புள்ளி - ப்ரியன்

Photo by Amir Esrafili on Unsplash

* புள்ளி * !
தூரத்தில் தங்கி !
தயங்கி நிற்கும் !
நிலா! !
அவளின் நெற்றியில் !
ஒற்றைப் பொட்டு! !
என் கவிதைகளின் !
கடைசி மைச்சொட்டு! !
ஒவ்வொன்றும் !
ஒவ்வொன்றைக் குறித்தாலும் !
தூரம் நின்று பார்த்தால் !
எல்லாம் புள்ளி! !
வெறும் புள்ளி! !
ஒன்றின் தொடக்கமாகவோ !
முடிவாகவோ !
நிற்கும் மாயப் புள்ளி! !
- ப்ரியன். !
* காவல் * !
இரவெல்லாம் !
கண்விழித்துப் !
பார்த்திருந்தேன் நிலவை; !
ஆனாலும், !
காணாமல் போயிருந்தது !
காலையில் !
என் காவலையும் மீறி! !
- ப்ரியன்
ப்ரியன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.