தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கனாக்கண்டேன் தோழி

தமிழ்ஹாசன்
மொட்டைமாடி நள்ளிரவில்!
யாருமில்லா வேளையில்!
முற்றத்து நிலாவுடன்!
நீயும் நானும் மட்டும்.!
கும்மிருட்டில்!
குட்டைப் பாவாடையும்!
சட்டைப் பையனுமாய் நீ..!!
நடு இரவில்!
நித்திரை கலைந்து!
நிராயுதபாணியாய்!
நிற்கும் நான்.!
இரவில் கூட!
பகலாய் இருக்கிறாய்!
கொஞ்சம் நிலவுக்கு!
உன் அழகை!
இரவல் கொடு!
பகலிலும் வந்து போகட்டும்..!!
இரவு முடியும் வேளையில்!
விடியலைப் பற்றி!
விவாதித்துக் கொண்டோம்!
நிலவு மறையும் நேரம்!
நித்திரைக் கனவை!
பகிர்ந்து கொண்டோம்!
மன அமைதி என்றுரைத்து!
மக்கள் அமைதி!
வேண்டிக் கொண்டோம்!
விடியலைத் தேடும்!
பாதையில் நம்!
காலடித்தடங்கள்.!
என் கரம்பிடித்து!
நடைபயிலும் ஓர்!
கைக்குழந்தையாய் நீ..!!
விரல் பிடித்த நேரம்!
விண்ணில் நடப்பது போன்ற!
உணர்வு என்னுள்.!
உண்மைதான்!
நீ என் வசமிருந்தால்!
வானம் கூட நான்!
தொட்டு விடும் தூரம்தான்...!
நடந்து நடந்து!
மூலையில் முடங்கிக் கொண்டாய்!
முடியாதென்று கூறி!
மூச்சிரைத்தாய்.!
மீண்டும் நடக்கத்!
தயாரானோம்!
என் இரு கால்களில்..!!
ஒற்றை நிழல்!
நிழலில் நான்!
என்னில் நீ...!
பூவும் பெண்ணும்!
ஒன்றென்பதை!
உணர்ந்தேன்!
பெண் ஒருபோதும்!
பாரமில்லையென்பதை!
உன்னால் அறிந்தேன்!
என் இரு கரங்களில்!
காகிதப் பூவாய் நீ...!!
இரவைக் கடந்தும்!
நடந்து கொண்டிருந்தோம்!
எங்கோ விடியப் போகிற!
விடியலைத் தேடி.!
விடியலும் வந்தது!
என் இதயத்தின்!
இடப்பக்கத்தில்!
இனம் புரியாத!
வலியும் வந்தது.!
நினைவில் நீ!
நின்றதைக் கண்டு!
மஞ்சம் செழித்தது!
நிஜத்தில் நீ!
இல்லையென்று!
நெஞ்சம் வலித்தது.!
எங்கோ இருக்கிறாய்!
என்றும் மாறாத!
அதே அன்புடன்!
இன்றும் என்னுள்!
அன்று பார்த்த அதே!
அன்புத் தோழியாய்

