சில காதல் கவிதைகள் - ப்ரியன்

Photo by Ryan Grice on Unsplash

****************** !
இலையுதிர்கால இலைகளாய் !
மனத்தரையெங்கும் !
விரிந்து கிடக்கின்றன !
உன் நினைவுகள்! !
- ப்ரியன். !
இலைகள் உதிர்த்து !
போர்வை ஒன்றை !
பூமிக்கு போர்த்திருக்கின்றன !
இலையுதிர்கால மரங்கள்! !
வா, !
கைகோர்த்து; !
இலைகளின் !
மனம் சாந்தியடைய !
ஒரு சரக்சரக் !
நடை பயிலலாம்! !
- ப்ரியன். !
அவளுக்கான காத்திருப்பில் !
இலையுதிர்க்கும் மரமொன்றைத் !
திட்டித்தீர்ப்பேன்! !
மண்முத்தமிடும் இலையின் !
இரைச்சலில் !
அவள் கொலுசு !
நாதம் கெடுமென! !
- ப்ரியன். !
நீ வர நேரமாகும் !
நாட்களில் !
என் மடி தங்கி !
என்னைக் கொஞ்சிக் !
கொண்டிருக்கும் !
என்னால் உன் பெயர் !
சூட்டப்பட்ட !
இலை ஒன்று. !
- ப்ரியன். !
நேரமானதற்காக !
கோபித்துக் கொள்கிறாய்! !
அக்கணத்தில் !
மறந்தும் போகிறாய் !
நீ சாய்ந்திருந்த !
மரத்தின் தண்டாய் !
நான் உன்னை !
தாங்கியிருந்தை! !
- ப்ரியன். !
என் வீட்டில் ஒரு புத்தம் புது !
பூ பூக்கிறது! !
நீயே வந்து !
பறித்துக் கொண்டால் !
நீ நண்பி! !
நான் பறித்துத் !
தரும்வரை காத்திருந்தால் !
நீ காதலி! !
- ப்ரியன்
ப்ரியன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.