தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நிசப்தம்

பாண்டித்துரை
கவிஆக்கம்: பாண்டித்துரை!
ம் என்ற!
முனகலுடன்!
அப்பா என!
கொட்டாவி விட்டு!
டிக் டிக் டிக் டிக்!
கடிகார பெண்டுலகம்!
உளறல் பேச்சுக்களாய்!
உறங்கும் உருவங்கள்!
குறட்டைச் சத்தமாய்!
தலையை சொரிந்து கொண்டு!
பூனைகளின்!
நடமாட்டத்துடன்!
இரவுகளின் நிசப்தம்!
மூடிய இமைகளுக்குள்!
விழித்தபின் பேசும்!
கனவுகளாய்!!
!
கவிஆக்கம்: பாண்டித்துரை!
தொடர்புக்கு:006597345497

ஒரு காரணம் தேவைப்படுகிறதுதான்

கோகுலன்
சேட்டுக்கடையில் அடகுவைத்த!
செப்புச்சருவம்!
கட்டாத வட்டியில் மூழ்கிப்போக!
பதிலுக்கு இரண்டாய் !
பிளாஸ்டிக் குடங்கள் வாங்கி!
சொல்லிக்கொண்டாள்!
'தூக்கிச் சுமக்க !
இதுதான் நல்ல வசதி..'!
கழுத்தில் கிடந்த !
பொட்டுத்தங்கத்தை!
கஞ்சிக்காய் விற்ற பொழுதும்!
மேம்போக்காக சொல்லிக்கொண்டாள்!
'இனிமேலாவது இருட்டுல!
பதறாம போய்வரலாம்..'!
கல்யாணவயதை !
கடந்து நிற்கும் மகளை!
இரண்டாம் தாரமாய் கேட்டுவர!
சரியென்றவள் சாவகாசமாய்!
காரணமும் சொன்னாள்!
'மாப்பிளைக்கு வயசவிடவும் !
அனுபவம் முக்கியந்தான்..'!
உள்ளுக்குள் கதறியழும் !
மனதுக்கும் ஆறுதல் சொல்ல!
தனக்குத்தானே ஒரு காரணமும் !
தேவைபடுகிறதுதான்!!
!
-கோகுலன்

பதில்களற்ற மடலாடல்

அவனி அரவிந்தன்
முந்தைய குளிர் இரவின்!
தனிமை ஏற்றிவிட்ட கனத்தை!
கரைத்துவிடும் குறிக்கோளுடன்!
சாலையில் போவோர் வருவோர்!
அனைவரைப் பார்த்தும் சிரிக்கிறான்!
முறைப்புகளைப் பொருட்படுத்தாமல்!
சலாம் வைக்கிறான்!
அவ்வப்போது கொஞ்சம்!
பாலிதீன் காகிதங்களையும்!
அவன் கடித்துக் கொள்கிறான்...!
சுண்ணாம்பும் கரியும் கொண்டு!
வரையப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதி!
தார் தரையில்!
அருள் பாலித்துக் கொண்டிருக்க,!
நடந்து செல்லும் பக்தரெல்லாம்!
கன்னத்தில் போட்டபடியே!
கடந்து போகிறார்கள்!
சாலையின் சரிவில் புரளும்!
கால்களைத் தொலைத்த ஓவியனின்!
வர்ணம் இழந்த கண்களை!
நேர்கொண்டு பார்க்கும் போது!
சட்டைப்பையில் சிறைப்பட்ட சில்லறைகளைத்!
தடவிப் பார்த்துக் கொண்டே!
மறைந்து போகிறார்கள்...!
மாராப்பை பூமிக்குத்!
தாரை வார்த்துவிட்டு!
வளைந்து நெளிந்து!
பிரம்மாண்டமாய் நிற்கும் அழகியின்!
பட்டுத் துணி மூடிய!
பாகங்கள் குறித்த கற்பனையில்!
பல விதமான கண்கள்!
குத்திக் கிடக்கின்றன!
விழிகளை விட்டுச் சென்றவர்கள்!
அவற்றை மீண்டும் எடுத்துக் கொள்ள!
மறந்து போகிறார்கள்...!
மரணத்துடன்!
மடலாடிக் கொண்டிருக்கும்!
மூதாட்டியின் சுருங்கிய கண்வழியே!
விரியும் இந்த!
சாளரத்து உலகம்,!
எந்தப் பார்வைகளைப் பற்றிய!
பிரக்ஞையும் இன்றி!
தன் போக்குக்கு!
சுழித்து ஓடிக் கொண்டிருக்கிறது...!
செவிலிப் பெண்ணொருத்தியின்!
பாட்டி உங்களுக்கு!
மேல் வார்டுக்கு மாத்திருக்கு!
போலாமா ?, என்ற குரலுக்கு,!
மூச்சை ஆழமாக உள்ளிழுத்தபடி!
சாளரத்துக்கு வெளியில்!
வேடிக்கை பார்த்துக் கொண்டே!
ஆகட்டும், என்று சொல்லி!
ஆயத்தம் ஆகிறாள்!
அப்போது சாளரத்தின் திரைச்சீலை!
காற்றில் மெலிதாகப்!
பிரண்டு கொண்டிருந்தது

