தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நேசத்தை விழிநீரில் அழித்து

எம்.ரிஷான் ஷெரீப்
வீடு முழுவதிற்குமான!
மகிழ்ச்சியின் ஆரவாரத்தினை!
ஒரு புகைப்படம் கொண்டுவந்தது ;!
இதைப் போலப்!
பேருவகையொன்றைத் தவிர்த்து!
நிராகரிப்பின் பெருவலியை!
அவள் அவனுக்குத் தரவிரும்பவில்லை !!
!
அவளது வீடு வளர்கிறதா என்ன ?!
அவனது காதலை ஏற்க மறுத்து!
உள்ளுக்குள் புதைந்து!
மனம் குறுகி நின்றவேளை!
குறுகுறுப்பாகப் பார்த்து!
குறுகிச் சிறுத்த அதே வீடு - இன்று!
சொந்தங்களின் கிண்டல்களுக்குத்!
துள்ளிக்குதித்து ஓடும் போதெல்லாம்!
இத்தனை காலமும்!
ஒளித்து வைத்திருந்த!
நீண்ட புதுப்புதுப் பாதைகளை!
அகன்று விரிக்கிறது !!
!
சாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள்,!
வீட்டிற்கான பழம்பெரும் கலாச்சாரங்கள்!
அவளது கரம்பிடித்து!
இறுக்க நெருக்குகையில்,!
வெட்கத்தைப் போர்த்திய சாலைவழியே!
அவனது காதலைப் பாடிச்செல்வாளென!
அவனெப்படி எண்ணலாம் ?!
!
சமுத்திரங்கள் பிரித்த!
பெருங்கண்டங்களிரண்டில்!
நீந்தத் தெரியாமல் அவன்களும்!
நீர் வற்றுமென அவள்களும்!
பார்த்தவாறு காத்திருக்கையில் ,!
காதலும் , நேசங்களும்!
அவன்களுக்குள்ளேயே!
புதையுண்டு போகட்டும் - அவ்வாறே!
அவள்களது நிலவெரிந்த!
நடுநிசிகள் கண்ணீரால் நனையட்டும் !!
!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை

உணவு

கீதா ரங்கராஜன்
குத்தி வைத்த நெல்லிலே!
கிடைத்த ஆழாக்கு அரிசியும்!
உலையில தான் கொதிக்குது!
குச்சு வீட்டு குடிசையில்!
கடைந்தெடுத்த வெண்ணெயில்!
செய்த பருப்பு பாயசம்!
ஊரு முழுக்க மணக்குது!
மச்சு வீட்டு மாடியில்!
ஆக்கி வைத்த சோற்றையே !
எட்டு பாகம் ஆக்கிட!
எத்தனம் தான் நடக்குது!
குச்சு வீட்டு குடிசையில்!
பத்து வகை பட்சனம்!
வயிற்றுக்குள்ளெ ரொப்பிட!
பிரயத்தனம் தான் நடக்குது!
மச்சு வீட்டு மாடியில்!
ஆழாக்கு சோறுமே!
அரை நொடியில் மறைந்திட!
ஈரத் துண்டும் காயுதே!
ஏழை மக்கள் வயிற்றினில்!
செய்த பாதி பண்டத்தை!
உண்ண யாரும் இல்லையே!
வீனாக கிடக்குதே!
தெரு ஓர குப்பைத்தொட்டியில்!
அரை வயிற்று கஞ்சி தான்!
குடித்திருந்த போதிலும்!
ஆனந்தமாய் தூக்கமும்!
அரை நொடியில் வந்ததே!
பலகாரம் பல உண்டு!
வயிறடைத்து போனதால்!
பஞ்சு மெத்தை சுகமிருந்தும்!
உறங்க முடியவில்லையே !
-- கீதா ரங்கராஜன்

நீளும் இகற்போர்

சக்தி
சிநேகத்தின் வேர்கள் !
கருகுவதை கண்டு!
உயிர்ப்பின் தாளலயம்!
ஸ்வரம் தப்பிடும்...!
நிகழ்கால நிஜத்திற்கும்!
இறந்தகால நிழலிற்கும்!
நடுவே மனம் !
வெகுவாய் அலைப்புறும்....!
பொய் என தெரிந்தும்!
மெய் அன்பின் வாசனையை!
விரும்பும்....!
இனம்புரியா ஏதோ ஒரு !
உணர்விழைநெய்யப்படுவதும்!
நெய்யப்பட்டஅம்மாயத்திரை !
சிதறடிக்கபடுவதுமாய்!
நீளும் இகற்போரில்!
என் நெஞ்சம் துவளும்

