ஒரு சேரி வீட்டின் உறுப்பினர்கள் - ப்ரியன்

Photo by Hasan Almasi on Unsplash

*********************** !
காலையிலிருந்து வெந்த உடம்பை !
எரியூட்ட டாஸ்மாக்கில் !
மொத்தமாய் கூலி தொலைக்கும் !
அப்பா! !
சோற்றுக்கு கூட பணம் தாராதவனை !
கெட்ட வார்த்தையில் கடிந்துக் !
கொண்டே !
அவனுக்கும் சேர்த்து சோறு !
வடிக்கும் !
அம்மா! !
ஊரில் உள்ள சேறேல்லாம் !
தந்து சேர்க்கும் !
வீடோடு ஒட்டிக் கொண்ட !
ஒரு தெருநாய்! !
அப்புறம், !
வீட்டின் கூரை ஓட்டை !
ஒவ்வொன்றிலும் ஒரு நிலவு !
தேடும் சில பிள்ளைகள்! !
- ப்ரியன்
ப்ரியன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.