இந்த மெல்லிய இரவில்

நிந்தவூர் ஷிப்லி
தூக்கம் இருண்டுபோன!
இந்த மெல்லிய இரவில்!
விழித்திருக்கும் என்!
உணர்வுகளைச்சுட்;டி!
எதைப்பற்றி நான்!
பாடப்போகிறேன்…?!
பாசம், மனசு, நட்பு!
எல்லாமே பொய்யாகிவிட்ட!
வாழ்க்கையை இனியும்!
வாழ்ந்து எதை!
சாதிக்கப்போகிறது!
எனது எதிர்காலம்..!
வலிக்கிறது!
என் விரல்களும் இதயமும்..!
கருகிப்போன கனவுகளை!
மீண்டும் யாசிக்கிறது!
என் கண்கள்..!
உருகிப்போன நினைவுகளை!
மீண்டும் தாகிக்கிறது!
என் கணங்கள்…!
வலிகளில் நிறைந்து போன!
என் விழிகளைப்பற்றி!
ரணங்களில் புதைந்து போன!
என் ஆத்மார்த்தம் பற்றி!
துயரப்பாடல்கள் உச்சரிக்கும்!
என் பேனா பற்றி!
காயங்களின் சுவடுகளை ஏந்தி நிற்கும்!
என் பாவப்பட்ட இதயம் பற்றி!
இனிப்பேச யாருமில்லையா…?!
உலுக்கி எடுக்கும்!
அதிர்வுகளைத்தாங்கி!
வாழ்தல் மீதான பயணம்!
நீள்வது அத்தனை எளிதில்லை!
இனியும் என்ன இருக்கிறது?!
சேரத்து வைத்த ஆசைகள்!
அநாதையான பின்பும!
நம்பியிருந்த உறவுகள்!
சுக்கு நு}றான பின்பும்!
தேக்கி வைத்த நம்பிக்கை!
வேரிழந்த பின்பும்!
இனியும் என்ன இருக்கிறது?!
காலியாகிப்போன பாசப்பைகளில்!
இனி நான் இடப்போவதில்லை!
சில்லறை மனிதர்களை..!
எல்லா இதயங்களிலும்!
போர்வைகள்..!
எல்லா முகங்களிலும!
முகமூடிகள்..!
எல்லா புன்னகைகளிலும்!
விஷங்கள்..!
எல்லா பார்வைகளிலும்!
வக்கிரங்கள்..!
உறவென்னும் தேசத்தில்!
அகதியாக்கப்பட்டவன் நான்!
மனிதர்களைத்தேடிய!
என் நித்திய பயணத்தில்!
எப்போடு நிகழும்!
திடீர் திருப்பம்?!
யாரையும் குற்றம் சாட்டவில்லை!
காரணம் முதல் குற்றவாளி!
நான்தானே…?!
தூக்கம் இருண்டுபோன!
இந்த மெல்லிய இரவில்!
விழித்திருக்கும் என்!
உணர்வுகளைச்சுட்;டி!
இன்னும்!
எதைப்பற்றி நான்!
பாடப்போகிறேன்…?!
ஆக்கம்:-!
நிந்தவுர் ஷிப்லி!
தென்கிழக்குப்பல்கலை!
இலங்கை!
(0094)0716035903

குழந்தை தொழிலாளி

அருண்மொழி தேவன்
எனக்குமுன் சாப்பிட்டவர்!
மூடாமலேயே விட்டுசென்ற எச்சில்இலை!
அசிங்கமாய் தெரியவில்லை.!
எட்டுவயது சிறுவன்!
அதை எடுத்து எறியும்!
வரையில்

இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும்

வே .பத்மாவதி
அம்மா பதில் சொல்லு ...!
ஏழாம் மாசம் நானும் எட்டி கையால உதைச்சதால!
ஏதாவது கோவமா அம்மா உனக்கு ?!
கைய எடுத்து எங்கயோ எறிஞ்சிட்டு போச்சு நாயும்!
எச்சில் காக்கா அதையும் எடுத்து கொத்தும்போது!
இந்த பாப்பா நிலைமை பாத்து!
எரியாதா அம்மா உன் மனசு ?!
சின்னகாலால் நானும் சேர்த்து அடிச்சதுனால!
சொல்லாத கோவமா அம்மா உனக்கு ?!
சிகப்புமாறாப் பாதம் சின்னாபின்னம் ஆகி!
சாலையோர சைக்கிளில் மிதிபடும் பொது!
செல்லப் பாப்பா நிலைமை பார்த்து!
வலிக்கலையா அம்மா உன் மனசு ?!
ஒன்பதாம் மாசம் நானும் ஒருக்களிச்சு படுத்ததினால!
ஒருவேள கோவமா அம்மா உனக்கு ?!
ஒரு கண்ணை மட்டும் பருந்து தூக்கிட்டு போக!
ஓடிப்போயி நானும் அதை தேட!
உன்னோட பாப்பா நிலைமை பார்த்து!
ஒண்ணுமே தோணலியா அம்மா உனக்கு ?!
ஆவியா நான் வந்து!
அம்மானு கூப்பிட்டா!
அன்பா ஒரு முத்தம் குடுப்பியா அம்மா ??!
அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா!
அப்பா இருக்கிற வீட்டுல குழ்ந்தையா பொறக்கனும்!
அப்படியே தப்பா பொறந்தாலும்!
சிரமம் பார்க்காம ஆசிரமத்துல சேர்த்துடு அம்மா!
இந்த குப்பைத்தொட்டியில கொடூரமா சாக!
ரொம்ப பயமா இருக்கு மா