மெழுகுவர்த்தி

கண்டணூர் சசிகுமார்
செத்திடுவோம்!
என தெரிந்தும்!
உன்னை!
தொட்டு விடத் துடிக்கும்!
விட்டில்கள்!
எத்தனை எத்தனை!!!
பார்க்கப்!
பனிக்கட்டியாய்!
தெரிந்தாலும்!
பகலவனின்!
பனிமலரே!
எச்சத்தின் மிச்சமே..!
முன்பு!
இரவெல்லாம்!
கண்விழித்தது நான்.!
கலங்கியதோ நீ…!
நீ மட்டும்!
இல்லையென்றால்!
என் வாழ்வு!
இருளாவே இருந்திருக்கும்!
விலாசமின்றி போயிருக்கும்!
கவிதை; கண்டனூர் சசிகுமார்

சாம்பல் நிறத்து தேவதை

தொட்டராயசுவாமி.அ, கோவை
இதயக்கூட்டில்!
உன்னை வைத்தேன்!
தினமும் அதிலே!
சுவாசம் செய்தேன்!
வழிகள் எங்கும்!
வழியை பதித்தேன்!
பனியில் கூட!
சூட்டை உணர்ந்தேன்!
எந்தன் ஜீவனே!!
வரங்கள் வாங்க!
சாபம் சுமந்தேன்!
வாழ்க்கை வாழ!
உயிரை துரந்தேன்!
பயணம் நூறு!
கால்கள் கண்டும்!
சேரும் இடம்!
தெரியவில்லையே!
எந்தன் கண்மனி!!
நீ!
காதல் தீயை!
கண்ணில் வைத்து!
காமன் அம்பை!
நெஞ்சில் தைத்தாய்!
ரோஜாக்கூட்டம்!
நான் வளர்க்க!
முள்ளை நீயும்!
சூடிக்கொண்டாய்!
உன் கண்துடைக்க!
என் கைகள் இருந்தும்!
இமைகளுக்குள்ளே!
ஏன் தேக்கிக்கொண்டாய்!
கண்ணீரை!
சகியே!!
*!
நம் தனிமையில்!
நீ எதையெல்லாம்!
என்னிடம் சில்மிசமாய்!
செய்வாயோ,!
அவையெல்லாம்!
அறியாதவனாய்!
இருந்து, என்னிடம்!
கற்றுக்கொள்வாயே!
திருடா!!
சரி போ…!
நீ கொடுத்தாலென்ன?!
நான் கொடுத்தாலென்ன?!
நமக்கு தேவை!
ஒற்றை முத்தம்தானே!!
*!
மேல் கால்வைத்து!
கடந்து சென்ற!
பலரில் !
சுவடுகளை மட்டும்!
விட்டுச் சென்றவள்!
நீ!!
*!
!
நீ என்னோடு இல்லாத!
ஒவ்வொரு மணித்துளியையும்!
சேமித்து வைத்திருக்கின்றேன்!
அந்த நிமிடங்கள்!
யுகங்களானாலும்!
காத்திருப்பேன்!
நான்!
நீ அனுப்புவதாக!
சொல்லிச்சென்ற!
ஈரமுத்தம் பதித்த!
கடிதத்திற்காக…!
*!
!
நான் தெரிந்தே!
காலினை மிதித்து!
தொட்டு கும்பிடும்!
வேளைகளிலெல்லாம்!
கால்களை ஒழித்துக்கொள்கிறாய்!
சேலைகளுக்குள்!
இன்றுவரை!
காணமுடியவில்லையடி!
தேவதையே உன்!
கால்களை..!
*!
!
எது புதைந்தது!
என்று தெரியவில்லை!
மனசெல்லாம்!
வேர்பிடித்திருக்கின்றது…!
பிடிங்கி எறிய!
மனமில்லை என்றாலும்!
நீரூற்றி வளர்க்க!
ஏனோ மறுக்கின்றது.. மனம்!!
இதயம் மார்பை விட்டு!
வெளியே துடிப்பது போல்!
அஞ்சி நடுங்குகின்றேன்..!
வானம் பிளந்து!
தலையில் வீழ்ந்திடுமோ!
என்று தேம்பி அ௯ழுகின்றேன்..!
திருவிழாக்கூட்டத்தின்!
நடுவினிலும், தனிமையில்!
தொலைந்துபோகின்றென்…!
ஆகாரம் கூட எனக்கு!
ஆதாரமற்று போனது..!
என் வாழ்க்கை!
நிமிடமுட்கள்!
நகர்ந்து நகர்ந்து!
காயங்களையே!
காலங்கலாக்கின…!
இதுவரை!
மற்றவர்களின்!
தேவைகளரிந்து!
செய்துவந்த!
உதவிகள் கூட!
செய்ய மனமில்லாமல்!
காரணங்களை தேடுகின்றது மூளை..!
நான் பேசுவதை!
என் காதுகள்!
