தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நான் எங்ஙனம்

லலிதாசுந்தர்
என் உடல்செல்கள் அனைத்தும்!
இயக்கமின்றி துருபிடித்துவிட்டது!
உன் பார்வைமின்சாரம் பாயந்ததால்!
நெருப்பை தீண்டினால் சுடுமென்ற!
தொடுவுணர்வு இழந்து கைகள்தொடுகின்றன!
நீ என்னருகேயின்றி!
காதல் என்பது நோயில்லை!
காதல் என்பது தவமில்லை!
காதல் என்பது ஞானம்!
அதுவே அனைத்தும்!
தென்றலின் காதலின்றி மழையில்லை!
சிப்பியின் காதலின்றி முத்தில்லை!
கரையின் காதலின்றி கடலில்லை!
இயற்கையே இங்ஙனமெனில்!
நான் எங்ஙனம்!
நீ என்னருகிலின்றி.........!
- லலிதாசுந்தர்

பயணம்

சித. அருணாசலம்
அருவிகளின் பயணம்!
ஆறாக முடிவதுடன், !
ஊர்களில் வெளிச்சத்திற்கு!
உத்தரவாதம் தருகிறது. !
ஆறுகளின் பயணம்!
அது போகும் பாதைகளில்!
தீராத தாகத்தைத் தணித்து!
அள்ளித் தருகிறது செழிப்பையும்.!
ஆடைகளின் பயணம்,!
கடைசி வரை மானத்தைக் காப்பதுடன்,!
காட்டிவிடுகிறது !
கவர்ந்திழுக்கும் அழகையும்.!
பூக்களின் பயணம் !
புனிதத்தில் முடிவதுடன்,!
மரியாதைக்கு அடையாளமாகும்!
மகத்துவத்தையும் தருகிறது.!
மரங்களின் பயணமோ!
பலனை எதிர்பார்க்காமல்!
பார்த்துப் பார்த்துக் கடமையைச் செய்யும் !
கீதையின் பாதையில்.!
மனிதனின் பயணம் மட்டும் ஏன்!
மக்கிப் போய்த் தொடர்கிறது.!
மாறாத வடுக்களை!
மற்றவர் மனங்களில் பதிப்பதும்,!
அடுத்தவர் உணர்ச்சிகளை!
அடியோடு மிதிப்பதும்,!
பார்க்காத போது வக்கிரத்தைப் !
போர்த்திக் கொள்வதும்!
வஞ்சனையை மனத்தில் வைத்துக் கொண்டு!
நஞ்சினைச் செயல்களில் ஏற்றுவதுமாய்!
வழித் தடங்களில் எத்தனை!
வாழ்க்கைத் தடங்கல்கள்.!
பாழடைந்து விட்ட இந்தப்!
பாதையைச் செப்பனிட்டுப்!
பயணத்தின் மீதியைப் !
பரவசமாக்குவோம். !
-சித. அருணாசலம்

நாய்களின் கால்களில்

இராகவன்
விதவிதமாய்ப் படைக்கலங்கள்!
---------------------------------------------------------------!
1!
நாய்கள் எம் முற்றத்தில் !
தலையுயர்த்தி ஊளையிடும்!
நடுவீட்டில் கழிவகற்றும்!
கண்ட இடத்திலெல்லாம் !
பெட்டையுடன் புணரும் !
நாய்கள் எமைக் கண்டால் !
உறுமும் குரைக்கும்!
நன்றிக்கொரு தடவை!
இலக்கணத்தைத் தான் வரையும்!
தன் காவல் பெரிதென்று!
தவண்டை கொட்டித் !
துள்ளிவிழும்!
இவ்வீனச் செயலனைத்தும்!
தலைகவிழ்ந்தே பொறுப்போம்!
!
2!
கல்லெடுத்து வீசும்!
எண்ணத்தைக் கைவிடுவோம்!
‘அடீக்’ கென்று விரட்டுகிற !
சினமதையும் தவிர்ப்போம்!
ஏனென்றால் இப்போதோ!
நாய்களின் கால்களில் !
விதவிதமாய்ப் !
படைக்கலங்கள்!
!
-இராகவன்

