01.!
தீரா!
-------!
இரை தேடவும்!
இரை தின்பதற்கென்றுமே!
விடிந்து தொலைக்கிறது!
ஒவ்வொரு நாளும்!
முடிந்தும் போகிறது!
தின்று தீர்த்ததும்!
உச்சி வெயில் பார்த்து!
மல்லாந்து கிடந்து!
மரித்துப்போன எலியின்!
வளையிலும்,!
கொத்திக்கொத்தி!
இறைச்சி சேகரித்த காக்கையின்!
கூட்டிலும்,!
காத்திருக்கும்!
சில பசித்த குஞ்சுகள்!
02.!
ஆவது!
----------!
எப்படியெல்லாமோ!
ஆக வேண்டுமென்று!
ஆசையிருந்து!
எப்படியெல்லாமோ ஆகியும்!
விட்டாச்சு!
இப்போது யாருமே கேட்பதில்லை!
என்னவாகப்போகிறாய்?!
என்னுள் ரகசியமாய்!
முளைவிடத் தொடங்கியிருக்கிறது ஆசை!
ஒரு பெரிய்ய்ய்யய்யய்ய்ய்ய மலையோ,!
ஒரு பெரிய்ய்ய்யய்யய்ய்ய்ய கடலோ,!
ஒரு பெரிய்ய்ய்யய்யய்ய்ய்ய வானமோ,!
ஒரு பெரிய்ய்ய்யய்யய்ய்ய்ய பூதமாகவேனும்!
ஆகிவிடுவதென்று!
ஆனபின் ஏதுவாயிருக்கும்!!
எப்போதும் விரிந்தேயிருக்கும்!
கதைசொல்லும் குழந்தைகளின் கைகளுக்குள்!
என்னைச் சரியாகப் பொருத்திக்கொள்ளலாம்

சேரல்