மட்டுமே கேட்கின்றது!
மொழியினை உமையாக்கி…!
தூரத்து அருகினில்!
தொலைந்துபோகின்றன!
அருகினில் உள்ளவைகள்..!
நான் எதைத்தொலைத்துவிட்டேன்!
என்று தெரியாதபோதும்!
தேடல் எனக்கு பிடித்திருக்கின்றது..!
ஒற்றை நீர்த்துளியாக இருந்தாலும்!
மழையெனப் பெய்துவிடுகின்றது!
என்னுள் …!
இதுவரை!
உண்மை மட்டுமே!
பேசியவள் இல்லை என்றாலும்!
பொய் சொல்வது!
பாவமாகத் தெரிவதில்லை..!
விட்டில் பூச்சியாக!
ஒளியில் அகப்பட்டாயே என்று!
உள்ளுணர்வு சொன்னாலும்!
இந்த ஒளியின் வீச்சிலிருந்து!
விளகிக்கொள்ள மனமில்லை எனக்கு…!
சூட்சம உலகினில்!
சூழ்நிலைக்கைதியாக!
ஒட்டிய அறையினில்!
அடைந்துக்கிடப்பது!
எதனால் என்று!
தெரியவில்லை என்றாலும்..!
அடைந்துக்கிடப்பது!
பிடித்திருக்கின்றது…!
என்னுள் வேர்பிடித்த!
ஏதோ ஒன்றின் ஆணிவேரில்,!
ஆதாரமாக இருக்கும்!
ஏதோ ஒன்றினை!
கண்டுகொள்ள நினைத்தாலும்!
கண்ணீர்த்துளிகளையே!
கன்னங்களில் பாய்சுகிறது!
என் கண்கள்..!
இப்போதும்!
அந்த ஆணிவேர்!
மற்றுமொரு!
சல்லிவேரினை!
முளைந்தெடுத்திருக்கும்!
இத்தருணத்தில்…..!
*!
நீ!
என்ன நிரங்களின்!
மகளா?!
நீ அரைந்த!
என் கனனத்தில்!
உன் கை வண்ணம்.!
*!
வண்ணங்கள்!
போதவில்லை என்றா!
வானவில்லில்!
உன் வண்ணம்!
மேகங்கள்!
இல்லையென்றா!
உன் கார்கூந்தல்!
வானில்!
நவமணிகள்!
நாட்டிலில்லை என்றா!
கண்மணிகள்!
உன் உடம்பில்!
தென்றலுக்கு!
குளிர்ச்சியூட்டவா!
வெளிவிடுகின்றாய்!
உன் சுவாசங்களை!
பூவினங்களுக்கு!
மோச்சம்க் கிட்டவா!
நீ தலைவாரி!
பூச்சூடினாய்!
நட்த்திரங்கள்!
ஒளிபெறவா!
நொடிப்பொழுதும்!
கண்சிமிட்டுகிறாய்!
அதிசயங்களில்!
இடம் பெறவா!
நடைபாதையில்!
சுவடுகளை விட்டுவிடுகிறாய்!
பெண்னினத்தில்!
அழகி இல்லையென்றா!
நீ உன்னை!
படைத்துக்கொண்டாய்!
எப்படி முடிப்பதென்று அரியாமல்!
இப்படியே முடித்துவிடுகின்றேன்!
நான்!
கவிதை எழுதி!
கவிஞனாகியதற்கு!
உனக்கு!
நன்றி.!
*!
!
என்னுள்!
உனக்காக!
காத்துக்கிடக்கும்!
தருணங்களில்!
எல்லாம்!
சிறுவயதில் தட்டாம்பூச்சி!
பிடித்த அனுபவங்களே!
ஆழுமைசெய்கின்றன!
*!
!
அந்ந மழைக்கால!
சந்திப்புக்கு பின்!
ஒவ்வொரு மழைத்துளியும்!
உன் நினைவுகளில்!
என்னை!
வானத்திலிருந்து!
விழச்செய்கிறது.!
*!
நீ ஒற்றை எழுத்தாக!
இருந்தாலும்!
என்னால் வாக்கியமாகதான்!
வாசிக்க முடிகிறது!
இது எதனால்? என்று!
புரியாத வேளையின்!
தனிமையும்!
புத்தகமாகத்தான்!
தெரிகின்றது.!
*!
!
உனக்காக!
காத்துகிடக்கின்றேன்!
அதே சாலையோர!
இருக்கையில்!
இன்றும்!
பூத்திருக்கின்றது!
எனக்கு பின்னால்!
பூமரம்.!
*!
கல்லரை முன்!
கண்ணீர் சிந்தி!
கண்துடைக்க!
என்னை எழுப்பிவிடாதே!
உன்!
கருவறையில்!
ஜனனிக்க வேண்டும்!
நான்!!
-தொட்டராயசுவாமி.அ !
கோவை

