இரத்த உறவுகள் - புதியமாதவி, மும்பை

Photo by Seyi Ariyo on Unsplash

============== !
அடிபட்டபோது !
வலிக்கவில்லை !
பொங்கிவந்த ரத்தம் !
கட்டுகளை !
உடைத்து !
கசிந்து உடைந்ததில் !
வலித்தது !
கட்டுகளின் அடியில் !
கீறிப்பிளக்கும் காயம் !
மீண்டும் ஒருநாள் !
காயம்படாமலேயே !
சொட்டுச் சொட்டாக !
ரத்தம் !
தசைத் துணிப்பிழிந்து !
சிந்தியது தரையில் !
சோபாவில் !
பள்ளிக்கூடத்து பெஞ்சில் !
பார்க்கில் !
தியேட்டரில்.. !
எங்கிருந்து !
பொங்கித்துடித்து !
சிதறி !
வழிகின்றது ரத்தம் !
என் சிறகுகள் !
அறுத்து !
என் கால்களின் ஓடையில் !
என் கைகளுக்கு விலங்காய் !
என் பிறப்பின் காயத்திலிருந்து !
கசிகின்றதா..? !
எங்கிருந்து...? !
ரத்தம்.. !
ரத்தம் உறவாமே !
உறவுகளின் கதவுகள் !
திறவுகோலில்லாதக் கதவுகள் !
வாசலில்லாதச் சிறைகள் !
அப்போதும்... !
சிவப்பு ரத்தம் !
வெள்ளைரத்தமாகி !
வீங்கிப் பருத்த !
மார்பகத்திலிருந்து !
எதைத் தேடி ஓடுகின்றது? !
படைப்பின் சிருஷ்டி !
தோல்வியில் அழுகின்றான் !
வெள்ளை ரத்தம் !
வெற்றி நடையுடன்... !
- அன்புடன், !
புதியமாதவி
புதியமாதவி, மும்பை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.