உன் கவிதைமொழிகளைப்!
பிரசவிக்காத!
மலடாய் இருக்கிறது!
என் அலைபேசி!
இப்போதெல்லாம்...!
சினுங்கிச்சினுங்கி,!
உன் சினுங்கலை!
எனக்குள் கடத்த,!
மறந்து கிடக்கிறது!
அது மெளனமாய்...!
என்னை என் விரல்கள்!
நினைவுகூறுவதற்காய்!
இன்றும் காத்திருக்கிறேன்!
நானும் அதை!
வெறுமையாய் பார்த்தபடியே...!
கடல் அலைகளில்!
நனையும் உன் பாதங்களில்!
தொலைத்த என்னை இந்த!
மின்னலைகளில்!
தேடிக்கொண்டிருக்கிறேன்...!
என்னுயிரின் விசும்பலை!
உன்னழகால் பிடுங்கி!
அதனிடம் தந்துபோனவளே...!
அள்ளித் தருகிறேன்!
என்னுயிரை...!
வைத்துக்கொள்வாயா பத்திரமாக!
உன் இதயத்தில்
ராம்ப்ரசாத், சென்னை