வீங்கிப் புண்ணான கழுத்தோடு!
விளக்கிச் சொல்ல வாயின்றி!
ஓட்டுபவனின் உதைக்குப் பயந்து!
ஓட்டமாய் வண்டி இழுத்துச் செல்லும்!
ஒற்றை மாடு!
தன்னைப் பெற்ற ஏழைக் கூலித் தாயோ!
தரிசு நிலத்திலே பசுவுக்குப் புல் புடுங்க!
பசியால் துடிதுடிக்கும் பத்துமாதத் தங்கையை!
பாதி இடுப்பிலே தூக்கிச் சுமக்கும்!
பாவாடை கிழிந்த மூன்று வயது அக்கா!
பச்சைப் பசேல் காட்டுக்குள்ளே!
பாடிப் பறக்க முடியாமல்!
வெட்டப்பட்ட சிறகுகளுடன்!
பெட்டிக்குள் அடைக்கப்பட்ட!
பச்சைக்கிளி!
பத்து மாதம் சுமந்து பெற்ற!
பச்சைக் குழந்தையை!
கால் வயிற்றுக் கஞ்சிக்காக!
கால் காசுக்கு விற்றிட்ட!
ஏழைத் தாய்!
எத்தனையோ ஜென்மங்களை!
எழுதிடத்தான் முடியலை!
என் கண்ணில் பட்டவற்றை!
எழுதாமல் இருக்கவும் முடியலை!
உன் கண்ணில் எதிர்பட்டால்!
உன்னால் முடியும் செயல்படு!
உன் நண்பன் கிளி வளர்த்தால்!
உடனே சொல்லித் திருத்திடு!!
ஜான் பீ. பெனடிக்ட்!
வாசிங்டன்

ஜான் பீ. பெனடிக்ட்