தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

என்ன வேண்டும் உனக்கு?

இ.ஜேசுராஜ்
என்ன வேண்டும் உனக்கு? !
என்ன வேண்டும் !
எண்ணியவை முடிக்க? !
ஏன் தாமதம் ? !
எழு விழி !
எண்திசை நோக்கு !
எண்ணங்களை புடமிடு சிகரம்தனை !
எட்டிடவே ஓட்டமெடு ! !
அகண்ட உலகு !
ஆழ் கடல் !
உயரே வானம் !
உனக்கென்ன வேண்டும்? !
ஊன்றிட பாதத்திற்கா !
இடம் தேடுகிறாய்? நீ !
நிற்குமிடத்திற்கு கீழேயும் !
நிலம்தான் ! நீ !
தொடவேண்டியது உயரம்மட்டுமே! !
நிகழ்கால நிதர்சனம் !
நிலம்மட்டுமே நிற்பதற்காய்! !
உன் காலடியில் நிலம் !
பாதம் நகர்த்து புது !
பாதை கிடைக்கும் !
சிகரமும் எட்டும்! !
!
ஆக்கம் !
இ.ஜேசுராஜ் - கீரனூர்

ஈரக் கனாக்கள்!

எம்.ரிஷான் ஷெரீப்
ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும்!
நீர்ப்பாம்புகளசையும்!
தூறல் மழையிரவில் நிலவு!
ஒரு பாடலைத் தேடும்!
வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில்!
மூங்கில்கள் இசையமைக்கும்!
அப் பாடலின் வரிகளை!
முகில்கள் மொழிபெயர்க்கக் கூடும்!
ஆல விருட்சத்தின்!
பரந்த கிளைக் கூடுகளுக்குள்!
எந்தப் பட்சிகளின் உறக்கமோ!
கூரையின் விரிசல்கள் வழியே!
ஒழுகி வழிகின்றன!
கனாக்கள்!
நீர்ப்பாம்புகள் வௌவால்கள்!
இன்னபிறவற்றை!
வீட்டுக்குள் எடுத்துவரும் கனாக்கள்!
தூறல் மழையாகிச் சிதறுகின்றன!
ஆவியாகி!
பறவைகளோடு சகலமும் மௌனித்த இரவில்!
வெளியெங்கும்!

பேசும் மெளனம்

பட்டுக்கோட்டை தமிழ்மதி
எரிந்த விளக்கு!
எரிந்து போயிருக்கும்.!
குடிக்க வைத்திருந்த தண்ணீரை!
குடத்தை உடைத்து குடித்திருக்கும்!
குண்டுகள் .!
உங்கள்!
அங்கம் கிழிந்திருக்கிறது!
ஆடையாய்.!
தாலியின் தங்கமென்ன!
உங்கள் அங்கமும் உருகி!
ஈழமாய்தான் உருபெறும்.!
வீடிழந்து!
விளையும் காடிழந்து!
பிழைக்க அல்ல!
பிணங்களாய்தான்!
இடுகாடு நோக்கியா!
இடம்பெயர்ந்தீர்கள்?!
எந்தக் காலத்தில்!
இறந்திருக்கிறீர்கள் நீங்கள்?!
மண்ணுக்குளிருந்து எடுத்த!
மம்மிகளா நீங்கள்?!
பிரமேடுகளுக்குள்!
பெறப்பட்ட உடல்களா உங்களது?!
அப்படிதான் கிடக்கிறீர்கள்!
அடிப்பட்டு.!
ஆயிரமாயிர ஆண்டுகளுக்கும்!
அழியாத சாட்சிகள் நீங்கள்.!
குண்டு விழுந்த!
குடிசையின் சாம்பலில்!
ஒருமுகமாக!
ஒன்றாய் குவிக்கப்பட்ட!
முகங்கள்...!
பற்கள் தெரிய நீங்கள்!
சொல்லத்துடிக்கும்!
சொற்கள்தான் என்ன?!
எங்களுக்கு வேண்டும்!
எங்களுக்கு வேண்டும்!
எங்கள் தமிழீழம்!
எங்களுக்கு வேண்டும்!
என்பதுதானா?!
இன்னும் பேசும்!
எரிந்த உங்களின்!
மெளனம்.!
!
-பட்டுக்கோட்டை தமிழ்மதி !
------------------------------------------!
/சனவரி 31ம் தேதி இலங்கை அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில்!
மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள்!
தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள் _ சங்கதி!
இணையதளம்/

