சூடான வாடாபாவுக்காக !
ரோட்டோரத்தில் நனைந்து கொண்டிருக்கிறாய், !
அருகில் வந்து குடைப்பிடிக்கலாம்தான். !
ஆனால் குடை இருப்பதோ உன்னிடத்தில் !
சாலைவிதிகளை மறந்து !
ஓடிவந்து !
உன்னுடன் கலந்து !
ஒன்றாக நனையலாம்தான். !
ஆடைகள் நனைந்துவிடுமே.. !
அச்சத்திலேயே !
குளிர்காய்கிறது என் நெருப்பு. !
** !
உன்னோடு உன் குடையில் !
உன்னோடு ஒரே மழையில் !
ஒன்றாக நனையும் !
ஒற்றை நிமிடத்திற்காய் !
குடை மறைத்து வருகிறது !
என் காற்று. !
குடைவாங்கித்தந்துவிட்டு !
குடைப்பிடித்தே நடக்கிறது !
உன் கால்கள். !
குடைக்கிழித்து தடம்மாறிப் !
புயலாகப் புறப்படுமோ ..என் காற்று!. !
நடுக்கத்திலேயே கழிகிறது !
இருட்டைக்கிழிக்கும் மின்னலுடன் மழை. !
** !
நனைக்கமறுத்த மழைத்துளிகள் !
வெள்ளப்பெருக்காய் !
வீடுடைத்து !
காடுடைத்து !
யாரைத் தேடுகின்றன? !
எதற்காக அலைகின்றன? !
காலம் தவறிக் கொட்டும்மழையில் !
கல்லறைகள் நனைவதில்லை. !
**>> அன்புடன், !
புதியமாதவி

புதியமாதவி, மும்பை