வீறு கொண்டெழுவோம்

கலாநிதி தனபாலன்
வீரமாமலை வீழ்ந்ததோ மண்ணி;லே!!
விம்மி விம்மி அழுதோம்!
நிகழ்கால வீரத்தின் குறியீடு!
நின்று போனதோ?!
நினைந்து நினைந்து அழுதோம்!
சமர்க்களங்களின் சரித்திர நாயகன் சாய்ந்ததாய்!
காற்றிலே வந்த சேதி கேட்டு!
கதறிக் கதறி அழுதோம்!
களம்பல கண்ட காவிய நாயகன்!
காலனின் கைகளில்!
கனத்தது இதயம்!
கண்களில் கண்ணீர் கடலெனப் பாய்ந்தது!
சோகக் கண்ணீர் சொரிந்த போதும்!
விழிகளின் வழியே விழுந்த கண்ணீர்!
விடைபெறு முன்னே !
வீறு கொண்டெழுவோம்!!
வீரனின் சாவில் !
விழி பிதுங்கி அழுவதோ !
விழுவதோ விடையல்ல !
வீறு கொண்டெழுவோம் !
விரைந்து முன்னேறுவோம் !
விடுதலை பெறும் வரை. !

ஹேப்பி நியூ இயர்

ஜெ.நம்பிராஜன்
நள்ளிரவு கேளிக்கைகள்!
மதுவிற்க்கு இலவச இணைப்பாக!
சிற்றின்பத் தீண்டல்கள்!
மிதக்கிறது...நம் பண்பாடு!
நட்சத்திர விடுதி!
நீச்சல் குளத்தில்!
பிணமாக

தற்கொலை.. ஆற்றாமை

ராம்ப்ரசாத், சென்னை
01.!
தற்கொலை!
----------------- !
உயிர் கொண்டு!
வாழும் ஜீவராசிகளுள்!
எதுவும்!
த‌ன்னுயிரைத் தானே!
எடுப்ப‌தில்லை...!
தன் வாழ்கையைத்!
தானே வெறுப்பதில்லை...!
தானே முன்னின்று!
த‌ன் காரிய‌த்திற்குக்!
கார‌ணமாவ‌தில்லை...!
நிறுத்தி நிதானித்துத்!
தன்னைத் தானே!
கொல்லுவதில்லை,!
மனிதனைத்தவிர...!
குர‌ங்காய் இருந்தபோதில்லாத‌து!
கால‌ மாற்ற‌த்தில்!
வ‌ள‌ர்ந்துவிட்ட‌தோ...!
மனிதனென்று பெயர்!
கொண்டபின் வ‌ந்து!
ஒட்டிக்கொண்ட‌தோ?!
இந்த கோழைத்தனத்தைத்!
தோற்றுவித்த நுண்ணறிவும்!
ஓர் அறிவோ?!
த‌ன்னைத்தானே கொன்றுபோட‌வோ!
இத்தனை ந‌வீனங்களும்,!
இத்த‌னை க‌ண்டுபிடிப்புக‌ளும்...!
துன்ப‌த்தை ஆய்வ‌து...!
மீள‌ வ‌ழியின்றேல்!
மாய்வ‌து...!
இத‌ற்கு குரங்குகளாய்!
இருப்பது மேல்!
என்ற கரைச்சல்!
கேட்கிறது காடுக‌ளில்...!
உன் ம‌ர‌ண‌த்தைக் கூடவா!
ஆள‌ நினைப்பாய்?!
என்றே கேளிபேசுகிற‌து!
அக்கூட்ட‌ம்...!
உண்மை யாதெனில்,!
அறிவை ஆளும்!
வில‌ங்குக‌ள் அடைந்தன!
கூண்டுக‌ளில்...!
அறிவை!
ஆள‌ விட்டு விட்ட‌வன்!
புதைந்தான் ம‌ண்ணுக்க‌டியில்...!
!
02.!
ஆற்றாமை!
---------------!
உன் ஸ்பரிசம்!
உணர முடியாது ஏங்கும்!
என் விரல்கள்,!
உன் கூந்தல்!
அணியப்போகும்!
செவ்விதழ் ரோஜா!
இதுவாக இருக்கலாமென‌!
தோட்டத்தின் அத்தனை!
ரோஜாவையும்!
ஒருமுறை தொட்டு தன்!
ஆற்றாமையை!
தீர்த்துக்கொள்கின்றன...!
அதுபோல்!
உன்னை தனதாக்கிவிட‌!
இயலாத தன்!
ஆற்றாமையைத்தான்!
உன் நினைவுகளை!
சுவாசித்தே தீர்க்கிறதோ!
என்னிதயம்

