வண்ணத்துப்பூச்சிகளின் உரையாடல்!
இன்னமும் தொடர்கிறது.!
வானவில் நிறம் காட்டி!
கலர் கலராய்ப் பறக்கும் பூச்சிகள் அவை.!
அப்பொழுதிருந்தே இந்த வண்ணத்துப்பூச்சிகளும்!
வானவில் நிறங்களும்!
இருந்ததென்றுதான் சொல்கிறார்கள்.!
ஆனாலும் வானவில் நிறங்கள்!
மழை நீரில் அழிந்து விடும் என்றும் சொன்னார்கள்.!
அது பொய்!
அது காலம் காலமாய் உயிர்வாழ்கிறது.!
வானவில் நிறங்களுடன்!
இன்னமும் வாழும் போலிருக்கிறது.!
தனிவெள்ளை சாம்பல் சிவப்பு கறுப்பு!
இன்னும் பொட்டுப்போல்!
பலவண்ண இறக்கைகொண்ட வண்ணத்துப் பூச்சிகள்.!
ஒவ்வொன்றும் கூட்டத்தோடு பறக்கும்போது!
பார்க்க அழகுதான்.!
எப்போதும் ஓரினப் பூச்சிகள் ஒன்றாகவே பறப்பதுண்டு.!
கலந்து திரியும் பூச்சிகளும் உண்டு.!
தேன்குடிக்கும் பூச்சிகள்!
எவ்வூரும் செல்லும்.!
தேடித்தேடித் தேனெடுக்கும்.!
ஆனாலும் அவை எல்லாம்!
ஒன்றாய்ப் பறந்ததும் இருந்ததும் மிக அரிது.!
இந்த வண்ணத்துப்பூச்சிகளுடன்!
கூர்வாள் உணர்கொம்பு கொண்டவையும்!
பறக்கத் தொடங்;கி விட்டன.!
அவை!
தம் உணர்கொம்புகளைக் காட்டிப்!
பயமுறுத்துகின்றன.!
அவற்றுடன் இவை எப்போதும் ஒட்டியதுமில்லை.!
சேர்ந்து தேனேடுக்க விரும்பியதுமில்லை.!
ஆனாலும் அவை!
இப்போ எல்லா நிற வண்ணத்துப்பூச்சிகளையும்!
நன்றாக இனங்காணத் தொடங்கிவிட்டன.!
சிலவேளை@!
தேனெடுக்கும் சோலைகளில் வழிமறித்து கேட்கின்றன!
நிறமறிந்து�!
நீ வானவில் நிறமா?!
தனித்தனி நிறமா என்று?!
இவை எப்போதும் சொல்லிக் கொள்கின்றன.!
நாங்கள் வண்ணத்துப் பூச்சிகள் என்று!
ஆனாலும் தனித்தனிக் குரல்களில்.!
வண்ணத்துப் பூச்சிகளின் கேள்வியோ பூமியை முட்டிவிட்டது.!
கூர்வாள் உணர்கொம்புகளும் கேட்கத் தொடங்கிவிட்டால்?!
மூச்சு முட்டுகிறது.!
செத்துவிடலாம் போலிருக்கிறது.!
செட்டைகளை பிடுங்கி எறிந்து விட்டு.!
!
- துவாரகன்

துவாரகன்