தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

என் அரிசி

கோ.புண்ணியவான், மலேசியா
எனக்கான அரிசியில்!
என் பெயர் எழுதப்பட்டிருக்கிறதாம்!!
எந்த உலையில்!
யார் வாயில் போய்த்தேடுவது?!
ராணுவக்காலணியில்!
மிதிபட்டு நசுங்கிவிட்டதோ?!
!
வயல்வெளிகளில்!
அறுவடை நடந்துமுடிந்து!
குவிக்கப்பட்ட நெல்மணிகளில்!
காயம் வழியாக வீசப்பட்ட!
போர் நெருப்பில் !
பாழாய்ப்போனதோ!!
முதலாளிமார்களின்!
கிடங்குளில்!
இன்னுமொரு!
விலையேற்றத்துக்காக!
பதுங்கியிருக்கிறதோ?!
நெல்மணியாக!
இருக்கும்போதே!
காலங்காலமாக!
விதைக்காகவே புதைக்கப்பட்டுவிட்டதோ?!
வாழ்நாள் முழுதும் வயலிலேதான்!
அதன் வாழ்வென!
வரையறுக்கப்பட்டுவிட்டதோ?!
அஜீரணக்கோளாறினால் !
தொண்டைக்கும் வயிற்றுக்கும்!
இடையில் சிக்கி!
புளிச்ச ஏப்பமாய்!
தினறுககிறதோ!
திக்கக் குரங்குகளின்!
கையில் அகப்பட்டு!
அப்பமாகிப்போனதோ?!
அசுரர்களுக்கு அட்சதையாகி!
பாதங்களில்!
நசுங்கியே கிடக்கிறதோ? !
!
-கோ.புண்ணியவான்.மலேசியா

மனைவி

நண்பன்
உறிஞ்சப்படும்!
சிகரெட்டாய்!
காலம்!
கரைகிறது.!
நீ மட்டும் தான்!
கரையவில்லை.!
இத்தனை வருடம்!
கழித்தும்!
சிகரெட் உமிழும்!
புகையின் மணத்தை!
ரசிக்க.!
- நண்பன்

அடுத்து...?

இ.பு.ஞானப்பிரகாசன்
கோயில் குளமும் தொலைக்காட்சியுமே!
வாழ்க்கையாய்க் கொண்ட!
மனைவி!
அடுத்த ஆண்டுப் பதவி உயர்வு முதல்!
நாளைய சந்திப்பு வரை!
எதிர்காலத்திலேயே!
வாழும் மகன்!
குழந்தை குட்டி ஆனதும்!
இலக்கியம் மறந்த!
மருமகள்!
புகுந்த நாட்டுப் பண்பாட்டோடு!
ஒன்றி!
அடையாளம் தொலைத்த!
மகள்!
தமிழ் கிலோ எவ்வளவு?எனப்!
பேரம் பேசக் கூடத் தெரியாத!
நுகர்வோர் கலாச்சாரத்துப்!
பேரன் பேத்திகள்!
அனைவரும்!
எதிர்வீட்டு எழுத்தாளத் தாத்தாவின்!
இறந்த உடலைச்!
சூழ்ந்திருக்கும் இவ்வேளையில்!
அடுத்து!
யாருக்காகக் காத்திருக்கின்றன!
தாத்தாவின் தூவலில்!
மிச்சமிருக்கும்!
மைத்துளிகள்?

ரியால் மட்டுமா?

இப்னு ஹம்துன்
ரியாத் நகரின் எழுத்துக்கூடத்தில் மின்வெளியின் அரூப அரங்கில் நிகழ்வுற்ற கவியரங்கில் 'ரியால் மட்டுமா?' என்ற தலைப்பின் கீழ் பாடிய கவிதை!!


