சுவாசலயம் - புதியமாதவி, மும்பை

Photo by engin akyurt on Unsplash

மௌனவெளியில் !
என் இருத்தலை !
நிச்சயப்படுத்தும் !
சுவாசத்தைப்போல !
சத்தமின்றி ஒலிக்கிறது !
காற்றுடன் கைகோத்த !
சங்கீதம். !
செவிப்பறைகள் தீண்டாத !
ஒலியின் அலைகளில் !
எழுதப்பட்டிருக்கிறது !
இதன் சங்கீத மொழி. !
எப்போதும் என்னுள் இசைக்கும் !
பின்னணி இசையாய் !
என் சுவாசலயத்துடன் !
உயிர்ப்பறவைக்கு மட்டும் கேட்கும் !
உன்னத ராகத்தில் !
பாடிக்கொண்டிருக்கிறது !
அந்தப் பறவை. !
பெயர் தெரியவில்லை. !
பெயரிடவும் விருப்பமில்லை. !
எனக்காகப் பாடுகிறதா? !
எல்லாமே கற்பனையா? !
விழிதிறக்க அச்சப்பட்டு !
கண்மூடித்தடவிக்கொண்டிருக்கிறது !
வெளிச்சத்தின் கைகள். !
கண்விழித்தால் !
கண்ணில் பட்டுவிடும் !
பட்டுப்போன மொட்டைமரங்களின் !
நிழல்களில்லாத நிஜத்தைக் கண்டு. !
------------------------------ !
புதியமாதவி
புதியமாதவி, மும்பை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.