தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சங்கேத வார்த்தை

ப. மதியழகன்
உன் சங்கேத வார்த்தைக்கு!
அர்த்தமென்ன என்பதை!
இப்போது தான் தெரிந்து கொண்டேன்!
வாழ்க்கையைவிட கொடூர தண்டனை!
வேறு என்னவாக இருக்க முடியும்!
சங்கடங்கள் இல்லாது!
அக்கடா என்று விட்டம் பார்த்து!
படுத்துக் கிடக்க எவரால் முடிகிறது!
இங்கே!
மயிரிழையில் உயிர்ப்பிழைத்தவனிடம்!
கேட்க வேண்டும் உயிரின்!
மகத்துவம் என்னவென்று!
சிறிய தவறு பின்னால்!
பூதாகரமான பிரச்சனையாகிவிடுவதை!
யார் தான் கணிக்க முடியும்!
மரணத்தாகத்துடன் அலைபவன்!
இந்தக் கிணற்று நீரை குடிக்கலாமா!
என யோசிப்பானா!
உன் கவிதையை நான் எழுத!
வேண்டுமென்றால்!
என் வாழ்க்கையை!
நீ வாழ வேண்டும்!
சிந்தனைக்கு எல்லை வகுக்கும்!
உனது சட்டதிட்டங்களை!
அமல்படுத்தினால்!
பூமியே கல்லறைத் தோட்டமாகத்தான்!
இருக்கும்!
உனது நடவடிக்கைகளை!
சகித்துக் கொண்டு வாழ!
எனது சுதந்திரத்தை தாரை!
வார்க்க வேண்டும்!
எனது மனக்குதிரை!
விருப்பம்போல் மேயாமல்!
உனது லாயத்தில்!
கட்டிப் போடப்பட்டிருக்கும்!
அடிவானத்துக்கு அப்பால்!
சுதந்திரத் தீவொன்று!
இருக்கிறதாம்!
முயற்சி செய்து அங்கே!
போகிறேன்!
இல்லையேல் மீன்களுக்கு!
இரையாகி!
நடுக்கடலில் சாகிறேன்.!

----
01.
துயரத்தின் வாசனை!
என் அறையெங்கும்!
நிரம்பியிருந்தது!
தீர்ப்பு எழுதும் போது!
கைகள் நடுங்குகின்றன!
எல்லோரையும்!
சந்தேகக்கண்ணோடு நோக்குவது!
எனக்கு வாடிக்கையாகிவிட்டது!
கடவுள் தன்மைக்கு!
இடம் கொடுக்க மறுக்கிறது!
மனம்!
கடவுளுக்கு படுக்கையறையில்!
இடம் கிடையாது!
சாத்தானை விரும்பும்!
பெண்களின் கண்களில்!
காமம் கொழுந்துவிட்டு எரிந்தது!
இரவு நெருங்க நெருங்க!
இறையுணர்விற்கு விடை!
கொடுத்துவிட்டு!
பேயாய் மனம ஆட்டம் போடுது!
இருளுக்கு ஏங்கியலையும்!
சமூகம் தான்!
கூடிய விரைவில்!
பைத்தியமாக திரியப் போகிறது.!


