கொடுப்பவர்கள்!
------------------------------------------------!
மாலைப் பொழுது மலையிடம் மறைவிடம்!
கேட்டுக் கொண்டிருக்கும் சூரியன்!
பாதி வானத்தில் பறந்து கொண்டிருந்தது!
பறவைகளும் பட்டங்களும் !
கடலைக் காட்டைக் காவல் காத்திடும் பொம்மை!
கரையான்களை உண்ணும் - கோழிகள்!
விரட்டும் சிறுவர்கள்!
கோரைப்புல் மேய்ந்து கொட்டகை திரும்பும்!
ஆடுகள், மாடுகள் - வளைந்தோடும்!
வாய்க்கால் - கறை நீக்கக் கரும்பாறைகள்!
மதகுவழி வயல் காணும் வெண்நுரை பொங்குநீர்!
தடம் மாறி வெளி கண்ட மீன்கள்!
களை பறிக்கும் கூலியாட்கள்!
அறுத்த புல் நிரப்பும் வண்டிக்காரன்!
பல்துலக்க வேலங்குச்சியொடிக்கும் மேய்ப்பன்!
கபடி ஆடிக் களைத்த காளையர் சிலர்!
தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகள்!
விளையாடி வீடு திரும்பும் வெள்ளைச் சட்டைகள்!
கரட்டை நலம் விசாரிக்கும் காற்று!
தென்னை மரத்தை தூணாக்கிய வீடு!
அடுப்பின் பசி போக்க விறகு சுமக்கும் கிழடுகள்!
உலர்ந்த ஆடைகளை உதறியெடுக்கும் சிறுவர்கள்!
பசுமாடு நோக்கிப் பாய்ந்தோடும் கன்று!
வெட்டிக்கதை பேச ஏரி நோக்கும் இளசுகள்!
வேலிப்புதர் பற்றியதோவென பதற வைக்கும்!
பீடிப் பிரியர்கள் - கள்ளுண்ணும் கருப்பன்கள்!
இருவேளையும் குளித்து விடும் சுத்தக்காரர்கள்!
இலந்தை பழம் உலுக்கி உதிரத்தோடு!
வழி நடக்கும் பரட்டைத் தலைகள்!
உழுது போட்ட காடு; காய்ந்த மண்; கழுவாத ஏர்க்கலப்பை!
விடுப்பெடுத்து ஒதுங்கிடும் கரட்டுக் கோயில்!
எலிக்கு கண்ணி வைக்கும் தோட்டக்காரன்!
மீனுக்கு தூண்டில் போடும் விடலைகள்!
வழியில் பூத்திருக்கும் வாசனை மலர்கள்!
குலை தள்ளிய வாழை மரங்கள்!
மணம் பரப்பும் மஞ்சள்!
நெடி வீசும் புகையிலை!
கடித்திட தூண்டும் கரும்பு!
கசக்கிட தோன்றும் நெற்கதிர்கள்!
இரகசியம் தாங்கிடும் பூவரசமரம்!
இன்னமும் இதுபோல் எத்தனையிலோ!
பொதிந்திருக்கிறது எனக்கான சொர்க்கம்
முத்துசாமி பழனியப்பன்