துளிகளைத் திரட்டி துயரைதுடைப்போம்
கண்ணப்பு நடராஜ்
வான் அமுதை ஏந்து !
வளமான நதியாக்கு !
வட்டமிடும் ஆறு !
வளத்தின் வாயாகும் !
புகழ் காலாகும்,!
எம் பூமியை !
நாம் ஏந்திய எம் நீரோடும்!
பாலையிலே கால்வாய் !
அது ஆகட்டும், !
அந்தப் பூமி !
மடி நனைக்கும் நிலதுளை நீரோ !
வெள்ளிக்காசைக் காட்டும்!
வாய்க்கால்கள் ஆகும் , !
வரப்புயர நெல்லு உயரும் !
சொல்லிய மூதாட்டி !
எம்மவர் அறியாயோ.. !
வா வரப்புக்கள் செய்வோம் !
நிலம் சூழ் வரப்புக்கள் செய்வோம் !
வா எம் தமிழ் நிலப் பரப்பை !
கடல் கொள்ளா வரப்புக்கள் கட்டுவோம்.. !
வான் துளி நீரெல்லாம் !
தாழ்வாரச் சொட்டுக்களெல்லாம் !
மேட்டில் கொட்டும் !
காட்டு மழையினை !
கும்பிடு கையைக் குவித்து !
வானை நோக்கி ஏந்தி !
அதில் வற்றாத !
நதி செய்வோம் வா,!
வான் சிறப்புச் சொன்ன !
வள்ளுவன் நல்ல தமிழன்..,!
வா வரப்புக்கள் கட்டி !
செல்வம் சேர்ப்போம்.. !
நம் தாயும் !
இனி வரும் தமிழ் குழந்தைகளும் !
தமிழ் நாடும் !
அயல் குழந்தைகளும் !
வான் முலையில் வற்றாமல் குடிக்க .., !
கொள்ளை நீர் !
கடலில் கலந்தாலும் க!
டனாய் அளவாய்க் !
கண்ணீர் கலவாய் !
எவன் தருவான் நீரை!
வேண்டாம் பிச்சைப் பாத்திரம் !
எம் நிலம் !
நீரை வடித்து வைக்கும் !
பெரும் பாத்திரம் இருக்கையில் .. !
அதோ !
சூழ் அந்தக் பெரும்பரப்புக் கடலின் ஆவியையும் !
திரட்டிகுளிராக்கு, அ!
தை எம் நிலம் நோக்கித் திருப்பிப் பயிராக்கு.. !
தமிழா நீ தலை நிமிர்த்து !
வெள்ளம் வந்தால் !
பெருக்கென்று சொல்லு !
அது செல்வப் பெருக்கென்று சொல்லு.. !
நிலமெங்கும் ஓட்டை செய் !
கங்கையை எம் மண் காவட்டும் !
அந்தப் புனித நீரை நிறைத்திடு !
நிலக்கீழ் நீரென்ற !
புதையலை நம் வாரிசுகள் எடுக்க.. !
இனி இல்லை !
இல்லாப் பயிர் செய்ய வா, !
நீர் உண்டு!
நில மடியில் வற்றா ஆறுண்டு..!
மேடாக்கி அணை செய்து !
கடலைக் கோளைக் கட்டுப்படுத்து, !
தோண்டிக் கண்ட பள்ளத்தில் ஆற்றை ஆக்கு, !
ஓடி வரும் நீரமுதை !
குளமெல்லாம் தேக்கும், !
குலமெல்லாம் ஒன்றாகும், !
ஆறெல்லாம் நீர் சுமந்து குளம் குட்டை நிரப்பும்,!
வான் ஓட்டை போடும் !
விண்கோள் ஏவி விளையாடியது போதும், !
மண்துளைத்து !
மழை நீர் செல்ல வழி சொல்லு போதும், !
கையுண்டு !
கன மனிதர் தான் உண்டு,!
நீர் துளை நீ போடு.. !
காற்று நீரைக் கைப்பற்ற !
காட்டு வேலி எல்லையெங்கும் போடு.. !
உணவு உண்டு !
நீரமுது உண்டு எம் கையில், !
கோடையிலே மண் அகழ வா!
பெரும் வாய்க்கால் செய்வோம் வா.. !
ஒரு நாளை ஒதுக்கி!
ஒரு கடகம் மண் எடுத்தால்!
மாரி மழை வற்றாத நீரூற்றை மண் மடி சுரக்க வைக்கும், !
வா மலட்டு மண்ணை !
வேர் பற்றி செழிக்கசெய்வோம்.. !
கரை தாண்டி !
கடல் கலக்கும் நீரை !
நிலத்துள்ளே சிறைபடுத்தி !
வெள்ளப் பெருக்கை !
செல்வப் பெருக்காய் செய்வோம்.. !
எம் நாட்டு செல்வம் !
கடலில் கரைவதோ !
மாரியிலே வெள்ளமென்று புலம்புவதோ!
கடலோரம் !
பெரும் மேடை அணை செய்வோம் !
பெரும் ஊழி அலைக்கை உடைப்போம் !
அதிலே பாதையும் !
பெரும் சாலை சூழ் சோலையும் சமைப்போம் .. !
ஓடக் கூடுமா வெள்ளம்!
நம் நிலச்சாற்றைக் கரைத்து!
மாரியிலே வெள்ளம் !
கடித்துப் பயிர் செத்த கதை சொல்லி !
கோடையிலே நீர் மறுத்து !
பயிரழிந்த புராணம் பாடி...!
நாட வேண்டுமோ !
அவன் நீரைக் கேட்டு.. !
அயல் அவர் !
எம் தமிழர் பூமிக்கு !
கையேந்தி வரட்டும் !
அந்த அயல் நாட்டுப் பறவைகள் !
பசியாறப் பருவப் பெயர்ச்சியில்!
பஞ்சத்தில் படை எடுத்தால் !
அள்ளிக் கொடுப்போம் !
அணைத்து நீரும் வாழ !
வேரோட நிலமும் கொடுப்போம்,!
முல்லைக்கு!
தான் ஓடும் தேர் கொடுத்தான் தமிழன்!
வாழும் மனிதருக்கு !
வறளும் பயிருக்கு !
நீரினை மறுப்பானோ.. !
மற்றவன் அழக் கண்டால் !
பெரும் மனதில்!
நீர் அள்ள மறுப்பானோ....!
வள்ளல் வராலாறு வைத்து !
வாழ்வு கொடுப்பவன் தமிழன்,!
நீ எடு ஒன்றாய் !
மண்ணை நீரேந்தி !
வெள்ளம் திசை திருப்பும் !
வளம் திருத்தும் !
ஏர் ஆயுதம், !
வா ஒன்றாய் மாரி வர முன்னாய் .. !
மண் வாரி கடல் கொள்ள முன்னர், !
பெரும் பணி இதுவே !
நம் மண்ணை !
நாம் காக்கும் நற்பணி !
ஒன்றாய் இணைவோம் !
கங்கையை மதி கொண்டு !
நம் கையால் கடைவோம் !
துளிகளைத் திரட்டி துயரை துடைப்போம்