பொக்கிஷம்

மாவை.நா.கஜேந்திரா
சுமந்தாள்!
சுகமான இடம் தந்தாள்..!
தன் உதிரத்தை உணவாக்கி!
உயிர் தந்தாள் !
சுகமான சூடும்!
இதமான குளிரும் தந்து – தன்!
இமை போல காத்தாள் !
முகம் பார்க்க!
சிரிக்க!
முதல் மொழி பேச!
முயன்று முயன்று நடக்க!
முழுவதிலும் அவள்… !
நான் அணியும் உடையில்!
உண்ணும் உணவில்!
சிரிக்கும் சிரிப்பில்!
பேசும் மொழியில்!
பார்க்கும் பார்வையில்!
அவள் என் உயிராய்! !
மற்றவர்க்கு எப்படியோ?!
என் பார்வையில்!
உலகிலேயே அவள்தான் அழகி….! !
அன்பின் உருவமாய்!
கோவிலின் உறைவிடமாய்!!
தெய்வ மலர்முகமாய்!!
என் உயிரின் உயிரானவள்…!
அவள் என் அன்னை…

இதழ்களின் ரேகைகள்

வீ.கார்த்திகேயன்
மாலை வானம் அன்று!
மாய வர்ணங்களோடு மயங்கி!
மாறுதலைப் பிரதிபலித்திருந்தது!
மூச்சுக்காற்றின் சூடு!
தட்பநிலை மாற்றங்களை!
முடுக்கி விட்டிருந்தது!
கண்கள் நான்கும் நேர்கோட்டில் நிற்க!
சந்திர கிரகணங்கள்!
சில நிகழ்ந்தேறின!
அன்றலர்ந்த மலராய் அவள்!
அங்கங்கள் சிவந்து நிற்க!
தென்றலாய் வருடி அணைத்து!
இதழ்கள் இணைத்தேன்!
சுழன்று கொண்டிருந்த பூமி!
சட்டென நின்றது!
விண்ணில் நட்சத்திர மழை!
பொழிந்து கொண்டிருந்தது!
முதல் முத்தமெனும் புத்தகத்தில்!
எங்களது இதழ்களின் !
ரேகைகளும் பதிந்துபோயின!
- வீ.கார்த்திகேயன்

துளி நீர்

ரதன்
மழை மாலை நாளென்றில் !
மங்கிய சாலை வெளிச்சத்தில் !
ஆண்கள் கழிவறை அருகினில் !
யுகங்கள் கடந்து !
பார்த்துக்கொண்டோம் !
!
கிழிந்து தொங்கியது !
எங்கள் முகமூடிகள் !
!
அவசரமாய் காற்றை !
முத்தமிட்டோம் !
!
நநைந்த நிலம் நோக்கி !
கண்களை !
மேயவிட்டோம் !
!
கைகளை !
நீட்டிக்கொண்டோம் !
தொடவில்லை !
!
நாயொன்றின் !
குரைப்பில் !
பிரிந்துகொண்டோம் !
!
ரதன்