சொல்லாகப் பொருளாகப் பேச்சைத் தந்து!
....சோபிக்கும் எழுத்தார்வம் சேர்த்தே தந்து!
நல்லோரின் அறவோரின் நட்பை யீந்து!
....நலமாக வாழுதற்கு வழியும் செய்தான்!!
பல்லோரும் வாழ்கின்ற பூமி தன்னில்!
.....பலவுண்டு சித்தாந்தம் உண்மை ஒன்றே!!
எல்லோரின் இறையோனாம் அவனைப் போற்றி!
....எழுதுகின்றேன் கவியொன்று; ஏற்றால் நன்றி!!
!
அமிழ்தாய் பேச்சு; அன்புந்தான்!
....அறிவில் வயதில் அண்ணந்தான்.!
தமிழைச் சுவையாய்த் தருவதிலே !
....தகைமை சான்ற ஆசாத்தாம்.!
இமையாய் செயல்கள் புரிபவராம்!
....இருக்கும் தமிழோ கண்கள்போல்!!
எமையும் அழைத்தார் அரங்கேக!
.....ஏதோ சொல்வேன் கவிதைபோல்!!
அறியாத சிறுவன்நான் எழுது கின்றேன்!
....ஆர்ப்பாட்ட மில்லாமல் கேட்பீர் தானே!!
நெறியாக எழுதுதற்கே நினைப்பு வேண்டி!
....நீள்கின்ற கருத்தை நிறுத்திச் சொல்வேன்!
சரியாக நானேதும் சொல்லும் போதில்!
....சப்திப்பீர் கைதட்டி உற்சா கந்தான்!!
விரிவாக இலக்கணத்தைக் கற்றே னில்லை!
....வேண்டுகின்ற உள்ளந்தான் வாய்த்து விட்டேன்.!
ரியால்கள்மட் டுந்தானா என்ற கேள்வி!
....ரகசியமாய் கேட்டாலும் இல்லை என்பேன்.!
நியாயத்தின் பக்கத்தில் நின்று பார்த்தால்!
...நிச்சயமாய் ஏராளம் எடுத்துச் சொல்வேன்,!
வியாழந்தான் தொடங்கிவிடும் விடுப்பின் ஆட்டம்!
...வெள்ளியன்று முழுதாக வெற்றித் தூக்கம்.!
தியாகத்தைச் செய்கின்ற தோழர் கூட்டம்!
....திருவாளர் சேமிப்பில் குடும்பம் வாழும்!!
ஆரென்று அறியாரும் அம்மா மொழியால்!
...ஊரென்று உணர்வாரே உறவாய் ஆவார்.!
ஊருக்குப் போனாலும் உயர்த்திப் பேசும்!
...உள்ளத்தைக் கேட்டாலும் உள்ளதைச் சொல்வார்!
பாரெங்கும் இதுபோல வடும் உண்டோ!
...பனிப்பொழிவும் அதிகம்தான் என்ன செய்ய?!
ஊராரும் இங்குவர விரும்பு கின்றார்!
...உலகத்தில் செலவிங்கு குறைவே ஆமாம்.!
ஆறென்று ஏதுமிலை இந்த நாட்டில்!
....ஆனாலும் வியர்வைதான் அதனைப் போல!
சோறாக்கி உண்பதற்கு சமையற் கட்டில் !
.....சிலநேரம் நின்றாலே வியர்வை ஆறாம்.!
தாரெல்லாம் கொதிக்கின்ற தாங்காச் வட்டில்!
....தன்விதியை பூசுகின்ற உழைக்கும் வர்க்கம்!
நீரூறும் நெற்றியெலாம் நிலத்தில் வைத்தால்!
....நிலமிங்கே ஆறாகும் நிதர்ச னம்தான்.!
!
வேறூரும் அறியாத மனிதர் இங்கே!
....வெளிநாட்டார் பழக்கத்தைப் பெற்றுக் கொள்வார்.!
பேரூரில் வாகனங்கள் பலவு மிருந்தும்!
....*பெண்ணுக்குப் பூவாங்க வழியே இல்லை.!
சீராகச் செல்கின்ற வாழ்வில் இங்கே!
...சிற்சிலவே குறையாக தனிமை, தாபம்.!
பார்போற்றும் தமிழுக்கும் பெரிய சேவை!
...பண்பாட வைக்கின்ற எழுத்துக் கூடம்.!
-------------------------------------------------------------!
* ரியாதை முன்வைத்து சொன்னது !