02.!
விவகாரத்தில் மாட்டினால்!
தப்பிக்கும் வழி!
தானே தெரியும்!
எதையும் தனதாக்கிக் கொள்ள!
ஆசைப்படாதவன்!
கையேந்த யோசிக்க மாட்டான்!
அடுக்களையில் வடித்துக்!
கொட்டுபவளுக்கு வசதி!
செய்து கொடுக்க ஆசைதான்!
ரயில்பூச்சி போல்!
இருந்து கொண்டிருக்கலாம்!
யார் கண்ணுக்கும் உறுத்தாமல்!
குயில் போல கூவி!
தன்னிருப்பை காண்பித்தால்!
துரத்தப்படுவோம் கூட்டை விட்டு.!
!
03.!
இவன் பார்வையில்!
அவர்களெல்லாம்!
சுவர்க்கவாசிகள்!
வீடே கோட்டை மாதிரி!
என்றால்!
மற்ற வசதிகளைப் பற்றி!
கேட்கவா வேணும்!
வர்ற வட்டி போதும்!
குடும்பம் நடத்த!
இருந்தாலும் உத்தியோகம்!
புருஷலட்சணமல்லவா!
பட்ஜெட்டில் துண்டுவிழாதது!
இவர்களுக்கு மட்டும்தான்!
மத்திய தர வர்க்கம் தான்!
வாழ்வு வந்தால் குதிப்பதும்!
தாழ்வு வந்தால் அழுவதும்!
மேல்தட்டுவர்க்கத்தை வேடிக்கைப்!
பார்த்தால் கற்றுக் கொள்ளலாம்!
இன்னும் நிறைய.!
!
04.!
சமூகம் பணமுதலைகளைத்தான்!
ஹீரோவாக அடையாளம் காட்டுகிறது!
சுயமுன்னேற்ற புத்தகங்களைத்தான்!
வாசிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறது!
அறிவுவிருத்திக்காக படிப்பவர்களை!
அடையாளங்காட்ட முடியாது!
கோயிலுக்குள் சென்று!
பணத்தை யாசகமாகக் கேட்கும்!
பிச்சைக்காரர்களாகத் தான்!
இந்த வெகுஜனத்தை!
சமூகம் பழக்கிவைத்துள்ளது!
பணக்கட்டுகளுக்கு முன்னால்!
சித்தாந்தம் தோற்றுத் தான்!
போகிறது!
தலைவிதியென்று பொறுத்துக்!
கொண்டால்!
தரித்திரம் ஓடிவிடுமா என்ன!
வரம் கொடுத்த சிவன் தலையில்!
கைவைப்பது போல்தானே!
இடித்த கோயிலுக்குள்ளும்!
இறைவன் தானே இருக்கிறான்!
மீட்பரின் மலைப்பிரசங்கம்!
மீண்டும் தொடங்கட்டும்!
இம்மண்ணுலகில்.!
05.!
நீங்கள் இப்படி சொன்னால்!
எப்படி!
கண்களைத் தாழ்த்தி!
இப்படிக் கேட்பவரை!
நெஞ்சில் ஈரமில்லாமல்!
எதிர்கொள்வதற்கு பயிற்சி!
வேண்டும்!
காரியமாகவில்லை எனபதை!
சூம்பிப் போன முகம்!
காட்டிக் கொடுத்தவிடுகிறது!
இறப்புச் சான்றிதழ்!
பெறுவதற்கு கூட காசு!
தேவையாயிருக்கிறது!
இவர்களிடம் தேவைக்கதிகமாக!
பணம் சேர்ந்ததால்!
இயேசு பிரகடனப்படுத்திய!
விண்ணரசைக் கூட!
விலைக்கு வாங்க!
பேரம் பேசுகிறார்கள்!
அங்கு இது செல்லுபடியாகாது!
என்று அறிவித்தால்!
அதை ஏற்க மறுக்கிறார்கள்!
இறுதியில் நோய்!
வாய்ப்பட்டு!
சேர்த்ததையெல்லாம்!
மருத்துவ சிகிச்சையில்!
தொலைக்கிறார்கள்.!
06.!
எல்லா கேள்விகளுக்கும்!
விடை கிடைத்துவிடுகிறதா என்ன!
துக்கவீட்டில் யாராவது!
இறந்தவனின் வாழ்க்கையை!
சீர்தூக்கிப் பார்ப்பார்களா!
பழக்கப்பட்ட தெருவில்!
வீடுமாறி புகுந்து!
சங்கோஜப்பட்டு திரும்பும் போது!
முத்து பரல்கள் சிதறுவதைப் போல!
பின்புறத்திலிருந்து சிரிப்பொலி!
கேட்குமே அது அந்தவீட்டைக்!
