அவநம்பிக்கையின் மேல் நம்பிக்கை - சேயோன் யாழ்வேந்தன்

Photo by engin akyurt on Unsplash

வீட்டுக் கூரையினின்று !
காகம் கரைந்தால் !
விருந்து வருமென்று !
அம்மா சொல்வதை !
நான் நம்புவதேயில்லை !
இன்று ஞாயிற்றுக்கிழமை !
நீ வருவாய் என்ற !
நம்பிக்கை இருக்கிறது !
காகத்தின் மேல் ஏன் !
மூட நம்பிக்கை வைக்க வேண்டும்? !
பொழுது சாயச் சாய !
நம்பிக்கையும்... !
வேறு வழியறியாமல் !
வாசலில் காகத்துக்கு !
சோறு வைத்தேன் !
சோற்றைத் தின்ற காகம் !
கூரையில் அமர்ந்தது !
அமைதியாக !
எனது நம்பிக்கையைப் பொய்யாக்கி !
நீ என்னை ஏமாற்றிவிட்டதாக !
நினைக்கவில்லை !
எனது அவநம்பிக்கையைப் பொய்யாக்காமல் !
இந்தக் காகம்தான் என்னை ஏமாற்றிவிட்டது
சேயோன் யாழ்வேந்தன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.