அம்மைத் தடுப்ப்பூசி மருத்துவர்!
அமர்க்களமாய் வந்திறங்கினார்!
திருக்கூசி டாக்டரு!
தெருவில நிக்கான்டோய்!
ஓடீருங்க,ஒழிஞ்சிக்கோங்க!
சத்தம் கேட்ட நொடியில!
எட்டுப் பக்கமும் பறந்தோமே!
எப்படி ஒடுனோமுன்னும்!
எங்கே ஒழிஞ்சோமுன்னும்!
எங்களுக்கே கூட தெரியாதே!
!
பரனுக்கு மேலே!
பலக கட்டிலுக்குக் கீழே!
குதிலு பானைக்கு உள்ளே!
மதிலு படலுக்கு வெளியேன்னு!
ஒன்னொன்னா புடிச்சி!
ஒட்டுமொத்தமா போட்டு முடிக்க!
ஒருநாள் பொழுதும்!
முழுசா ஆகிப்போச்சே!
பத்து வயசு வரைக்கும் ஊசிய!
பக்கத்தில கூட பாக்காத்தால!
பயத்தில வந்த காய்ச்சல்!
அஞ்சுநாளாகியும் பயபுள்ளைங்களுக்கு!
கொஞ்சங்கூட கொறையலியே அன்னிக்கு!
ஊசியக் காமிச்சாதான இன்னிக்கு!
கொழந்த கூட பொறக்குது!
ஊசியிலும் மருந்திலும் தான!
ஒலகமே இங்க இயங்குது!
-துரை
துரை.ந.உ