கடக்கும் போதெல்லாம்!
இனி எதிரொலிக்கும்!
திக்குத்தெரியாமல் அலைபவர்களின்!
கண்கள் வேட்டையாடப்பட்ட!
மானைப் போன்றிருக்கும்!
வனவாசம் புகுந்தாலும்!
மனம் நசியாமல்!
பாம்பாய்ப் படமெடுக்கும்.!
!
07.!
தேவைப்படும்போது உபயோகித்துவிட்டு!
தூக்கி எறிந்துவிடுகிறோம்!
நிர்மூலமான நகரத்தில்!
ஆங்காங்கே முனகல் கேட்கிறது!
வண்ணத்துப்பூச்சியை பின்தொடர்ந்து!
சென்றால் வண்ணங்களைத்தான்!
யாசகமாக பெறலாம்!
மெளனத்தின் கால்தடங்களைப்!
பின்பற்றிச் செல்லும் போது!
வாழ்வின் மகத்தான தருணங்கள்!
புரிதலின்றி நகர்கிறது!
அப்போது பிரிதலின் அர்த்தம்!
புரிபட ஆரம்பித்தது போலிருந்தது!
வழக்கத்திற்குமாறான காலநிலை!
என்னை வாவென்றழைத்தது!
பெய்தது போதுமென்று!
பூமி நினைத்தது!
ஈசனின் சொரூபம்!
வானுக்கும் மண்ணுக்குமாக!
ருத்ரதாண்டவம் ஆடிக்களைத்தது.!
!
08.!
இந்த சமயத்திற்காகத்தான்!
நான் காத்திருந்தேன்!
நிழல் பொய் சொல்லாது!
ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலையை!
அனுசரித்துச் செல்லும்!
நிர்பந்தம் யாருக்கு!
விளக்கு வெளிச்சத்தில்!
இருளைத் தேடினேன்!
மின்மினியின் வெளிச்சத்தில்!
பாதையைக் கண்டறிய முடியாது!
நாளையப் பொழுதை!
நம்பினால் தான்!
காரியத்தில் இறங்க முடியும்!
பிறப்புக்கு முந்தியும்!
இறப்புக்கு பிந்தியும்!
என்ன நடக்குமென்று!
யாருக்கும் தெரியாது!
காலம் போடும்!
புதிருக்கு யாராலும்!
விடை காண முடியாது.!
!
09.!
கால தேச எல்லைகளைக் கடந்து!
ஒழுங்கமைவுடன் எல்லாவற்றையும்!
நடத்திக் கொண்டிருப்பவன் யார்!
தூக்கத்தில் ஒடுங்கிவிடுகிற மனது!
விழித்ததும் ஆரவாரிக்கிறது!
மத்திம வயதில் காசுக்காக!
அலைந்த மனது!
அந்திம காலத்தில் இறைவனின்!
காலடியைத் தேடுகிறது!
கட்அவுட்க்கு பாலாபிஷேகம் செய்யும்!
ரசிகர் மன்றங்களை நம்பித்தான்!
நாளைய இந்தியா உள்ளது!
பேனா முனையில் உரசலினால்தான்!
நீதி இன்னும் சாகாமல் இருக்கிறது!
காந்தி பிறந்த நாட்டில் தான்!
மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது!
ஏழை ஜனங்கள் தான்!
வாக்குரிமையை விற்றுப் பிழைப்பது!
பாமர மக்களின் தலையெழுத்தை!
யார் இங்கு நிர்ணயிப்பது.!
!
10.!
எழுத்து அவ்வளவு சீக்கிரத்தில்!
வசப்பட்டுவிடாது!
பாத்ரூமில் வார்த்தைகள்!
வந்து விழும்!
குறித்துக்கொள்ள காகிதம்!
இல்லாதபோது கரு பிறக்கும்!
சொற்களை தனதாக்கிக் கொள்ள!
நினைக்கும்முன் தப்பிவிடும்!
பாடுபொருளைத் தேடுவதில்!
சிக்கல் எழும்!
சரக்கை உள்ளே ஊற்றினால்தான்!
கற்பனைகள் சிறகுவிரிக்கும்!
அனுபூதி இருந்தால்தான்!
ஆற்றொழுக்காய் வரி பிறக்கும்!
தரையில் விழுந்த மீனைப் போல்!
துடித்தால் தான்!
எழுத்துலகில் அசைக்கமுடியாத!
ஓர் இடம் கிடைக்கும்.!
!

