் ஒன்று உண்டென்றால் !
புவி வாழ்வில் அன்பை பற்றிடடா!!
-- தமிழ் ராஜா

ஒரு மாரி நோக்காடு

சோலைக்கிளி
இருட்டுது !
இனிப்பெய்யும் !
பெய்யத்தானே வேண்டும் !
ஒரு பாரிய மழை !
பயிர் பச்சை தழைக்க... !
பொச்சுப் பொச்செனக் காற்று !
தலைமயிரை பொசுக்கிவிட்டது போல !
இடைக்கிடை !
ஓலையிலே உரசல் !
அம்மி நகரும் !
இல்லாட்டி !
மலடு தட்டிப்போன வானம் !
முக்கி முக்கி !
இடி முழக்கத்தை ஈனாது !
அதுதானே !
எத்தனை நாளைக்கு அருங்கோடை !
வெறும் உரலைப் போட்டு இடித்தாலும் !
அவலைக் காணலாம் !
ஒரு பாட்டம் !
மழையைக் காண்பதுதான் !
குருடனுக்குக் கட்டெறும்பு போலென்ற !
கதை மாறி !
மழை பெய்யும் !
இந்த மாதி£¤ மின்னல் வெட்டினால் !
ஒரு வானம் என்ன !
ஏழு வானமும் பாளமாய்ப் பிளந்து !
கடலைக் கொண்டுவந்து ஊற்றும் !
பார் !
நெருப்பில் !
தீக்குச்சி கொளுத்துவதைப் போல !
மின்னல் !
எனக்குத் தெரியும்!
ஒரு காலத்தைப் புரட்டுவது !
அவ்வளவு இலகல்ல !
இங்கே கோடை !
புரட்டப் புடுகிறது !
வா குடையைத் தேடுவோம் !
!
--- ”காகம் கலைத்த கனவு” தொகுப்பிலிருந்து

அம்மா! அம்மா! அம்மா

தமிழ் ராஜா
ரத்தத்தில் நனைந்து வந்த!
என்னை முத்தத்தால் நனைத்த !
உன் இதழ்களில்!
முதல் முறை என் பெயரை!
எப்பொழுது உச்சரித்தாயோ!
அன்றிலிருந்து இன்று வரை !
அந்த குரலில் கலந்து வரும்!
உரிமையை உணர் வை !
வேறு எந்த குரலிலும் !
நான் உணர்ந்ததில்லை!
உன் விரல் பட்ட உணவில்!
தான் நான் உயிர் வளர்த்தேன்!
உன் இதழ் சிந்திய வார்த்தையை!
உச்சரித்துத் தான் மொழி பழகினேன்!
உன் சுவாசத்தில் கலந்த காற்றை !
சுவாசித்து தான் வாழ்ந்திருக்கேன்!
முதல் நடந்திடும் நான் !
விழுந்தது உன் மடியில்!
முதல் மொழியினை நான்!
உணர்ந்தது உன் இதழில்!
முதல் கலங்கிடும் விழிகளை!
துடைத்தது உன் உடையில்!
முதல் சிரிப்பினை பழகியது!
உன் முகத்தில் !
கண்ணாடிப் பார்க்கும் வரை!
என் அத்தனை முகங்களும் நீயே !
உன் முன்னாடி இருப்பதை விட!
வேறு இன்பமில்லை தாயே!
என் நிர்வானத்தை முதலில்!
களைத்த நீயே!
நீல வானத்தையும் காட்டி!
வளர்த்தாய் தாயே!
மூச்சு விடும் இடைவெளியிலும் !
உன் அன்பு எனை !
விட்டு விலகியதில்லை!
நீ காட்டி வளர்த்த !
ஒவ்வொரு பொருளும்!
இனி வேறெங்கும் காண்பதற்கில்லை!
கையெடுத்து நீ கும்பிடச் !
சொன்ன தெய்வமோ !
எனக்கு தலை சீவிவிட்டதில்லை!
நானும் பொய்யுரைத்தப் பொழுதும் !
கூட நீ எனை அடித்ததில்லையே!
குளிப்பாட்டி விடும் உன் கைகளில் !
அடி வாங்கஅடம் பிடிப்பேன்!
உன்னிடம் அடி வாங்காமல் !
உன்னன்பின் ஆழம் புரிவதில்லை!
என்பேன்!
கிறுக்கித் தான் அம்மா!
உன் கைகளை பிடித்து!
எழுத துவங்கினேன் !
அன்பை சுருக்கி வாழும்!
இதயங்களின் நடுவே!
உறவுகளை பெருக்கி வாழும் !
உன்னுடைய நேசத்தில் நெகிழ்ந்தேன்!
அணுஅணுவாய் என் வளர்ச்சியை!
ரசிப்பாய் ஒரு கைப்பிடி சோறு!
குறைந்தாலும் உள்ளம் துடிப்பாய் !
என்றைக்கும் உன் சேலை நுனி தான் !
என்னுடைய கை குட்டை !
உன் முகமே நான் முகம் பார்த்து !
தலை சீவும் கண்ணாடி!
உன் வாயில் புத்திசாலி என்று கேட்பதை!
விட முட்டாள் என்று செல்லமாக கேட்பதையே !
நான் விரும்புகிறேன் தாயே!
சட்டை பையில் கை விடும் பொழுதெல்லாம் !
எனக்கு தெரியாமல் நீ !
வைத்த ஒரு ரூபா தலை நீட்டும் !
அந்த சுகம் இன்று எந்த !
ஆயிரம் லட்சங்களிலும் கிடைப்பதில்லை!
உன் விரல் நுனியின் சுவையை !
எந்த நட்சத்திர ஹோட்டலிலும் !
உணர்ந்ததில்லை!
உன் மடியின் சுகத்தை எந்த !
பஞ்சு மெத்தையும் தந்ததில்லை ......... அம்மா! !
சத்தியமாய் உன்னை போல் ஒரு பிரிவை!
இனி வேறு ஒருவரும் தரப் போவதில்லை!
தமிழ் ராஜா