இதயத்தின் மெல்லிய அதிர்வுகள்

இளங்கோ
என் பிரிய அக்காவிற்கு,!
இன்றைய மகளிர்தினத்தில்!
எனக்கு எல்லாவுமாகி நின்ற!
உனக்கோர் மடல்வரைகின்றேன்!
அம்மாக்களை அதட்டியொடுக்கும்!
அப்பாக்களை அவதானித்தபடி..!
பெண்களின் எழுச்சி நாளிதென்று!
எவ்வாறு என்னாலெழுதமுடியும்?!
என்னோடு அன்பாய்!
பேசித்தி£¤ந்த தோழிகளை!
நான்கு சுவருக்குள் உட்காரவைத்து!
அவமானப்படுத்திய அகோரநாட்களை!
எவ்வாறு நான் மறப்பேன்?!
பெண்களின்!
உடல் வனப்புத்தாண்டி!
வியாபாரக்கவர்ச்சிகள் தவிர்த்து!
சதையும், கோளமுமாய் சூழ்ந்து!
துடிக்கும் இதயத்தின்!
மெல்லிய அதிர்வுகள்!
சிலவேளைகளில் எனக்குப்புரிகிறது!
பூபாளமோ, முகாரியோ!
விடுதலைக்கான பண்ணை!
இவர்களே இசைக்கட்டும்!
இன்றைய நாளில்!
இவர்கள் எழுப்பும் உணர்வலைகள்!
வான்முகடு தாண்டாவிட்டாலும்!
அன்பானவர்களை அதட்டிவைத்திருக்கும்!
சிலவீட்டுக்கதவுகளைச் சற்று!
அதிரச்செய்தாலே போதும்

இது யார் செய்த பாவமோ ?

புஸ்பா கிறிஸ்ரி
பகல் முழுவதும்!
பாத யாத்திரை போய் வந்த!
வாகனங்கள் குறைந்து!
அமைதியாகக் கிடக்கும் சாலை!
சரித்திரமாகி விட்ட!
பணக்கார வீட்டுப் பிறந்த நாள் விழா.!
சம்பவமாகி தெரியும்!
ஏழை வீட்டுக் குழந்தையின் நோய்.!
அரங்கேற்றம் முடித்து வந்த!
நர்த்தன தாரகையின் அழகு.!
புது வீடு வாங்கிக் குடித்தனம்!
வந்த புது மணத் தம்பதிகள்.!
பக்கத்து வீட்டில் புதிதாய்!
முளைத்த இளம் வக்கீல்.!
நாளை கார் ஓட்டப்பந்தயத்தில்!
ஓடவிருக்கும் வீரன்...!
இன்னும் எத்தனையோ....!
இவை பற்றிக் கவலைப்படாத!
என் கண்கள் பனித்தன!
பல்கனியில் இருந்த மறைவில்!
இருந்த அந்த மாடப் புறாவின்!
முட்டை உடைந்தது கண்டு.!
என் கண்கள் பனித்தன...!
இது யார் செய்த பாவமோ ?

வியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள்

புதியமாதவி, மும்பை
வியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள்!
-------------------------------!
இன் இனிய உறவுகளே!
முகவரி மட்டுமே அறிந்த!
உங்கள் முகங்களை !
குளிரூட்டும் அந்த இரவில்!
சந்தித்த அந்த நிமிடங்கள்!
மிகவும் இனிமையானவை.!
கோடைமழையைப் போல!
என்னைக் குளிர்வித்த!
தருணங்களை!
பனிப்பிரதேசத்தில்!
நெருப்பு அடுப்புகளில்!
குளிர்க்காயும்!
உங்களிடம்!
எப்படி புரியவைப்பேன்.?!
உங்களைச் சந்தித்த நிமிடங்கள்!
காதலின் இனிமையை, தழுவலை!
இரண்டாம் நிலைக்கு!
தள்ளிவிட்ட அற்புதத்தை!
என்னவென்று சொல்லட்டும்?!
*!
வெட்ப பிரதேசத்தின்!
வியர்வைகளை விடக் கொடியது!
குளிரில் !
கம்பளிப்பூச்சிகளுடன்!
குடும்பம் நடத்துவது.!
எப்போதும் !
எதற்குள்ளாவது!
நம்மை, நம் உடலை!
போர்த்திக்கொண்டு!
திரியும் அவலம்!
நிரிவாணத்தைவிடக் கொடியது.!
உங்கள் புன்னகைகளை மட்டுமல்ல!
உங்கள் புன்னகைக்குள்!
மறைந்து கிடந்த!
உறைந்த பனிக்கட்டிகளையும்!
அப்படியே சுமந்து !
கொண்டு வந்திருக்கிறேன்!
என் வியர்வைத் துளிகளில்.!
*!
என் தொட்டிச்செடிகளைப்!
பார்க்கும் போதெல்லாம்!
உங்கள் மழலைகளின் முகங்கள்.!
அதனால்தான்!
இப்போதெல்லாம் !
செடிகளின் இலைகள்!
பழுத்து உதிர்ந்துவிட்டால் கூட!
பதறுகிறது நெஞ்சம்.!
பார்த்து பார்த்து!
வளர்க்கிறேன்.!
நாளைப் பூக்கும்!
பூங்கொத்துகள்!
நான் அவர்களுக்கு!
அனுப்பும் வெறும் மலர்க்கொத்துகள்!
மட்டுமல்ல.!
ஆல்ப்ஸ் மலையின்!
பனிக்கட்டியில்!
நீர்த்துப் போகாமல்!
நெருப்பு மலர்களாய்!
நீங்கள் வாழ்ந்ததின் சாட்சியாய்!
தலைமறைத் தலைமுறையாய்!
அனுப்பிக்கொண்டிருப்பேன்.!
என் தொட்டிச்செடிகளின்!
வேர்களில் !
ஒட்டிக்கொண்டிருக்கும்!
நமக்கான நம் மண்ணின்!
அடையாளம் இருக்கும்வரை.!
*!
எழுத்தும் !
எழுத்து சார்ந்த என் கலகக்குரலும்!
என்ன சாதித்துவிட்டது?!
என்னைப் புரிந்து கொள்ளாத!
மனிதர்களுக்கு நடுவில்!
காயங்களுடனேயே!
சுமந்து கொண்டு திரிகிறேன்!
எனக்கான என் எழுத்துகளை.!
மயில்களே இல்லாத!
மலைவாசத்தளத்தில்!
எங்கிருந்து சேர்த்துவைத்திருக்கிறீர்கள்!
என்னையும் என் எழுத்துகளையும்!
நேசிக்கும்!
உங்கள் மயிலிறகுகளை?