கொலுசுப்பேச்சு

சரவணவேல், சிங்கப்பூர்
நீ!
இப்போதைப்போல் !
மெளனமாய் இரு !
இன்னும் சில காலம் !
கொலுசுகள் !
பேசட்டுமே !!
எழுத வேண்டும் ஒரு கவிதையை !!
ஒவ்வொரு கவிதையையும்!
உன்முன் வாசிக்கையில் !
உன்முகம் நனைக்கும் !
வெட்கத்தையும் !
எழுத வேண்டும் ஒரு கவிதையாய் !!
இதய இழப்பு!
இயல்பாய் !
நீ !
இறங்கி விட்டாய்!
எத்தனை இதயங்களை!
இழந்து விட்டுப் போகிறது!
பேருந்து

மனித உரிமை…. பெண்ணுரிமை

வேதா. இலங்காதிலகம்
மனித உரிமை….!
பெண்ணுரிமை!
சிந்தும் சீவகாருண்ணியம், மனிதன் !
ஈந்து - பெறும் மானுட உதவி!
எந்த வன்முறையும் அற்ற !
சொந்தத்; தீர்மானம், சுயவாழ்வு,!
தொந்தரவற்ற பந்தம் யாவும்!
எந்தச் சீவனுக்கும் உரித்தானது.!
சுதந்திர மனித உரிமை.!
இச்சிந்தனை மகத்தான உரிமை.!
நொந்து சுமந்து பெற்று!
பாந்தமாய்ப் பேணும் செல்வங்களை!
வந்து திருமணம் கொள்வோர்!
சுந்தர அனுபவம் தந்து!
நந்தவனம் ஆக்காது வாழ்வைப் பந்தாடும் உறவின் உரிமை!
சுதந்திரப் பெண்ணுரிமையா? ஆணுரிமையா?!
எவ்வகை மனிதவுரிமை இது?!
உத்தமம் வாழ்க்கைக்குத் துணையென்று!
ஒத்து வாழ்ந்து மகிழ!
பார்த்துப் பதியும் திருமணம்!
பத்து நாளில் பாதை விலகி!
சொத்துப் பிரித்துப் பணமாக்க !
எத்தனிக்கும் திருமணம் ஆகிறது.!
புத்தி பேதலித்த பெண்மையால்!
பித்தலாட்டமாகிறது மனித உரிமை.!
ஆண் பெண்ணை வதைத்தல்!
வானளவு பிரசித்த மென்றால்,!
பெண் ஆணை வதைப்பது!
ஏன் பேசப் படுவதில்லை?!
பெண்ணுரிமை யென்று பண்பாடு!
கொன்று, வதிவிட உரிமைக்காய்க்!
கண்டவனைக் கூடும் உரிமை!
பெண்ணுரிமையோ – மனித உரிமையோ?!

