அன்பை பற்றிடடா - தமிழ் ராஜா

Photo by Hasan Almasi on Unsplash

நாலு பேரின் நடிப்பிலே!
நாடக மேறியது மேடையில்!
இன்று நாலாப் பக்கமும் நடிப்பிலே!
மேடையின்றி நாடகமே!
முறையோடு வாழ்பவர்க்கு!
முதுகுக்கு பின்னே கண் வேண்டாம்!
குறையை முறையாக்கிக் கொள்பவர்க்கு!
கால் பாதத்திலும் கண் வேண்டும் !
சாக்கடையும் சந்தன சாயம் பூசி!
சமுதாய வீதியில் வலம் வரவே!
வேசித் தொழிலும் நாசமாகும்!
இந்த வீண் கெட்ட நாட்டினிலே!
தாயும், தந்தையும் ரெண்டாகவே!
தாரங்கள் மகனின் மனதினிலே!
இந்த கோரங்கள் இங்கு நிலைத்திடவே!
பதிகள் கோர்ட்டின் வாசலிலே !
போலிகள் நிறைந்த சமூகத்திலே!
புன்னகை பொலிவு கடை வீதியிலே!
தாலிகள் சேலையின் மறைவினிலே!
சில வேசியும் பத்தினி வடிவினிலே!
தோழிகள் தொட்டில் சுமக்கையிலே!
கட்டின மனைவி மலடியாய் வீட்டினிலே!
பாவிகள் காவிகள் போர்வையிலே !
பரம்பொருளும் பாவியாய் வீதியிலே!
பெண்மையின் சாரம் நகைக்கையிலே!
பொம்மையும் தாய்மை அடையுதடா!!
ஆண்மை வேடம் தரிக்கையிலே!
இயந்திரம் தந்தை ஆனதடா!!
தூக்க மாத்திரை உண்டிடவே!
உனக்கு வாழ்க்கை தேவையா என்னிடடா!!
சொர்க்கம் ஒன்று உண்டென்றால் !
புவி வாழ்வில் அன்பை பற்றிடடா!!
-- தமிழ் ராஜா
தமிழ் ராஜா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.