நாகரிகம் ஏனோ இன்னும்?

எதிக்கா
காலம் கடந்து உயிர் மூச்செறிந்து !
வானம் பொசுங்கியது !
வைகுண்டம் முதல் வங்கம் வரை !
பேரதிர்வு !
புத்தி பேதலித்துப் போன !
மனிதக்கூட்டம் !
சுத்திச் சுத்தித் தலையாட்டியே !
வாழ்க்கையைத் தொலைத்து கால்நூறாண்டுகள் !
கடந்து விட்டன !
வானுயர்ந்த மரங்களும் பத்தைகளும் !
அழிக்கப்பட்டு !
சூழல் சுத்தம் பெற்றுத்தான் என்னவோ !
இதனால் மீதியில் தொலைந்துபோனது !
இயற்கையும் மனிதத்தலைகளும் தான் !
காகம் இருக்க பனம்பழம் விழுந்ந கதை !
மீண்டும் மேடையேறியது !
தெளிவற்ற கருத்துக்கள் !
முடிவுகள் !
மனித வம்சத்தையே புதைக்க !
ஊன்றுகோலாகியது இப்போதான் !
போர்க்கால மேகங்கள் மெல்ல !
விலகுமென இருக்க !
போருக்கான ஆயத்தங்கள் ஏன் இன்னும்? !
பகட்டான வாழ்க்கை !
பாதகர் யாரும் உய்யவே வேண்டாம் !
உங்கள் வாயசைப்புக்கள் !
இன்னும் இன்னும் எத்தனையோ !
பாதகர்களை உரமிட்டுச் செல்லும் !
பேதமின்றி சமத்துவம் தொலைந்து !
போன பின்னும் !
நாகரிகம் ஏனோ இன்னும்? !
!
எதிக்கா

ஆட்டு மந்தைகள்!

பிரான்சிஸ் சைமன்
ஒரு வருடத்திற்கு முன்பு..!
மலையடிவாரத்தில்!
ஆட்டு மந்தைகளைப்போல்!
உன்னை வளைத்துப் பிடித்து!
ஜல அபிஷேகம் செய்து!
பின்னர் காவல்நாய்களிடம்!
ஒப்படைத்தன!
செம்மறி ஆடைத் தரித்த!
நரிகள்!
சீறி எழுந்தன!
ஆட்டு மந்தைகள்!
போகமாட்டோம்!… போகமாட்டோம்!!
இனி அந்த “மலையடிவாரத்திற்கு” என்று !
உறுதி மொழி கொண்டன!
ஒரு வருடத்திற்கு பின்பு…………!
பகல் கொள்ளை நரிகளின்!
உறைவிடமான !
அந்த “மலையடிவாரத்தில்!
மீண்டும் சங்கமத்தின!
ஆட்டு மந்தைகள் !
செய்தியை படித்தேன்!
ஒரே நேரத்தில் சிரிப்பும் அழுகையும்!
எனக்கு தரிசனம்!!!!
அடுத்த வருடமாவது!
ஆட்டு மந்தைகளுக்கு!
பகுத்தறிவு பிறக்கட்டும் என்று!
மலையடிவாரத்தில் குடியிருக்கும் அந்த!
“ஞானப்பண்டிதனைக்” கேட்டுக்கொள்கிறேன்.!

நள்ளிரவின் பாடல்

எம்.ரிஷான் ஷெரீப்
நடுத்தெருவில் விளையாடும்!
பூனைக்குட்டிகளைப் பார்த்திருக்கும்!
இரவொன்றின் பாடலை!
நான் கேட்டேன் !
மோதிச் செல்லக் கூடிய நகர்வன பற்றிய!
எந்தப் பதற்றமுமின்றி!
துள்ளுமவற்றைத் தாங்கிக்!
கூட விளையாடுகிறது!
சலனமற்ற தெரு !
யாருமற்ற வீட்டின் கதவைத் தாளிட்டு!
அந்த நள்ளிரவில் தெருவிலிறங்கி!
நடக்கத் தொடங்குகையில்!
திசைக்கொன்றாகத் தெறித்தோடி!
எங்கெங்கோ பதுங்கிக் கொள்கின்றன!
மூன்று குட்டிகளும் !
நான் நடக்கிறேன்!
தெரு சபிக்கிறது!
நிசி தன் பாடலை!
வெறுப்போடு நிறுத்துகிறது !
இந்தத் தனிமையும்!
இருளும் தெருவும்!
வன்மம் தேக்கி வைத்து!
எப்பொழுதேனுமென்னை!
வீழ்த்திவிடக் கூடும்!