சுகம்

கோட்டை “பிரபு
கவி ஆக்கம்: கோட்டை “பிரபு !
ஆகா! !
இதில் தான் எத்தனை சுகம்! !
உள் நுழையம் போதே !
ஒரு பூரிப்பு !
திருப்பங்கள் யாவும் !
சிலிர்ப்புகளாய் !
வலம் இடமென !
திரும்ப திரும்ப !
ஆனால் !
தன் வலிமையை !
காட்ட இயலாத சலிப்பு! !
வலிமையை புகுத்தினாலோ !
தயங்காமல் எதிர்ப்பு எதிர்ப்படும் !
காலங்கள் பல கடந்தும் !
தொடர்கிறது இதன் பயணம் !
அன்றாட குளியலைப் போல !
அடுத்து இதுவும் வழக்கமாயிற்று! !
கோழி இறகாய் பயணமானது !
நவீன குச்சி முனைப் பஞ்சாகவும் தொடர்கிறது !
!
கவி ஆக்கம்: கோட்டை “பிரபு !
006581477688

மின்ன‌ல் க‌யிறுக‌ள்

ருத்ரா
நேற்று வரை ஒடக்கான் அடித்தவன்!
இன்று நான் ஒரு ஒடக்கான்.!
என்னை அடித்தது!
அவள் கூரிய விழிகள்.!
நாக்கில் தொட்டுக்கொண்டு!
தரையில் பம்பரம் குத்தினேன்.!
கயிறு என் கையில்.!
இன்று நான் தலையாட்டும் பம்பரம்.!
கயிறு!
அவள் வளையல் ஒலிகளில்.!
கோலிக்குண்டுகள் உருட்டி!
எத்தனை பேர் முட்டிகள்!
பெயர்த்தேன்.!
இன்று!
கண்ணீர் முட்டி!
கனவுகள் முட்டி!
அவ‌ள் நினைவுக‌ளில் மோதி!
ப‌ல‌த்த‌ காய‌ம்.!
அவ‌ள்!
பார்வையே விப‌த்து ஆகும்.!
அவ‌ள்!
பார்வையே பேண்டேஜ் போடும்.!
யார் கேட்டார்க‌ள்!
ப‌ம்ப‌ர‌மே இல்லாம‌ல்!
ப‌ம்ப‌ர‌ம் விடும்!
ப‌தினாறு வ‌யதின்!
இந்த‌ மின்ன‌ல் க‌யிறுக‌ளை?!

