சேட்டுக்கடையில் அடகுவைத்த!
செப்புச்சருவம்!
கட்டாத வட்டியில் மூழ்கிப்போக!
பதிலுக்கு இரண்டாய் !
பிளாஸ்டிக் குடங்கள் வாங்கி!
சொல்லிக்கொண்டாள்!
'தூக்கிச் சுமக்க !
இதுதான் நல்ல வசதி..'!
கழுத்தில் கிடந்த !
பொட்டுத்தங்கத்தை!
கஞ்சிக்காய் விற்ற பொழுதும்!
மேம்போக்காக சொல்லிக்கொண்டாள்!
'இனிமேலாவது இருட்டுல!
பதறாம போய்வரலாம்..'!
கல்யாணவயதை !
கடந்து நிற்கும் மகளை!
இரண்டாம் தாரமாய் கேட்டுவர!
சரியென்றவள் சாவகாசமாய்!
காரணமும் சொன்னாள்!
'மாப்பிளைக்கு வயசவிடவும் !
அனுபவம் முக்கியந்தான்..'!
உள்ளுக்குள் கதறியழும் !
மனதுக்கும் ஆறுதல் சொல்ல!
தனக்குத்தானே ஒரு காரணமும் !
தேவைபடுகிறதுதான்!!
!
-கோகுலன்
கோகுலன்