மழலைகளின் சிரிப்புக்குப் பின்னால்

ஜே.பிரோஸ்கான்
மழலைகளின் சிரிப்புக்குப் !
பின்னால் மறைந்து போன மழை!
--------------------------------------------------------------!
அந்தப் பொழுது மழை மேகங்களால்!
இருள் ஊட்டப்பட்டு பூமியெங்குமாக !
இரவாய் படர்தலாகுது.!
மழையின் அறிவிப்பை !
தவளைகள் பிரகடனம் செய்ய !
மழையைத் தேடி!
ஈசல் மற்றும் பட்சிகளின்!
பயணம் ஆரம்பமாகுது.!
பின் !
பயிர்கள் சிரிக்க ஆயத்தமாக!
குழந்தைகளும் துள்ளிக் குதிக்க !
ஆவலாகுது.!
எல்லா எதிர்பார்ப்புக்களையும் !
சரி செய்த படி.. !
பெய்யத் தொடங்கியது மழை,!
ஆராவாரமாய் மேலெழும்பும்!
குழந்தைகளின் சிரிப்போடு.!
சாயங்காலம் - தோப்பு - தென்றல்.!
மொழியற்றுப் போன கனவொன்று!
பிரதிபலிக்கிறது.!
நிசப்த இரவுதனில் !
விடியலை பின் கழற்றி !
தன் இருப்பிலிருந்து வெளியேற்றுகிறது அது.!
சாயங்கால மழைத்தூறலில்!
யாரும் கண்டறியாதே!
கவிதையொன்றை வியப்போடு பார்த்தபடி!
கால்கள் நகர்கிறது.!
அமைதிமிக்க ஒரு தோப்பை,!
அதனைச் சுற்றியுள்ள தென்றலை!
சுவாசிப்பதற்கென

ஊமையின் காதல்.. மௌனம்

இரா சனத், கம்பளை
ஊமையின் காதல்...மௌனம்!
!
01.!
ஊமையின் காதல்!
-------------------------!
காதலை வெளிப்படுத்த!
இரு கையசைத்தேன்!
அவளோ! ஓடிவந்து!
பணம் கொடுக்கிறாள்...!
ச்சீ...ச்சீ... அது இல்லையென!
கவலையுடன் சைகை காட்டினேன்!
ஏன் இதற்கெல்லாம் நன்றியென!
புன்முகம் காட்டுகிறாள் அவள்!
ஐயோ! கடவுளே... என் வாய்!
பூட்டை ஒருமுறையாவது!
திறந்துவிடு பேசுவதற்கல்ல!
அவளிடம் காதலை சொல்வதற்கு!
ஏனெனில்;, அவளுக்காக தினமும்!
நான் ரோட்டோரம் காத்திருப்பதால்!
அவள் என்னை பிச்சைக்காரன்போல்!
பரிதாபமாய் பார்க்கிறாள்...!
!
02.!
மௌனம்!
காதலின் மொழி!
'மௌனம்' தான்!
என்பதை நீ!
நிரூபித்துவிட்டாய்!!
எப்படியெனில், உன்!
காதலை சொல்வதற்கும்!
ஊமையைதானே நீ!
தூதனுப்பினாய்!!!!
சந்தேகம்!
எரியும் நெருப்பு மீது!
சந்தேகம் கொண்டு!
அதை சோதிப்பதற்கு!
பஞ்சு முனையுமானால்!
நிலைமை என்னவாகும்?!
அழிவின் முகவரிதான்!
சந்தேகம்!!!!
நிலவு!
காதலியை நிலவென!
வர்ணிப்பவர்கள்!
அவளது மனம் வானம்!
போல் அல்ல என்பதை!
அறிவார்களா???!
காதல்!
அறியாத- புரியாத!
இரு உள்ளங்கள்!
இணைவதுதான்!
காதல்