கிங்கிரன் கொடுங்கீறு

ஆதவன்
வீடிழந்த நிலவிலிருந்து!
தள்ளி நிற்கிறாள்!
கொங்கைக் கிழத்தி.!
முகத்திலே கொற்ற வஞ்சி!
சருமங்கள் ரொம்ப பிஞ்சு!
கானல் கவிதை காணின்!
நாணுவாள்;பேணுவாள்!
மயிர்க் கிளர்ச்சி கொள்வாள்,!
உயிர்த் தளர்ச்சி வரையிலும்.!
மன்மதன் இவன்!
இங்கித மில்லை இவனிடம்!
கொங்கை மாந்தர் காணின்!
தங்காது போகும் சடரூபன்!
சிருங்காரம் மிகுவானன்;!
அகங்காரம் தகுவானன்.!
யாவும் படைத்த கிங்கிரன்;!
தாபத்திலே நிகரில்லா இந்திரன்.!
நாணியவள் மேல் கூசம்!
காணுகின்றான் கூசாது.!
ஏனெனவோ!
எங்கெனவோ!
கேட்காமல் போவாளா அ(ச்)சாது.?!
குறுஞ்சீலை களைப்பான்;!
இருகை வைத்தே!
ஆயிரம் செய்வான்!
நுனி நாக்கில் குழைப்பான்!
இனி தடுக்காது போய்விடின்.!
படுக்காது போன நிலவை!
கொடுங்கீறினான்!
சொல்லிங்கே சேராத செயலும்!
பல்லினால் செய்வான் பலவாறு.!
பருந்திடம் குயில்!!
பாடுவதெவ்வாறு?!
கிளரும் நரம்புகளின்!
உளரும் வார்த்தைகளால்!
விருந்து கொள்வான்!
கூம்புடையாளை.!
இத்துணை ஆனபின்னும்!
வித்தினை சேர்த்தபின்னும்!
சத்தினைக் கெட்டபின்னும்!
சிருங்காரம் அடங்கவில்லை!
ஆகாரம் போதவில்லை.!
எழுந்தான்;!
விழுந்தாள்.!
கேணமும்!
நாணமும்!
மானமும்!
போனது!
உயிரோடு ஓர் கோழி!
உரித் தெடுக்கப்பட்டது!
கிங்கிரன் சிரிக்கிறான்!
இங்கிவள் அழுகிறாள்!
மானம், மானம், மானம்,!
எனச் சொல்லியே!
அடக்கிக் கொண்டாள்!
அழ் மனது வேதனையோடு!
அங்கவன் புறப்பட்டான்!
திங்கத்தான் மீண்டும்!
-- ஆதவன

உன் போலில்லை.. முதிர்க்கன்னி

நிந்தவூர் ஷிப்லி
உன் போலில்லை நான்.. முதிர்க்கன்னி!
01.!
உன் போலில்லை நான்!
-----------------------------!
என் முதுகுப்பக்கம்!
செருகப்பட்ட !
வாளின்!
பிடியைச் சுமந்திருந்தது!
உனது கைகளா..?!
என்னை நோக்கி!
ரண மழை!
பொழிந்த மேகம்!
உனது வானிலிருந்துதான்!
வந்ததா?!
இரவுகளில்!
வலிக்க!
வலிக்க!
அழுதுகொண்டிருக்கும்!
என் கண்ணீரின்!
தீவிர ரசிகையா நீ…?!
மனப்பரப்பில்!
பிரளயம் செய்யும்!
பூகம்ப அதிர்வுகள்!
உன்னாலா நிகழ்கின்றன..?!
நம்பவே முடியவில்லை!
வளர்த்து விட்ட !
பாகனையே !
மதம் கொள்ளும் யானைகள்!
கொல்லத்துணிவது போல!
பின்னத்தொடங்கி விட்டாய்!
எனக்கெதிரான!
உன் சூழ்ச்சி வலைகளை..!
உனது புன்னகைகளின்!
பின்புலமாக!
எனது!
கண்ணீர்த்துளிகள்!
இருக்குமாயின்!
எனக்கொன்றுமில்லை!
பொம்மையாகிறேன்!
உனது கைகளில்…!
காரணம்!
உன் போலில்லை!
நான்…..!!
02.!
முதிர்க்கன்னி!
---------------- !
கனவுகளோடு!
விடியும் காலை!
கனவாகவே!
இருண்டு போகிறது!
மொழி பெயர்க்கப்படாத!
துயர்களின் வெளியீடாக!
கன்னமெங்கும் கண்ணீர்!
புன்னகையின் விலாசத்தை!
இன்னும் விசாரித்துக்!
கொண்டுதான் இருக்கின்றன!
என் உதடுகள்!
நொறுங்கிப்போன!
உணர்வுகளைச் சுமந்தபடி!
புயலழித்த பூவனமாய்!
கிழிகிறேன் நான்!
நேற்று!
வினாடிகளாய்க் கரைந்தன!
ஆண்டுகள்!
இன்று!
ஆண்டுகளாய்க் கரைகின்றன!
வினாடிகள்!
மஞ்சள் கயிறு!
இருக்க வேண்டிய இடத்தில்!
கிளிஞ்சல் கயிறு!
ஒழுகும் உயிரின்!
ஒவ்வொரு துளியிலும்!
உலர்ந்தபடி!
நாதஸ்வரமும்!
மேளதாளமும்!
இனி !
மணமுடிக்க!
மனிதன் தேவையில்லை!
மரணமே!
நீ!
இருக்கிறாய் !
-நிந்தவூர் ஷிப்லி

