சட்டையைக் கழட்டிவிட்டு !
சகாப்தத்தை மாட்டிக் கொண்டவன். !
அகிம்சையைக் கையிலெடுத்து - மற்ற !
ஆயுதங்களின் கூர்மையைக் !
கேள்விக்குறியாக்கியவன் - உன் !
கைகளின் பார்வைக்குப் !
கால்கள் பல பதிலாயின. !
கண்களின் ஒளியிலோ !
கடமைகள் தான் தெரிந்தன. !
சட்டம் என்கிற சாக்கடையினால், !
திட்டமிட்ட குற்றவாளியாகி !
நீதிமன்றம் வந்தபோது, !
ஒட்டுமொத்த மன்றத்தையே எழவைத்த, !
மாண்பினை மகத்துவமாய்ப் பெற்றவன். !
நோபல் பரிசு உன்கைகளில் தவழும் !
நிறைவினை அடையவில்லை - இன்றோ !
நிகழ்வாய், மிக நெகிழ்வாய், !
வன்முறைக் கெதிரான !
உலக தினமாக !
உன் பிறந்த நாள் !
உருமாறிய போது - உன் !
மனதுக்குள் இருந்து சிறந்த !
மகத்துவம் இன்னும் வெளிச்சமாகிறது

சித. அருணாசலம்