அகதியுடனான நேர்காணல்

வே.தினகரன், பத்தனை
எங்கிருந்து வருகிறாய்…?!
மனிதாபிமானத்தின் தேசத்திலிருந்து!
ஏன் வருகிறாய்?!
அங்கு யுத்தம் நடக்கிறது!
யுத்தம் ஏன் நடக்கிறது…!
மனிதர்களை மீட்பதற்கு!
உனது கால்கள் எங்கே?!
யுத்தத்தின் காலைப்பசிக்கு கொடுத்தேன்!
உனது கைகள் எங்கே?!
யுத்தத்தின் பகல்பசிக்கு கொடுத்தேன்!
உனது தலை எங்கே?!
யுத்தத்தின் இரவுப்பசிக்கு கொடுத்தேன்!
உனது குருதி எங்கே?!
யுத்தத்தின் தாகத்திற்கு கொடுத்தேன்!
உனது சொத்துக்கள்…?!
ஆயுதங்களின் கொள்ளை ஆசைக்கு!
உனது இளமை எங்கே..?!
அது சமருக்கு சமர்ப்பணம்!
உனது குழந்தைகள்?!
நான்தான் அது…!
அவர்களின் குழந்தைகள்!
அதுவும் நான்தான்.!
கனவுகள் இருக்கின்றதா? எங்கு?!
எங்கோ இருக்கிறது. ஆனால் இருக்கிறது.!
உனது மிகுதி உயிர் எங்கே…!
என்னூரில் ஒரு மரத்தடியில்!
அங்கு எப்படி…?!
என்காதலி அங்குதான் எரிந்துபோனாள்.!
காதல் வேறா…?!
அகதிகளாவதற்கு முன் நாங்கள் மனிதர்கள்.!
யுத்தம் உங்களை என்ன செய்தது…?!
கேள்வியே பிழை. யுத்தம் என்ன செய்யவில்லை என்பதே சரி.!
யுத்தம் மனிதர்களை மீட்டதா?!
கேள்வியில் குழப்பம்…!
என்ன சொல்ல விரும்புகிறாய்.!
எது நடந்ததோ… எது நடக்கிறதோ…!
எது நடக்குமோ…!
ஒன்றும் நன்றாக நடக்கவில்லை:!
நடக்கிறதில்லை; நடப்பதில்லை.!
அப்படியே இரு… ஒரு புகைப்படம் வேண்டும்.!
வேண்டாம்…!
கமராக்கள் உண்மை சொன்னதில்லை!
நாங்கள் உண்மையின் குழந்தைகள்!
நாங்கள் யுத்தத்தின் குழந்தைகள்

இன்று... தானாய் விழும் அருவி

செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
இன்று...தானாய் விழும் அருவி!
01.!
இன்று!
---------!
இன்று!
சமையல் கியாஸ்!
தீர்ந்து விட்டது.!
இன்று!
மார்கழி மாதக் குளிர்!
சில்லிட்டு இருந்தது.!
இன்று!
சாலையில் பார்த்த!
ஒருவன் இடதுகண் மூடிக்!
கட்டுப்போட்டிருந்தது.!
இன்று!
(இதுவரை சிரிக்காத)!
நண்பன் ஒருவனின்!
இடைவிடாத சிரிப்பைக்!
காண நேர்ந்தது.!
இன்று!
வந்த கடிதமொன்றில்!
நண்பன் தன்!
முதல் மனைவியின்!
நினைவு நாள்!
நாளை என்று!
எழுதியிருந்தான்.!
இன்று!
எழுத முயன்ற!
கவிதையில்!
பெரிதும் சோகம்!
கவிழ்ந்தது.!
இன்று!
இந்தக் கவிதை!
தானே தன்னை!
எழுதிக் கொண்டது.!
!
02.!
தானாய் விழும் அருவி...!
------------------------------------!
கண்கூசும் வண்ண ஒளி மேடையில்!
களைகட்டத் தொடங்கி இருந்தது கச்சேரி.!
நெடுநாள் கழித்துப் பார்க்கும்!
நண்பர்களின் நலம் விசாரிப்புகள்.!
புடவை நகை பற்றிப் பேசவென்றே!
புறப்பட்டு வந்திருந்த பெண்கள்.!
நாற்காலிகளுக்கு இடைப்பட்ட!
நடைபாதைப் பாய்விரிப்பில்!
உறங்கிப்போன மகனை கிடத்திவிட்டு!
உள்வரிசை நாற்காலி ஒன்றிலிருந்து!
மகன்மேல் ஒரு கண்ணோடு!
மடிமேல் தாளமிட்ட மங்கை.!
குளிர்சாதனங்களின் அளவை குறைத்தபடி!
அரங்கெங்கும் நடந்தபடி இருந்த !
அவனது இசைகேட்டல் எப்படி இருக்கும்?!
ஆரம்பமுதலே அடிக்கடி கைபேசியில்!
கைதட்டல் சத்தத்தை யாருக்கோ!
கேட்கச் செய்துகொண்டிருந்தவனின்!
இசையார்வத்தை எதில் சேர்க்க?!
எப்பொழுதும் நிகழக்கூடும்!
இவளின் அழைப்பை எண்ணி!
கைப்பேசியைப் பார்த்தபடி இவனும்.!
தன்னளவில் எதற்கும் பொதுவாய்!
தானாய் விழும் அருவியென!
ததும்பிக்கொண்டிருந்தது இசையெங்கும்