மாயம்

வெளிவாசல்பாலன்
இந்த நகரத்தில்!
பெய்த கடைசி மழைத்துளியின்!
ஓசையில் ஒலித்த உன் பாடல்!
காலடியோசையா இதயத்தின் ஒலியா!
எதுவென்றறியாமல்!
பிரிந்து சென்றது மழை!
தவிப்போடு!
அதிகாலையில்!
தூக்கத்தின் மீது மிதந்து சென்ற கனவில்!
ஒரு சிறகை!
புன்னகையாகச் சொருகிய பெண்ணே!
எங்கேயிருக்கிறாய் இந்த நிமிசத்தில் ?!
விடைபெறக் காத்திருக்கும்!
இந்தத் தெருவில் ஆயிரம் வலைகள்!
ஆயரம் வலைகளிலும் ஆயிரமாயிரம் கண்கள்!
நடந்து செல்லவும் பேசிச் சிரிக்கவும்!
இந்தத் தெருவில் இல்லை!
ஓரிடம்,!
ஓரிடமும்.!
கூறிய இடமொன்றிலேனும்!
இருக்குமா ஒரு கூடு!
மவுனமும் அன்பும் நிரம்பி ?!
தன்னை அறியும் படியாய்!
அகமலரும் ஒளிக் காட்சியில்!
அவளறியட்டும் அவளை!
அவள் அரசியென்பதை!
அவளைச் சுற்றியிருக்கும் அன்பின் ஆழ்படர்கையை!
இந்த நகரத்தில்!
மிதக்கும் பறவை அவளின் நிழல்!
நகர்ந்து கொண்டேயிருக்கும் அந்த நிழலில்!
புக்களைச் சூடுகிறேன் ஒரு மழலையாய்!
நகரின் புராதனத்திலும் நவீனத்திலும் கலந்திருக்கும்!
வாசனை!
அவள்தானென்று சொல்லும் சரித்திரக் குறிப்புகளை!
செதுக்கிக் கொண்டிருக்கிறான்!
கல்வெட்டில் ஒரு வரலாற்றாசிரியன்.!
பெருகும் புன்னகை!
வழிந்தோடுகிறது நகரின் தெருக்களிலும்!
மாடங்களிலும்!
பயணிகளிலும்!
!
-வெளிவாசல்பாலன்

தேட‌ல்க‌ள்

ராம்ப்ரசாத், சென்னை
வார்த்தைகளின் கைப்பிடி!
இறுகப்பற்றி!
ஊடல் கொண்ட மட்டும்!
உயர்த்திப்பிடித்து,!
பொய்க்கோபம் கொண்ட மட்டும்!
வேகமாய் வீசிக்!
குத்தினேன் உன் இதழ்!
தவறி விழுந்த!
சில பத்திகளை...!
தெரித்த வார்த்தைகளில்!
சில சொற்கள்!
மிக அழகாய் இருந்தது...!
தெரிக்காத வார்த்தைகளில்!
அழகை எதிர்பார்த்து!
மீண்டும் குத்த!
எத்தனிக்கையில்!
ஒரு வார்த்தையின் பின்னே!
ஒளிந்து கொண்டாய்...!
போட்டிக்கு நானும்!
இன்னோரு வார்த்தையின்!
பின்னே ஒளிய,!
ஒவ்வொரு வார்த்தையாய்!
நீ என்னையும்!
நான் உன்னையும்!
தொட‌ர்ந்து தேடித்தேடி!
எண்ணிக்கையில் ப‌ல‌ நூறைக்!
க‌ட‌ந்து கொண்டிருக்கிறோம்!
ந‌ம‌க்குள் நாம் ப‌கிர்ந்துகொண்ட‌!
இப்ப‌டியான‌ தேட‌ல்க‌ளை