திறந்து கிடக்கும் இரவின் கண்கள்

நிந்தவூர் ஷிப்லி
கனவுகள் நிரம்பி வழிய!
ஒளி வழியே!
நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கிறது!
பௌர்ணமி வானம்…….!
சலனம் மறந்து போன!
புற்தரைகளோடும்...!
கடல் அலைகளோடும்..!
துகள் சுமக்கும் மண்ணோடும்..!
இன்னும்!
பூமியில் வயிற்றில்!
ஒட்டிக்கொண்டிருக்கும் எல்லாவற்றோடும்...!
தூக்கம் மறந்து போன!
எனது கண்கள் பற்றி!
சப்தம் நிர்மூலமான இந்தக்கணம்!
என்னதான் சிந்தித்திருக்கும்...????!
மிதமான தென்றலோடு!
எங்கிருந்தோ வரும் நாயின் ஊளை கூட!
இந்த அர்த்த ராத்திரியை என் முன்னே அர்த்தமாக்கிக்கொள்கிறது...!
எத்தனை பேரின் நிர்வாணத்தை!
இந்தக்காரிருள்!
தன் பார்வைச்சிறகில்!
சுமந்திருக்கும்...?!
திறந்தே கிடக்கின்றன!
இரவின் கண்கள்......!
பின்னிரவின் மெல்லிழை வாயிலில்!
தூங்கிப்போனேன் நான்...!
அதன்பின்னும் பௌர்ணமி வானம்!
பேசிக்கொண்டேயிருந்திருக்கும்!
கதிரொளியொன்று!
ஏதோ ஒரு மண்ணின் முனைப்பரப்பை தீண்டியிருக்குமே...!
அதுவரை

சாத்திரம் கேட்க வாரீர்

த.சு.மணியம்
கைரேகை கால்ரேகை முகரேகை தனரேகை!
மையேதுமில்லாமல் மாமுனிகள் சொல்வரென!
பொய்யான விளம்பரத்தை புரிந்திடா எம்உறவுகளும்!
மெய்யெனவே நாளுமெண்ணி நீள் வரிசை நிற்குதங்கே.!
மளிகைக் கடைகளினால் வருகின்ற இலாபமுடன்!
வழியைத் தெரிந்துவைத்து வந்திறங்கும் சாத்திரிகள்!
பழியில் கிடைக்கின்ற பணத்தினிலும் பங்கு வைக்க!
இழிவுப் பிறவிகளாய் எம்மவரோ முன்னிலையில்.!
தன்விதியைத் தானறியா தவிக்கின்ற சாத்திரிகள்!
உன்விதியைச் சொல்வரென உன்மனமும் நம்புவதால்!
பின்நிலையைப் புரியாது பெரும் பணத்தை வீணடித்து!
என்பலனைக் கண்டுகொண்டாய் நின் அமைதி கிட்டியதா?!
இந்தியச் சந்தைகளில் இரண்டுன்றாம் மலிவாக!
அந்திமத்தை வரையறுக்கும் ஆட்கொல்லி எயிட்ஸ்நோயும்!
சிந்துகின்ற இடமனைத்தும் சிலிர்த்தெழும்பும் சாத்திரியும்!
முந்திப் பிறந்த பலர் செய்திட்ட தவப்பேறாம்.!
ஊருக்காய் நடத்துகின்ற ஊர்வலத்தில் பங்குபற்ற !
யாருக்கும் நேரமில்லை ஊர்; பெற்ற பாவமென்ன!
பார்மெச்சும் சாதகமாம் பார்ப்hதற்கோ விடுமுறையாம்!
பேர்மிக்க தமிழரெனப் பெருமையாய் பீற்றுகிறார்.!
!
-த.சு.மணியம்

