சத்தி சக்திதாசன் !
அந்தி நேரத்தில் அதே மரத்தின் கீழ் !
அமர்ந்து நான் !
அதே இசையத் திரும்பக் கேட்க வேண்டும் !
!
என்னை சுற்றி இயங்கும் இந்த இயந்திரங்களை !
எறிந்து விட்டு பச்சைப் புல்லு !
அதன் காதோடு ஓர் கதை !
சொல்ல வேண்டும் !
அதற்கொரு நிஜமான விடுதலை வேண்டும் !
!
பச்சைக்கிளி தன் குஞ்சுகளுக்கு கிள்ளை !
மொழியில் பாடும் அந்தத் தாலாட்டைக் !
கேட்க நீண்டதொரு நிசப்தம் !
வேண்டும் !
!
காக்கா தன் கூட்டில் வளர்த்த அந்தக் !
குயில்க் குஞ்சை இனம் கண்டு விரட்டும் !
போது கரையும் காரணங்களை அறிய !
சலனமற்ற அமைதி வேண்டும் !
!
அதற்கொரு சிக்கலற்ற விடுதலை வேண்டும் !
!
கடற்கரை மணலினிலே நான் வரைந்த !
சித்திரத்தை தேடிவந்து அழிக்கும் !
அந்தக் கடலலையின் ஆசையின் !
ஓசையை நான் கேட்க அமைதி வேண்டும் !
!
ஒற்றுமைக்கோர் உதாரணமாய் உலகில் !
ஒழுங்குமுறைக்கோர் எடுத்துக்காட்டாய் !
ஓயாத உழைப்பின் வடிவமாய் !
உணவு சேர்க்கும் அந்த !
எறும்புகளின் அணிவகுப்பின் ஆணையைக் !
கேட்க ஆசை ,அதற்கான அமைதி வேண்டும் !
வித்தியாசமான விடுதலை வேண்டும் !
!
வண்ணப்பூக்களின் வர்ணமெடுத்து சிறகமைத்த !
வண்ணத்திப்பூச்சியின் சிறகெழுப்பும் அந்த !
ஓசையின் ஆழத்தைக் கேட்க ஓர் !
அமைதி வேண்டும் !
!
தேனெடுத்துத் தான் சுவைக்க மலரை மயக்க !
தேனீ பாடும் அந்த சங்கீதத்தின் !
சந்தங்களை முழுவதுமாய் அறிய !
ஒருமணி நேரம் அமைதி வேண்டும் !
!
விடியா இரவுகளில் இருந்து விடிவு தர !
ஓர் விடுதலை வேண்டும் !
!
என் தாய் நடந்த மண் கண்மூடி நாளாச்சு !
நான் தவழ்ந்த முற்றம் முழுதாய் !
ஓரிரவு தலை சாய்த்து வருஷங்கள் !
பலவாச்சு அதற்கெனவே !
நீண்டதொரு அமைதி வேண்டும் !
இருள் சூழ்ந்த ஈழத்தின் குழந்தைகள் !
இதயத்துத் தோட்டத்தில் !
மகிழ்வெனும் முல்லை படர மாறாத !
அமைதி வேண்டும் !
நிச்சயமாய் ஓர் விடுதலை வேண்டும்
சத்தி சக்திதாசன்