அன்பானவனே

புஸ்பா கிறிஸ்ரி
ரோஜாத் தோட்டத்து !
ராஜ மகனே! !
நீயோ தொழுவத்தில் !
தோன்றிய !
தெய்வ குமாரன். !
பிதாவின் மகன் !
மலைப்பிரசங்கத்தில் !
மக்களை நீ தேடவில்லை !
உன் மனத்தைத் தேற்றினாய் !
உன் பிதாவின் திட்டத்தில் !
திட்டவட்டமாய் பணிசெய்தாய் !
இரத்தம், அத்தராய் மணக்க !
வியர்வை பன்னீராய் மணக்க !
முண்முடி சூட்டி உன்னை !
தண்டித்தனர் யூதர்கள்.. !
சிலுவை கூட சிந்தித்தது !
உன்னைத் தன் சிரசிலேற்ற.. !
அஸ்தமனத்துச் சூரியன் முன் !
நிஸ்டூர நாடகம் !
அரங்கேற்றம் கண்டதும் ஏனோ? !
-புஷ்பா கிறிஸ்ரி

பந்துக்களில்லாப் பந்துகள்

இமாம்.கவுஸ் மொய்தீன்
பந்துக்களில்லாப் பந்துகள்!!!
------------------------------!
விலை போகும்!
வரையில் மட்டுமே!
பந்துகட்கு!
மதிப்பு மரியாதை!
அலங்காரம்!
கௌரவம் எல்லாம்!!
ஒன்றைப் போலின்றி!
ஒவ்வொன்றுக்கும்!
விளையாட்டுகளுக் கொப்பத்!
தனித்தனி !
ஆர விட்ட எடை அளவைகள்!
தோல் ரப்பர் பிளாஸ்டிக் எனத்!
தனித்தனி தன்மைகள்!!
வகை வகையாய் !
விளையாட்டுக்கள்!
அவற்றின் ஆளுமையில்!
திறமை தந்திரம் உக்தி!
பலம் கொண்ட வீரர்களுக்கு!
வெற்றிச் சான்றிதழ்கள்!
கோப்பைகள் பரிசுகள்!
பணமுடிப்புகள்!
பாராட்டுக்கள்!!
ஊடகப் ஒளிபரப்பும்!
நேரடிப் பார்வையாளர்கட்கு!
காட்சியாய் இருந்ததும்!
மட்டுமே!
அவை கண்ட !
சுகம் சொர்க்கம்!!
உபயோகத்தில் வந்து !
அடி உதை பட்டு!
கிழிந்து உருகுலைந்து!
சின்னா பின்னமான!
பந்துகட்குக் கிடைத்த!
கௌரவம்!
குப்பைமேடுகள்!!
'என்ன மனிதரிவர்?!
இருந்தவரையில்!
பயன்படுத்திக் கொண்டு!
குப்பையில் எறிதல் தான்!
மனிதப் பண்போ?'!
அலுத்துக் கொண்ட பந்துக்கு!
குப்பை மேடு கூறியது!
'ஆட்சி அதிகாரம்!
அரசியல் செல்வாக்கு எனும்!
விளாயாட்டுக்களில்!
உம்மைக் காட்டிலும்!
மிகையாய்ச் சிதைந்தவர்!
மனிதரில் தான் பற்பலர்'!!
!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