புலராதோ நாளை ? கவிதை எழுத காத்திருக்கிறேன்

சத்தி சக்திதாசன்
நிலவில் களங்கமாமே !!
நேற்றொருவன் என் காதோடு!
சொன்ன கதை கேட்டுக் கொஞ்சம்!
சோபை இழந்தேன்.!
கவிதை பாடும் மனிதனல்லவா நான் ?!
கருத்துக்கே ஒளி கொடுக்கும் என்!
நிலவுக்கே களங்கம் என்றால்!
நிம்மதி அடையுமா என் நெஞ்சம் ?!
கைவிரல்கள் அசைய மறுத்ததால்!
கவிதைச் சுனை ஊற மறுத்ததால்!
கண்களை மூடிக் கொஞ்சம் தூக்கத்தோடு!
போராடிக் கொண்டிருந்தேன்!
சயனத்தின் சங்கீதம் இசைத்ததால்!
சத்தமின்றி என்னை!
நித்திரை அணைத்துக் கொண்டது!
கனவிலொரு ஒளியாக காற்றிலேறி!
கண்முன்னே புன்னகைத்தாள் என் தாய் !!
தமிழ்த்தாய் ......!
நித்தமும் கவிபாடி களித்திருந்தாய்!
நித்திரையில் கூட உன் கைகள்!
மனத்திரையில் வரைவது கவிதை வரிகள் தானே ...!
ஏன் மைந்தா உனக்குக் கலக்கம் ?!
எவர் சொன்னார் உனக்கு எதனை ?!
தாய்மைக்கே உரித்தான கனிவோடு!
தலை நிமிர்த்தி எனை நிறுத்தி!
தாங்கிக் கொண்டாள்.....!
புரிந்து கொண்டேன் மகனே!
காய்ந்து போன உன் கவிதைச்சுனையின்!
காரணத்தை நானும்!
நிலவில் களங்கள் என்று சொன்னவன்!
நீரிலே எழுத்துப் போன்றவன்!
மகனே !!
கவிஞன் ....!
காற்றுப் புக முடியா இடையினுள்!
கண்மூடித்திறப்பதற்குள்!
களவாகச் சென்று வருபவன்!
சூரிய ஒளி பட முடியாத இடத்தின் மீது!
குளிர்மையாகப் படர்ந்து!
குறுங்கவிதை படிப்பவன்!
பைத்தியக்காரன் அவன்!
பத்தும் சொல்வான்!
பற்றியெறியும் நெருப்பின் மேல்!
படர்ந்திருக்கும் பனி போல!
நியாயமற்ற இந்தச் சமூகத்தில்!
நாளைய நடப்புக்களைச் சொல்வோர்!
நேற்றைய தவறுகளை அறிவோர்!
எனதருமைக் கவிஞர்களே ....!
தளராதே...!
தனயா... கண்விழித்து எழுந்ததும்!
கருத்து மேகத்தைக் குவித்து!
கவிதை மழையெனப் பொழிந்து விடு!
குளிர்காலத் தென்றலென!
நிலவுதனை உனது கவிதை தழுவட்டும்!
அப்போது....!
நிலவு உன்னைப் பார்த்துப் புன்னகைக்கும்!
நிலவில் களங்கமுண்டா ? எனக் கண்டு கொள்வாய்...!
நெஞ்சம் நிறைவாக!
அன்னை பாதம் பணிந்து!
அடுத்தநாள் காலை தனை!
ஆவலாய்ப் பார்த்திருந்தேன்!
!
-சக்தி சக்திதாசன்

