ரயில் பயணம் - ப்ரியன்

Photo by Salman Hossain Saif on Unsplash

அடுத்தப் பெட்டியில் இருக்கும் !
போதே !
காட்டிக் கொடுத்துவிட்டது !
அவனை !
கட்டைக்குரலில் அந்த !
சோகப்பாட்டு! !
முந்தைய நிமிடம் வரை சும்மா !
இருந்தவர்கள் !
அவசர அவசரமாய் செய்திதாளில் !
மூழ்கிப் போனார்கள்! !
கண் தெரியாதவனுக்கு !
சில்லறை இல்லேப்பா !
சைகை மொழி சொன்னார்கள் சிலர்! !
ஒரு சிலர், !
முன்னங்காலில் முகம் புதைத்து !
தற்காலிகமாய் !
செத்தும் போனார்கள்! !
இவன் நகர்ந்தால் போதுமென !
அவசரமாய் அம்பது நூறு காசுகள் !
இட்டனர் இன்னும் சிலர்! !
தகரத்தில் காசு விழுந்த ஒலியில் !
மனம் நிறுத்தி !
கொஞ்சம் சந்தோசமாகவே !
அடுத்தப் பெட்டிக்கு !
நகர்ந்தான் அவன்! !
யாரும் கண்டுக் கொள்ளாத கவலையில் !
அந்தப் பாட்டு !
அழுதபடியே போனது !
அது பாட்டிற்கு! !
- ப்ரியன்
ப்ரியன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.