கைரேகை கால்ரேகை முகரேகை தனரேகை!
மையேதுமில்லாமல் மாமுனிகள் சொல்வரென!
பொய்யான விளம்பரத்தை புரிந்திடா எம்உறவுகளும்!
மெய்யெனவே நாளுமெண்ணி நீள் வரிசை நிற்குதங்கே.!
மளிகைக் கடைகளினால் வருகின்ற இலாபமுடன்!
வழியைத் தெரிந்துவைத்து வந்திறங்கும் சாத்திரிகள்!
பழியில் கிடைக்கின்ற பணத்தினிலும் பங்கு வைக்க!
இழிவுப் பிறவிகளாய் எம்மவரோ முன்னிலையில்.!
தன்விதியைத் தானறியா தவிக்கின்ற சாத்திரிகள்!
உன்விதியைச் சொல்வரென உன்மனமும் நம்புவதால்!
பின்நிலையைப் புரியாது பெரும் பணத்தை வீணடித்து!
என்பலனைக் கண்டுகொண்டாய் நின் அமைதி கிட்டியதா?!
இந்தியச் சந்தைகளில் இரண்டுன்றாம் மலிவாக!
அந்திமத்தை வரையறுக்கும் ஆட்கொல்லி எயிட்ஸ்நோயும்!
சிந்துகின்ற இடமனைத்தும் சிலிர்த்தெழும்பும் சாத்திரியும்!
முந்திப் பிறந்த பலர் செய்திட்ட தவப்பேறாம்.!
ஊருக்காய் நடத்துகின்ற ஊர்வலத்தில் பங்குபற்ற !
யாருக்கும் நேரமில்லை ஊர்; பெற்ற பாவமென்ன!
பார்மெச்சும் சாதகமாம் பார்ப்hதற்கோ விடுமுறையாம்!
பேர்மிக்க தமிழரெனப் பெருமையாய் பீற்றுகிறார்.!
!
-த.சு.மணியம்
த.சு.மணியம்