என் சாளரத்தின் வெளியில் .. நீ - ஆ.மணவழகன்

Photo by Hasan Almasi on Unsplash

நான் உன்னைப் பார்க்கிறேன்.. !
நீ அழகாக இருக்கிறாய்! !
மீண்டும் உன்னைப் பார்க்கிறேன் !
நீ அழகாகவே இருக்கிறாய்! !
மேகம் மூடிய நீ - வாழ்வின் !
சோகம் சூடிய சுவடு என்றான் !
ஒருவன்! !
நீ தேய்வது .. !
நிச்சயித்து நிரந்தரப்படுத்துவது - இப்புவியில் !
ஏதுமில்லை என்பதால் என்றான் !
ஒருவன்! !
நீ வளர்வது.. !
வந்த துன்பம் வாழ்வில் என்றும் !
நிலைப்பதில்லை என்பதால் என்றான் !
ஒருவன்! !
நீ தேய்வதும் தேய்ந்தும் வளர்வதும் !
இன்ப துன்பத்தின் சமநிலை என்றான் !
வாழ்ந்து பார்த்த !
ஒருவன்! !
தன்னுள் களங்கம் வைத்து - அது !
உன்னுள்ளும் உள்ளதென்றான்.. !
வாழத்தெரிந்த !
ஒருவன்! !
இல்லாமல் போவது !
உனக்கும் இருக்கிறதாம் !
தேற்றிக்கொண்டான் - தன் தேவையுணர்ந்த !
ஒருவன்! !
உன்னை, !
விட்டெறிந்த இட்லி என்றான்... !
வெட்டிப் போட்ட நகம் என்றான்.. !
சுட்டெறிந்த அப்பளம் என்றான்.. !
வானிற்குத் தோன்றிய கொப்புளம் என்றான்.. !
தோழியர் சூழ வரும் மங்கை என்றான்.. !
தோழர் சூழ வரும் மன்னன் என்றான்.. !
--------- --------- ---------- என்றான்.. !
--------- --------- ---------- என்றான்.. !
எப்போதும் போல என் சாளரத்தின் வெளியில் நீ!!
எல்லோரும் உன்னைப் பார்க்க - நீ !
மட்டும் என்னைப் பார்க்கிறாய்! !
நான் நிலவைப் பார்க்கிறேன் - அது !
அழகாக இருக்கிறது - அது !
அதுவாக இருக்கிறது! !
*** !
ஆ. மணவழகன்
ஆ.மணவழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.