மனம் தளராதே

அஜந்தன் மயில்வாகனம்
செல்லும் வழியெங்கும் முட்கள் இருக்கலாம். !
சேற்றுச் சகதிக்குள் உறன்கவும் வரலாம். !
நீ! !
நடக்கும் பாதையெங்கும் நரிகள் வரலாம். !
நாரதர் பலர் உன்னை நளினம் செய்யாலாம். !
தோல்விகளே தொடர்கதையாய் தொடர்ந்து வரலாம்.!
காயங்காளால் காயம் கனமும் ஆகலாம். !
நீ! !
நம்பி இருந்தோர் நயவஞ்சகர் ஆகலாம். !
நாயே, என்றும் உன்னை நடு த்தெருவில் ஏசலாம். !
குறவர் கூட்டம் உன்னை குத்தி காட்டி பேசலாம். !
குறைகள் கண்டு உன்னை குரைத்தும் காட்டலாம். !
நீ! !
செய்யும் காரியங்கள் செய்மையற்றும் போகலாம். !
செஞ்சோற்றுக் கடன் செய்வாரற்றும் போகலாம். !
தந்தையே உன்னை தட்டிக் கழிக்கலாம். !
தாயும் உன்னை ஏட்டி உதைகலாம். !
நீ! !
கடக்கும் கடவையெங்கும் கற்கள் கிடக்கும். !
காண்பவை எல்லாம் கடினமாய்த்தோன்றலாம். !
சுற்றம் கூட சுயநலம் ஆகலாம். !
சுருதியில்லை ஏன்று சுடு சொல்லும் பேசலாம். !
நீ! !
சுமக்கும் சுமையே காலனும் ஆகலாம். !
காலமும் உனக்கு கணைகள் வீசலாம். !
பள்ளியை விட்டு தள்ளியும் வரலாம். !
பாதைகள் தோறும் பள்ளங்கள் இருக்காலாம். !
நீ! !
படிக்கும் படிப்பும் பயனற்றும் போகலாம். !
அடிமேல் அடிவாங்கி அனாதையும் ஆகலாம். !
நினைப்பவை யாவும் நிரந்தரமற்றும் போகலாம். !
நிழலே உன்னை நிந்தனை செய்யாலாம். !
நீ! !
நிற்கும் இடத்திலும் புதர்கள் தோன்றலாம். !
நிர்வாணம் தான் உன் ஆடையும் ஆகலாம். !
பார்க்கும் இடம் எங்கும் பருந்துகள் பறக்கலாம். !
பகலில் கூட பகலவன் மறையலாம். !
நீ! !
படு க்கும் படு க்கையும் முள்ளாய் மாறலாம். !
பஞ்சமே உந்தன் வாழ்கையாய் மாறலாம். !
நஞ்சு மனிதர்கள் உன்னை நகைத்தும் காட்டாலாம். !
பிஞ்சு மழலையும் நஞ்சைக் கக்கலாம். !
நீ! !
கற்றவை யாவும் கானல் ஆகலாம். !
கடக்க கடக்க கானகமே கணாலாம். !
இவையென்ன !
எவைவரினும் வரட்டு ம்..... !
ஆனால் !
மனம் தளராதே! !
!
-- அஜந்தன் மயில்வாகனம்

பன்னாட்டு மென்தளத்தில்

தறுதலையான்
அன்றைய வாரயிறுதி!
இரவும் அப்படித்தான் !
கழிந்திருந்தது....!
பெண்ணுரிமையென!
சராசரிகளுக்குத் தப்பி !
கண்ணாடிக் குடுவைகளில் !
மதுவூற்றிப் பகிரக் கேட்டிருந்த !
நானும்....!
ஆளுமைத்தனம் பயின்று!
குதிகால் செருப்பினடியில் !
சிகரெட்டுச்சாம்பல் !
தட்டி .... வேண்டாமெனச் !
சொல்லியிருந்த நீயும்....!
என்ன காரணமென்று !
தெரியாமலேயே.. !
பகிர்ந்து கொள்ளாமல் வைத்திருந்தோம்!
நம் காதலை....!
நம்மைச் சுற்றியிருந்த !
ஊர் எனப்படுவது !
நம்மைத் தவிர்த்து !
எல்லோரிடமும் சொல்லியிருந்தது !
நமக்குள் எதுவோ இதுவாம்

புலிவால் பிடித்தோமடா!