மரணத்தின் ருஸி

கருணாகரன்
ஒரு ஆட்டுக்குட்டி !
என்றும் நினைப்பதில்லை!
தன் கழுத்தில் விழக்காத்திருக்கும் கத்தியை!
என்றும் அது அறிவதில்லை!
தன்னை வளர்ப்போனே !
ஒரு கொலையாளன் என்பதை!
!
சாவுக்குப்பிறகும் !
தனது குருதியும் மாமிசமும் !
மகிழ்ச்சிக்குரிய பண்டமாகிப் போகுமென்று !
துள்ளுகிறது மகிழ்ச்சியுடன்!
அழகாக!
நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.!
பிறகொருநாள் மடிகிறது!
நமது குருரவெளியில் எந்த நிபந்தனையுமின்றி!
அது !
நமக்கு ருஸியாகிப்போகிறது

துயரின் தொடக்கம்

த.அகிலன்
எப்போதும் !
ஏதேனுமொரு !
புன்னகையிலிருந்தே !
ஆரம்பிக்கிறது துயரம் !
ஓர் !
புன்னகையில் இருந்து !
மற்றுமோர்!
புன்னகைக்கு !
வழிநெடுக !
புன்னகைகளை !
வாரியணைத்தபடியும் !
ஒவ்வோர் !
புன்னகையின் !
முகத்திலும் !
தன்னை !
அறைந்தபடியும் !
பயணிக்கிறது !
துயரம் !
அது தன் !
தீராக்காதலோடு !
தொடர்ந்தும் இயங்கும் !
இன்னொரு !
புன்னகையைநோக்கி !
!
-த.அகிலன்

தூறல் கவிதை... 365 ஆவது நாள்

முத்துவேல்.ச
தூறல் கவிதை!
*நேற்றிரவு பார்க்கத்!
தவறிய மழை!
கண்ணில் படும்!
நிலப்பரப்பெங்கும்!
தன் ஆளுமையை நிறுவியிருந்தது!
கம்பி வேலியில்!
செடி ,கொடிகளில்!
முத்து முத்தாக...!
ஒரு குறுமரத்தின்!
கீழே நின்று!
ஒருமுறை உலுக்கிவிட்டு!
லேசாய்!
நனைந்து கொண்டபோது!
ஈரம் சுமந்த மனம்!
ஏன் லேசானது?!
!
உன்னருகில் நான்!
உன் பெரிய கரிய!
விழிகள்!
எப்போதும் மிரண்டு!
மருண்டிருப்பது!
கொள்ளை அழகு...!
இன்னும் அழகு!
கருவிழிப் படலத்தில்!
நான்மிதக்கும்போது.!
ஹைக்கூ கவிதைகள்!
நானும் எடுக்கவில்லை!
சாலையில் நாலணா!
நாலணா என்பதால்!
!
கதவு திறந்ததும்!
தப்பியோடிய கரப்பான்!
தண்ணீரில் விழுகிறது!
!
காணாமல் போனவனை!
பிடித்து வைத்துள்ளது!
புகைப் படம்!
!
365 ஆவது நாள்!
காற்றில் படபடக்கும் தாள்கள் தாங்கிய!
நாட்காட்டிகள் ஒவ்வொரு அறையிலும்!
தேவைக்கும் அதிகமாகவே...!
வணிக உத்தியாய் வந்தவை சில...!
அன்பளிப்பாய் வந்தவை சில...!
அன்பளிப்பு என்ற பெயரில் சில...!
புகைப்படத்தில் சிரிக்கும்!
ஊர் பெரும்புள்ளியின்!
கூப்பிய கரங்களுக்குள்!
குறுவாள் ஒளிந்திருக்கலாம்,!
குருதிக் கறையோடு...!
எவ் வருடத்திற்கும் பொருந்தும் வகையில்!
ப்ளாஸ்டிக் நாட்காட்டி ஒன்று மட்டும்!
எப்போதும் ஒரே நாளை காட்டிக்கொண்டிருப்பது!
இல்லத்து அரசியின் ஏற்பாடு...!
ஒரு நாளைக்கு இருமுறை!
சரியாய் மணிகாட்டும்!
ஓடாத கடிகாரம்!
எவ்வளவோ தேவலாம்!
வருடத்தில் ஒருநாள் மட்டும்!
சரியாய் நாள்காட்டும்!
இந் நாட்காட்டியை விட...!
மாற்றப்படாத அந்நாள்!
மறந்துவிடக்கூடாது!
என்பதற்காக அல்லவாம்!
நினைத்துக் கொண்டே இருக்கத்தானாம்...!
அப்படி என்ன சிறப்பு !!
அந்த ஒரு நாளில் மட்டும் ?!
இப்போதும் நீங்கள்!
அவள் வீட்டிற்குச் சென்றால் பார்க்கலாம்!
உப்புச் சப்பில்லாததற்கெல்லாம்!
திட்டிக்கொண்டிருக்கும் அவள் கணவனையும்!
அவன் பிறந்த நாளுக்காய் காத்துக்கொண்டிருக்கும்!
அவளையும்,அந்த நாட்காட்டியையும்

