எனை சுற்றி ஆள் அரவங்கள்!
எழுந்திருக்கும் நேரம்!
சூரியன் வந்தால்தான்!
எல்லோரும் எழுவாங்களாமே!!
நடைபாதையில்தான்!
என்வீடு!
எப்படியிருக்கும் என்று தெரியாது!
யாரவது பேசும் சப்தம் கேட்டால்!
கை தட்டை தேடுகிறது!
ஆன்செய்த ரேடியோவாக!
அம்மா தாயே!
கண்ணுதெரியலைங்க!
பிச்சைபோடுங்க!
(யாருமற்ற ரோட்டில்)!
!
கவிதை: பாண்டித்துரை
பாண்டித்துரை