உயிரின் தேடல் - புதியமாதவி, மும்பை

Photo by Jayden Collier on Unsplash

============= !
நானில்லாத நாட்களில் !
என் தெருவில் !
எதைத் தேடி !
உன் உயிர் !
கையில் வீளக்குடன் !
கால்வலிக்க நடக்கிறது? !
பூட்டியக் கதவுகள் !
உடைந்த சன்னல் கண்ணாடிகள் !
து£சி அடைந்த முற்றம் !
எப்போதோ நான் வரைந்த !
செம்மண் கோலம் !
உடைந்த திண்ணை !
உயரமாய் வளர்ந்த தென்னை !
இன்னும் அறுந்து விழாமல் !
காற்றில் ஆடும் ஊஞ்சல்.. !
தேடிப்பார்.. !
இதில் எங்காவது !
ஒளிந்துகொண்டிருக்கும் !
உனக்கான என் அடையாளம். !
!
******* !
!
எப்போதாவது !
எனக்குள் உன் நினைவுகள் !
மனக்குகையின் இருட்டில் !
எட்டிப்பார்க்கும் சூரியக்கதிர்களாய். !
இப்போது !
நீ எப்படி இருப்பாய்? !
தாடி மீசையுடன் !
கதர்ச்சட்டையில் !
தோள்களில் தொங்கும் !
ஜோல்னாபையுடனா? !
வெள்ளை உடையில் !
பளீர் சிரிப்பில் !
கையில் மின்னும் !
கடிகாரச் செயினுடன் !
அலைபேசியின் !
ஆங்கில உச்சரிப்பிலா? !
கரைவேட்டியும் !
கசங்கிய துண்டும் !
கற்களின் விரல்களில் !
கரகர தொண்டை !
மேடையில் முழங்கும் !
தமிழனின் குரலாய்.. !
நீ இப்போது !
எப்படி இருப்பாய்? !
எப்படி இருந்தாலும் !
உன்னை - !
என்னில் இன்னும் !
எரிந்து கொண்டிருக்கும் !
உன்னை- !
என்னால் காணமுடியுமா? !
திருட்டு மாங்காயை !
கடித்துக் கொடுத்தபோது !
எச்சில்படாத !
நம் இதயம் !
மூளைவளர்ச்சியில் !
முடமாகிப் போனது !
எப்படி? !
!
அன்புடன், !
புதியமாதவி, !
மும்பை
புதியமாதவி, மும்பை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.