ஆர்.எஸ்.கலா, இலங்கை
வெளி நாட்டு வாழ்க்கை!
விவகாரம் நிறைந்ததடா..!
விட்டெறியும் காசை!
நோக்கி செல்லும் !
போது விட்டுச் செல்வது!
உறவை மட்டும் இல்லையடா..!
உணர்வு உணர்ச்சி ஆசை!
அதனுடன் சேர்த்து நாம்!
நம் நாடு உயிருடன் !
திரும்புவோம் என்ற நம்பிக்கை!
இத்தனையும் விட்டுச்சென்றால்!
கிடைப்பது வெளிநாட்டு!
வாழ்க்கை..!
வாழ்க்கை அது என்ன வாழ்கையடா!
வாய்திறந்து விவாதிக்க முடியாத!
ஓட்டமடா..!
உட்கார முடியாத உழைப்படா!
உறவுக்கு மடல் போட முடியாத!
பணிச்சுமையடா..!
விட்ட காசை எடுக்க வேண்டும்!
என்ற வேகமடா அடகு வைத்த!
பத்திரம் மீட்ட வேண்டும் என்ற!
இலட்சியமடா..!
கட்டிய மனைவியைக் கனவில்!
கட்டி அணைத்து பாசமான!
மகளுக்கு நினைவில் முத்தம்!
கொடுத்து காச்சி மூச்சி என்று!
கத்தும் சத்தங்களுடன் கண்!
மூடி தூங்கும் நிலைமையடா..!
இளமை ஆசைகளை பலியாக்கி!
இளமையை இரையாக்கி!
இன்பத்தைக் கொலை செய்து!
துன்பத்தில் துவண்டு எடுப்பது!
தான் வெளிநாட்டுப் பணமடா...!
விபத்து என்று ஒன்று நடந்து!
இறப்பை நோக்கினால் இறுதிக்!
கடமையும் நமக்கு சரிவரக் கிடைப்பது!
இல்லையடா..!
தொட்டு உடலை துடைக்க!
உறவுகள் பக்கம் இல்லையடா!
கொட்டி விடுவான் அரபி ஏதோ!
ஒரு திரவியத்தை மூடி விடுவான்!
பெட்டியை..!
போட்டு விடுவான் பெட்டியை!
பொதியோடு பொதியாக மாதங்கள்!
பல கடந்து நாடு வந்து சேரும் உடலடா..!
உடல் அடக்கம் இன்றி கடைமைக்!
காரியங்களும் கைவிடப்பட்டு!
உறவுகள் கவலையில் இருந்து!
விடுபட்ட பின்னே நம் உடல்!
கிடைப்பது திண்ணமடா..!
மனைவி மக்கள் புகைப்படம்!
பார்க்க ஆசை என்று அனுப்புங்கள்!
என்று கூறவும் தைரியம் இல்லையடா!
பாவிகள் சிலர் கையில் சிக்கினால்!
என் மனைவி மானம் புகையாக !
போகுமடா..!
ஊரார் கண்ணுக்கு தெரிவது!
எங்கள் ஊதியம்!
ஓட்டு வீடு கிடைத்தமையால்!
உறவுக்கு குதூகலம்!
உண்மை நிலவரத்தை மறைத்து!
உள்ளுக்குள் அழுது உடலை!
வருத்தியே வாழ்வது எங்கள்!
வெளி நாட்டு வாழ்க்கையடா..!
திணார் டாலர் ரியால்!
கொடுக்கும் வலி கொஞ்சம்!
இல்லையடா சொல்லவே வார்த்தை!
நிறையவே உள்ளதடா அதுக்கு!
எல்லையே இல்லையடா...!
கவிக்குயில் ஆர் எஸ் கலா!
இலங்கை தளவாய்!

நண்டூருது நரியூருது

ரசிகன்!, பாண்டிச்சேரி
மனித வர்க்கத்தின்!
மாமிச மனதை!
கலவரப்படுத்திக் கொண்டிருக்கக்கூடும்!
மூலையில் ஒரு காதலும்!
முடுக்கில் ஒரு காமமும்!!
எவனும் தப்பிப்பதாயில்லை...!
அவளிடத்தில்!
குற்றவாளியாய் சரணடைவதை விட!
வேறு பேறும் பெரிதில்லை...!
எவளும் சிக்குவதாயில்லை...!
அவனிடத்தில்!
காதலியாய் முன்மொழிவதை விட!
வேறு காரணி தேவையில்லை..!
காமமும் காதலும்!
ஒன்று கூடும்!
ஒரு வேதியியல் திருவிழா!!
நிலவின் மகரந்த வீச்சில்!
பூக்களின் விரிப்பில்!
அவள் மார்போடு!
அவன் ஊர்ந்து சாய்ந்தாட!
ஒரு மனிதன்!
காதல் என்கிறான்..!
ஒரு மனிதன்!
நண்டூருது நரியூருது என்கிறான்