தொட்டிச்செடி - புதியமாதவி, மும்பை

Photo by Maria Lupan on Unsplash

========== !
நீ ஆலமரம் !
நான் தொட்டிச்செடி !
நம் வேர்கள் !
சந்திக்கவே முடியாது !
காற்றுக்கு மட்டுமே !
நாம் காதலர்கள் !
மழைகூட !
நம்மை வஞ்சித்துவிட்டது !
மரபுச் சட்டங்கள் !
நம்மைத் தண்டித்துவிட்டது !
!
என் வேப்பமரக் காற்று !
உன் மேல்துண்டை !
உரசியதில் !
என் சருகுகளில் தீ !
உன் கண்களில் !
என் மண்ணின் !
தூசி. !
உறுத்துகின்றது என்று !
உதறிவிடாதே !
உறுத்தலில்தான் !
உண்மைகள் !
பிரசவிக்கும். !
!
என் பிச்சிப்பூக்கள் !
பூத்துக் குலுங்கியதில் !
புதர் நாகங்கள் !
வெட்டிவீழ்த்திவிட்டேன் !
இன்று !
தொட்டிச்செடிகளில் !
தொடர்கின்றது !
தோட்டம் !
மண்ணுக்காக ஏங்கும் !
என் வேர்கள் !
மலருக்காக நீள்கின்றன !
உன் கைகள் !
மயக்கத்தில் !
இலைகளையும் !
உதிர்க்கின்றன !
என் செடிகள். !
--அன்புடன், !
புதியமாதவி, !
மும்பை
புதியமாதவி, மும்பை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.