சில காதல் கவிதைகள்
மு.கந்தசாமி நாகராஜன்
மு.கந்தசாமி நாகராஜன் !
கவிதை சொல்லி அழைக்கிறேன் - காதலியே என் !
கனவில் உன்னை நினைக்கிறேன் !
எதையோ சொல்லத் துடிக்கிறேன் - உன் நினைவில் !
என்னை நானே மறக்கிறேன் !
கனவுக்குள் நீவந்து போனாய் - என் !
கவிதைக்குக் கருவாக ஆனாய் !
தொடராதோ நம்காதல் மண்ணில் !
தொலையட்டும் அக்கடவுள் விண்ணில் !
ஊர்கூடும் நாள்பார்த்து வா !
உன்னை நான்சேர நாள் பார்க்கவா? !
கனவில் என் கைபிடிக்க வா !
கடலமுதத்தைக் கன்னிக்குத் தரவா? !
சிலையென்று வியந்த நாளொன்று உண்டு- நீ !
சிவனுக்கு சமமென்று நான் நினைத்ததுண்டு !
அழிக்கின்ற அழகொன்றை நீ கொண்டதுண்டு-என் !
அழுகையை துடைக்க நின் இருகரங்களுண்டு !
கவிதைக்குப் பேர்சொல்லித் தாயேன் - என் !
கனவுக்கு அர்த்தத்தைத் தாயேன் !
கன்னத்தில் முத்தத்தைத் தாயேன் - என் !
கவலைக்கு மருந்தாக வாயேன் !
நிலவோடு உனக்கென்ன சொந்தம் - இந் !
நிலவுலகில் நீடிக்கும் நம்காதல் பந்தம் !
என்னோடு இணைய இன்னும் ஏன்மந்தம்? சொல் !
எனக்கில்லை இவ்வுலகில் நீயன்றி சொந்தம்