சுடுகாடு - ப்ரியன்

Photo by FLY:D on Unsplash

பகலிலும் அலறும் ஆந்தை !
கள்ளிச் செடி !
காய்ந்த சருகு - அதில் !
சரசரவென ஓடி ஒளியும் பாம்பு !
மண்ணெண்ய் வாசத்துடன் !
குபுகுபுவென எரியும் சவத்தீ! !
சுழன்று அடிக்கும் காற்றில் !
கனன்று பறக்கும் சாம்பல் !
கால் இடறும் எலும்புகள், !
அடையாளங்களோடு !
பிணம் காத்து !
உக்காந்து இருக்கு சுடுகாடு !
ஊருக்கு ஒதுக்குப்புறமாய்! !
- ப்ரியன். !
* புல்லாங்குழல் * !
வண்டொன்று !
குறும்பாய் !
மூங்கிலில் துளையிட்டபோது !
அறிந்திருக்கவில்லை; !
தான், !
உலகின் முதல் புல்லாங்குழலின் !
உருவாக்கத்திலிருப்பதை! !
- ப்ரியன்
ப்ரியன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.