இந்த நிஜமான உணர்வு

நவஜோதி ஜோகரட்னம்
உனக்கும்!
எனக்குமான!
இந்த நிஜமான உணர்வு!
எப்போதும்!
புதுமையான ஒன்றாக!
அதீதத்துக்குரியதாக!
அழகானதாக!
ஆசையானதாக!
அழுவதாக!
இளமையடைவதாக!
குழந்தையைப்போலதாக!
கலைத்தோய்வு உள்ளதாக!
உணர்ச்சிவசப்பட்டதாக!
உயிர்ப்புள்ளதாக!
உற்சாகம் நிறைந்ததாக!
உறங்கிப்போவதாக!
பறப்பதாக!
பரிதாபகரமானதாக!
புன்னகையுடையதாக!
மௌனமானதாக!
மென்மையாக!
கண்காணிக்கப்படுவதாக!
கனவுகாண்பதாக!
பகல்பொழுதாக!
விழித்துக்கொள்வதாக!
வயப்படுவதாக!
ஒளிர்ந்துகொண்டிருக்கிறதாக!
ஒரு இருத்தலியாக!
வாழ்ந்துகொண்டிருக்கிறதாக!
கொடியதாக!
பிடிவாதமாக!
பொறாமையுடையதாக!
மூப்படைவதாக!
புண்படுத்துவதாக!
நம்பிக்கையிழந்ததாக!
நடுக்கமுடையதாக!
சிரிப்புடையதாக!
மோசமானதாக!
மிருதுவானதாக!
முட்டாள்தனமாக!
மறக்கப்படுகின்றதாக!
மறுக்கப்படுகின்றதாக!
துரத்தப்படுகின்றதாக!
தொடரப்படுகின்றதாக!
நிஜமானதாக!
நினைவிருக்கிறதானதாக!
உனக்கானதாக!
எனக்கானதாக!
இருவருக்குமானதாக!
இல்லை!
அனைவருடையதானதாகவும்...!
தனித்தவமானதான!
நீயும்!
நானும்!
நாமிருவரும்!
போகலாம்!
வரலாம்!
இந்த நிஜமான உணர்வில்

வெறுத்துப்போதல்

முஹம்மட் மஜிஸ்
வலி மிகைத்து!
ஆக்ரோஷமாய்!
மெல்லிய படர்தலின்!
இடர்பாட்டில்!
தோற்றன கனவுகள்!
மெய்களை கடந்த!
பொய்கள் அதன்!
ஆழங்களையும் அகலங்களையும்!
ஜடம் மறைத்து!
உயிர்த்தது!
சயனம்!
சபித்த இருள்கள்!
சூனியத்தை ஜெயித்தன!
சுயம் வன்மைகளை!
கௌரவிக்க பழகின!
ஜனநாயம்!
குரல் நெறித்து!
தற்கொலை செய்தன!
தலைகள் வெறுத்து!
கிரிடம் கால்களிலே!
பாவம் நான்!
தனியாகத்தான்!
நிற்கிறேன்!
வாக்கு நிராகரித்தோர்!
பட்டியலில்