குழப்பம்

ஜாவேத் அக்தர்
கோடி முகங்கள்!
அதன் பின்னே!
கோடி முகங்கள்!
இவை பாதையா!
முட்களின் கூடா!
பூமி மூடப் பட்டிருக்கிறது!
உடல்களால்!
எள் வைக்கவே இடமில்லை!
எங்கே வைப்பது காலை!
இதைப் பார்க்கும் போது!
நிற்குமிடத்திலேயே!
வேரூன்றி விடலாமென!
எண்ணுகிறேன்!
என்ன செய்ய முடியும்?!
எனக்குத் தெரியும்!
இங்கேயே நின்று விட்டாலும்!
பின்னாலிருக்கும் பெருங்கூட்டம்!
பாய்ந்து வந்து, அதன் பாதங்களால்!
என்னை பசையாக்கிவிடுமென்று!
அதனால், நடக்கிறேன்!
என் பாதத்தின் அடியிலிருக்கும்!
பரப்பில் மட்டும்!
யாரோ ஒருவரின் மார்பில்!
யாரோ ஒருவரின் புஜத்தில்!
யாரோ ஒருவரின் முகத்தில்!
நடந்தால் பிறரை!
மிதிக்கிறேன்!
நின்றால்!
மிதிக்கப் படுகிறேன்!
ஏ மனமே,!
பெருமைப்பட்டுக் கொள்வாயே!
உன் முடிவுகளுக்காய்!
அப்படியானால் சொல்:!
என்ன முடிவெடுத்துள்ளாய் இன்று!
தமிழில்: மதியழகன் சுப்பையா!
!
அம்பறாத்தூணி!
ஜாவேத் அக்தர்

அவநம்பிக்கையின் மேல் நம்பிக்கை

சேயோன் யாழ்வேந்தன்
வீட்டுக் கூரையினின்று !
காகம் கரைந்தால் !
விருந்து வருமென்று !
அம்மா சொல்வதை !
நான் நம்புவதேயில்லை !
இன்று ஞாயிற்றுக்கிழமை !
நீ வருவாய் என்ற !
நம்பிக்கை இருக்கிறது !
காகத்தின் மேல் ஏன் !
மூட நம்பிக்கை வைக்க வேண்டும்? !
பொழுது சாயச் சாய !
நம்பிக்கையும்... !
வேறு வழியறியாமல் !
வாசலில் காகத்துக்கு !
சோறு வைத்தேன் !
சோற்றைத் தின்ற காகம் !
கூரையில் அமர்ந்தது !
அமைதியாக !
எனது நம்பிக்கையைப் பொய்யாக்கி !
நீ என்னை ஏமாற்றிவிட்டதாக !
நினைக்கவில்லை !
எனது அவநம்பிக்கையைப் பொய்யாக்காமல் !
இந்தக் காகம்தான் என்னை ஏமாற்றிவிட்டது

வேர்களின் வியர்வைத் துளிகள்

சே. கார்த்திக் பாபு
கனிகளின் சுவைகளோ- கிளைகளுக்கு !
பாவம் வியர்வைத் துளிகளோ !
இந்த வேர்களுடையது !
கிளைகளின் கவலையோ !
கனிகள் மேல் இருக்க !
இந்த வேர்களின் !
வேதனையை யார் அறிவாரோ !
அரசியல்வதிகள் ஆசைகள் !
ஆட்சியின் மேல் இருக்க !
இந்த ஆதரவற்ற மக்களின் !
நிலையை யார் அறிவாரோ !
-சே. கார்த்திக் பாபு