வண்ணத்துப்பூச்சிகளை
எம்.ரிஷான் ஷெரீப்
வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள் !
---------------------------------------------------!
அவன் தன்!
வேட்டைப்பற்களை மறைக்க!
தேவதூதனையொத்தவொரு!
அழகிய முகமூடியைத் தன்!
அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட!
பின்னரான பொழுதொன்றில்தான்!
அவள் அவனைப் பார்த்தாளெனினும்!
ஒரு செங்கழுகின் சூட்சுமத் தேடலையும்!
அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை !
அக்கழுகு!
அழகிய பெண்களின் மாமிசப்பட்சி!
அவர்தம் வாழ்வினைக் கொழுவி!
உயிர் எஞ்சத் துண்டுகளாய்!
வெட்டியெடுத்துச் சப்பிச் சிரிக்கும்!
கோரங்களைக் கொண்டவை அதனது நாட்கள் !
அவள்!
செந்தாமரை மலரொத்தவொரு!
தேவதைக்குப் பிறந்தவள்!
ஏழ்மையெனும் சேற்றுக்குள்!
வனப்பு நிறைக்க மலர்ந்தவள்!
அன்பைத்தவிர்த்து ஏதொன்றும் அறியா!
அப்பாவிப்பெண்ணக் கழுகின்!
கூர்விழிகளுக்குள் விழுந்தவள் !
சுவனக் கன்னியையொத்த!
தூய்மையைக் கொண்டவளின்!
கவனம் பிசகிய கணமொன்றிலவன்!
கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள்!
மென்தொண்டையில் இலகுவாக இறங்கிற்று!
என்றுமே உணர்ந்திராதவொரு!
விபரீதக் குருதிச்சுவையை நா உணர்ந்திற்று !
நேசத்தினைச் சொல்லிச் சொல்லி!
அவளது சதைகளை அவ்விஷப்பட்சி!
தின்றரித்து முடிந்தவேளையில்!
வாழ்வில் காணாவொரு துயரத்தை!
அவள் கண்கள் விடாதுசொரிந்திட!
எந்நாள்பொழுதும் தீராப்பசியோடவன்!
வேறொரு அழகியை ஈர்க்கச் சென்றான்!
இயல்பை மறந்த நாட்கள் தொடர்ந்து வர!
அவளது தேவதைப்பாடல்கள் சோரலாயின !
ஆழி நடுவிலொரு ஒற்றைப்படகிலமர்ந்து!
சூழ்ந்த தனிமைக்கும் துயருக்கும்!
மீளப்பெறமுடியா இழப்புக்குமாக!
வசந்தகாலத்து வனங்களின்!
வண்ணத்துப்பூச்சிகளைத் தன்!
அரணாக அவள் சூடிக் கொண்டாள்!
இன்று!
மீட்டமுடியாக் காலத்தின் வினைகளைத்!
தம் இச்சையால் உணர்ந்த பல திமிங்கிலங்கள்!
இடையறாது படகை!
வட்டமிட்டுக் கொண்டேயிருக்கின்றன