முற்றத்துத்தூணில் சாய்ந்துகொண்டுதான்!
கீரை ஆய்வாள்,!
பொன்னம்மாச்சி..!
வெயில் காயும் நெல்லில் சிறிதில்!
பசியாறும் புறாவுக்கு,!
முற்றத்து தொட்டியில்!
தண்ணீரும் கிடைக்கும்.. அவள் புண்ணியத்தில்.!
அவளமைத்த!
கலயவீடுகளில்!
நிம்மதியாய் குடும்பம் நடத்துகிறது குருவி!
நன்றி சொல்லியபடி..!
பேச்சும் சிரிப்புமென!
தோழிகளில் ஒருவராகிப்போன!
அந்த முற்றத்தில்தான்!
பொரணியும் ஆவலாதியும்!
சேர்ந்தரைபடும் அரிசியுடன்..!
கானகமும் இல்லமுமாய்!
அனைவரும் போய்ச்சேர்ந்தபின்..!
வெயிலாடிக்கொண்டிருக்கிறது!
துவைத்த கல்லும், வளர்த்த முருங்கையும்;!
காலியான முற்றத்தில்
அமைதிச்சாரல்