பெண்பார்க்கும் படலம்

ரா.கிரிஷ்
ஆண்களுக்கும் தான் !
வேதனை பெண்பார்க்கும் படலம்... !
காலையில் எழுந்து மீசைதிருத்தி !
முகம்வழித்து !
துணி தேய்த்து !
அலங்கரித்து பரிட்சைக்கு செல்லும் புது மாணவனின் !
மனோபாவத்துடன் !
பெண் பார்க்க போனேன்.. !
ஆட்டோகாரனிடம் பேரம் பேசி !
தேய்த்த துணி கசங்காமல் !
உடலை உள்ளே திணித்து !
இறங்கியவுடன் தலை சரி செய்து !
பெண் வீட்டில் நுழைந்தால்.. !
முன்னமே புகைப்படம் அனுப்பியும் !
பெண்ணின் உறவினர் கேட்பார் !
இதில் யார் பையன்? !
கூச்சமாய் கொஞ்சம் தெளிந்து !
இருக்கையில் அமர்ந்ததும் !
பெண்ணின் அப்பா ஆரம்பிப்பார் !
பையனுக்கு எங்கே வேலை? !
என்ன சம்பளம்? !
என்ன படித்திருக்கிறான்? !
கேள்விகள்... கேள்விகள்.... !
இவையெல்லாம் முடிந்து !
பெண் வருவாள்.... !
மற்றவர் நம்மை கவனிக்கிறார்கள் !
என்ற கூச்சத்துடன் ஒரு படப்படப்புடன் இருக்கையில் !
பெண் வந்து சென்றிருப்பாள் !
சரியாக பார்க்கவில்லையோ.... !
பெண்ணிடம் ஏதாவது பேச !
வேண்டும் இல்லையெனில் ஊமை என்று !
ஆகிவிடும் நம் நிலைமை !
அதற்காய் அசட்டுதனமாய் சில கேள்விகள் கேட்டதும் !
முடிவுக்கு வரும் பெண்பார்க்கும் படலம் !
வெளியே வந்ததும் !
பெண் கொஞ்சம் உயரம் கம்மி தான் !
என் அம்மா.. !
பெண்ணின் அப்பா சரியாக பேசவில்லை !
என் அப்பா.. !
பெண்ணின் முடி நீளமில்லை !
என் தங்கை.. !
ம்.......... !
அடுத்த வாரம் எந்த வீடோ? !
எங்களுக்கும் வேதனை தான் !
பெண்பார்க்கும் படலம்

பொங்கி வருகுது வியாபாரக் காவிரி

ஜெ.நம்பிராஜன்
உலகத் தொலைக்காட்சிகளில்!
முதல் முறையாக!
தமிழ்த் திரையுலகினரின்!
மாபெரும் போராட்டம்!
நேரடி ஒளிபரப்பு!
இந்நிகழ்ச்சியை வழங்குவோர்!
மைசூர் சேண்டல் சோப்!
அதே நிறுவனத்தின்!
கன்னட அலைவரிசையில்...!
நம்ம கன்னட மக்களுகாகி!
நம்ம கன்னட நட்சத்திரகளு!
மகா ஓராட்டா!
இ காரிகிரமமு நிமக்கே கொடவரு!
சென்னை மூவர்ஸ் & பேக்கர்ஸ்!
-ஜெ.நம்பிராஜன்!
மொழிபெயர்ப்பு:!
ஓராட்டா - போராட்டம்!
இ காரிகிரமமு -இந்நிகழ்ச்சியை!
நிமக்கே- உங்களுக்கு!
கொடவரு - வழங்குபவர்

தை பிறந்தால் வழி பிறக்கும்

எதிக்கா
கனத்துப் போன இதயம் !
மெல்ல இளகியது !
புத்துணர்வோடு !
காத்திருந்தோம் !
இப் புத்தாண்டின் !
வருகைக்காய் !
தை பிறந்தால் வழிபிறக்கும் !
வழமைபோல் மீண்டும் !
நெஞ்சில் ஒரு ஆதங்கம் !
பொங்கலோடு பொங்கலாய் !
இனிவரும் ஆண்டுகளும் !
பொங்கிடட்டும் !
அஞ்சிப் பயந்து !
அடங்கி ஒடுங்கிப் !
போன தமிழினமும் !
பொங்கட்டும் !
பொங்கல் பானையின் சூடு !
ஆறும் முன்னே !
பொங்கியெழும் !
மக்கள் படை !
நல்லதொரு முடிவைக் காணட்டும் !
கண்ணீரை மட்டுமே !
கண்ட கண்கள் எல்லாம் - அக் !
கண்ணீரிலும் ஒரு ஆனந்தத்தைக் !
காணட்டும் !
இவ்வாண்டின் !
நிறைவின் முன் !
தமிழ் அன்னையின் !
பிரசவம் !
சுகப் பிரசவம் ஆகட்டும் !
தமிழீழம் பிறந்ததென்று !
தமிழ்ழினம் !
ஆனந்தகக் கூத்தாடட்டும்... !
- - எதிக்கா