எண்ணங்களின் போராட்டங்கள்

துர்கா
மன வெளியில் மையமிட்டு தூரி ஆடும்!
எண்ணங்கள்....!
சுமையாய் நினைத்த சோகங்கள்!
சுகமாய் உணரப்பட்டன!
தொந்தரவுகள் ஆக்கரமிக்கப்பட்டு!
தொடர்ச்சியான மௌன போராடங்கள்...!
அமைதியாய் சுவாசத்தை உணர்ந்து!
உள்ளிளுக்கும் போது!
மெல்லிய வாசனை உனதன்பின் சுவடாய்!!
கஷ்டப்படுத்த மனமில்லை!
மனமே கஷ்டத்தில் தவிக்க!!
தொடர்ச்சியான போராட்டத்தின் முடிவுகள்!
சிரிப்பாய் வெடித்தன

விடை பெறுதல்

றஹீமா-கல்முனை
நமது பயணங்கள்!
உடைவுகளோடு.....!
இப்படியே முடிந்துவிடுகிறது..!!
துண்டு..துண்டாய்!
எத்தனை சினேகிதிகள்!!!
பல்கலைகழக!
கன்ரீன் முற்றத்து!
வாசகங்கள்!
இன்னும் நினைவிலுண்டு....!
நாம் நாமாக!
நமக்காக இருந்தோம்....!
அடர்ந்த பற்றைகளோடு!
அழுக்கேறிய கற்களோடும்!
அந்த மரத்தடியை!
நாம் ஐவருமே!
அழகாக்கினோம்!
பரீட்சை!
முடிந்தகையோடு!
அவசரமாய் விடைபெற்றோம்!
ஆற்றமுடியாத அழுகையோடு...!
புகைப்படங்களும்!
ஆடோக்ராப்களுமாய்!
கடைசிநாளின் கலவரம்!
இன்னும் நினைவிலுண்டு..!
நீண்ட!
இடைவெளிகளின் பின்னரான!
தொலைபேசியின்!
அறுவைகள்!
எஸ்.எம்.எஸ். ஆய்!
உருமாறிக்கடைசியில்!
காணாமல்போயிற்று...!
வருகிற!
திருமண அழைபிதழளுக்கு!
'ஸாரி'!
சொல்லி வாழ்க்கை ...!
அலைகிறது!
குழந்தையின்!
அழுகையை நம்!
புகைப்படங்கள்!
நிறுத்திக்கொண்டிருக்கிறதாம்!
நிஜமா????!
நம் சந்திப்புகள்!
எதிர்பாராமல்!
எப்போதாவது நடந்துவிடுகிறது....!
ஒரு அதிசயம்போல!
குழந்தைகளோடு...!
பொறுப்புள்ள உம்மாவாய்!
ருமைசாவும்..!!
படிப்போடு!
பிடிவாதமாய் இருக்கும்!
அக்மலும்.....!
கணவரின்!
மார்க்கக்கடமையில்!
கருத்தாய்...!
சிஹானா!!!!
அவசர அவசரமாய்!
திருமணமாகி.....!
காணமல்போன!
ஸீனத்...!
நாங்கள்!
கடைசிநாளிலேயே!
தொலைந்துவிட்டோம்...!!!!
இப்போதெல்லாம்!
நாங்கள்!
புகைப்படங்களில்!
மட்டுமே!
ஒன்றாயிருக்கிறோம்