எழுதப்படும் வரலாறு

செண்பக ஜெகதீசன்
விழுந்தவன் !
எழுந்திருக்கும்போதுதான் !
எழுதப்படுகிறது, !
ஒரு !
வெற்றியின் வரலாறு…!!

காதல் கீதம்..நீலக் கடலின்.. தேவனின் தேவை

சின்னு (சிவப்பிரகாசம்)
காதல் கீதம்.. நீலக் கடலின் நீர்க்குமிழிகள்.. தேவனின் தேவைகள் !
!
01.!
காதல் கீதம்!
-------------------!
கடலலை சொல்லும் கவிதை பிடிக்குதே!
கரை பேசும் மறுமொழி புரியுதே !
மரநிழல் போதும் நானும் வாழ்ந்திட !
மனம் ஏனோ ஒப்ப மறுக்குதே !
இமை மூடும் வாழ்வின் இறுதில் !
நீ தெரிந்தால் வாழ்வில் பெரும் சுகம்!
இறையாகும் அன்பின் திருமுகம் !
இனிதாகும் வாழ்வில் எதுவுமே!
கவியான காதல் பித்தன் நான் - எனைச்!
சிலையாக்கும் காதல் கவிதை நீ!
இருளானால் வெட்கம் விலகுதே !
இனிதான உன் இதழ்கள் திகட்டுதே !
புதிதான மோகம் பிறக்குதே!
புதிரான கவிதை தொடங்குதே!
இமைமூடும் அழகைக் காணவே!
இருள்விலக்கும் அகல்விளக்கைத் தேடினேன்!
இனிதான புன்னகை காணவே!
முழு நிலவில் உன் அழகை நாடினேன்!
வழிந்தோடும் வியர்வைத் துளிகள்!
வளராதோ இரவின் நீளம்!
இனிதான காதல் கீதம்!
கற்றுவரும் கலவியின் பாடம்!
02.!
நீலக் கடலின் நீர்க்குமிழிகள்.. !
----------------------------------!
நீலக் கடலை!
நீந்திக் கடக்க!
பாலைக் கப்பலின்!
துணையைத் தேடி !
கானகக் குயிலின்!
கானம் கேட்க!
காகத்தைப் பிடித்து!
கத்தச் சொல்லி !
அணிகள் சூடிய!
அழகை நாடி!
அழகிய உருவை!
நிறை குறைத்திடும் !
கன்னியரே காளையரே!
கரை காண்பீரா !
இல்லை!
நீலக் கடலின் நீர்க்குமிழிகள்!
ஆவீரா!
!
03.!
தேவனின் தேவைகள்