கண்ணீரில் கரையும் தலையணைகள்

கிண்ணியா பாயிஸா அலி
கணத்திற்குக்கணம் காந்தவலையுளே பதிந்து நீந்தும்!
கணக்கிலா இணையத் தகவல் மீன்களாய்!
எல்லைகாணா மனவெளி முழுதும்!
அழுந்தப் பதிந்த உன் குரலொலிகள்!
சொர்க்கமே! உனை!
பாலிக்க வேண்டிய பொழுதுகளில்!
ஏனெனக்கு இன்னுமோர் பணியும்!
அதற்கான பயில்வுகளும்?!
ஊட்டமுடியாத தொலைதூரமதில்!
ஒரு நெடுநாட்துயர்போலே!
இறுகிக்கிடக்குதென் கலங்களுள்ளே!
உனக்கேயான திருவமுது!
சொந்தங்களில்கூட எந்தப் பெண்மையுமே!
எனக்கீடாய் உனக்கில்லையென்றே!
உணர்ந்திருந்துங்கூட!
நாட்களாய்………!!
வாரங்களாய்………!!
மாதங்களாய்………!!
விலகியிருக்கின்றேனே இனிக்குமுந்தன் இதழ்முத்தமிழந்து.!
கற்பூரதீபமே! வேண்டுமானால்!
இக்கலாசாலை விடுதிக் கட்டில் தலையணைகளைக்கூடக்!
கேட்டுப்பார்! என்!
கண்ணீர்ச்சூட்டிலவை கரைந்துபோன கதைசொல்லும்.!
நிலாக்குஞ்சே!!
நீயென்ன அடியிறுகிய ஆதி உயிரியா?!
ஆயிரந்திரி நனைக்கும் ஜதரோக்காபனுக்காய்!
தனிமைப்பொறியிட்டு உனை நானும்!
உருக்கிப் பிழிகின்றேனே!!
அந்திநேரச சூரியனாய் அடிவானச்சுக்கிரனாய்!
பூரணைச்சந்திரனாய்……… !
பூமகளேயென் மனவான்முழுதும்!
நீயேதான் ஜொலிக்கிறாய்!!
என்றாலும் என்னவளே!!
என்னால் நீயிழந்த இருவருட வாழ்க்கையினை!
எதனைத்தந்து நானும் மீளநிரப்ப

ஆண்

இளந்திரையன்
இளந்திரையன் - !
தெய்வம் போற்றி !
தெய்வம் போற்றிப் !
பெற்றெடுத்த பிள்ளையும் !
தாய்மை தந்து !
தாய்மை தந்து !
தன் குருதியுண்ட பிள்ளையும் !
விரதங் கொண்டு !
பசியடைத்துப் !
பாதுகாத்த பிள்ளையும் !
அடியே என்று சொன்ன !
நாளில் !
சிவலிங்கமானது

விடுதலை உணர்வு

றஞ்சினி
உன்னை மீண்டும் முத்தமிட !
என் உதடுகள் துடிக்கின்றன !
உன் கரங்களை வருடி நாட்களாகிவிட்டது !
ஒவ்வொரு காலையும் - நான் !
கண்விழிககும்போது !
நீ என் அருகில் இரு - நம் !
வெப்பத்தில் எம் சிந்தனைகள் உலகெங்கும் !
விரியும் !
நம் விடுதலை உணர்வுகள் ஒன்றாக !
புதிய எண்ணங்கள் உருவாகும் !
நீ விரைவில் என்னிடத்தில் வந்துவிடு !
!
-றஞ்சினி

மகாத்மா

சித. அருணாசலம்
சட்டையைக் கழட்டிவிட்டு !
சகாப்தத்தை மாட்டிக் கொண்டவன். !
அகிம்சையைக் கையிலெடுத்து - மற்ற !
ஆயுதங்களின் கூர்மையைக் !
கேள்விக்குறியாக்கியவன் - உன் !
கைகளின் பார்வைக்குப் !
கால்கள் பல பதிலாயின. !
கண்களின் ஒளியிலோ !
கடமைகள் தான் தெரிந்தன. !
சட்டம் என்கிற சாக்கடையினால், !
திட்டமிட்ட குற்றவாளியாகி !
நீதிமன்றம் வந்தபோது, !
ஒட்டுமொத்த மன்றத்தையே எழவைத்த, !
மாண்பினை மகத்துவமாய்ப் பெற்றவன். !
நோபல் பரிசு உன்கைகளில் தவழும் !
நிறைவினை அடையவில்லை - இன்றோ !
நிகழ்வாய், மிக நெகிழ்வாய், !
வன்முறைக் கெதிரான !
உலக தினமாக !
உன் பிறந்த நாள் !
உருமாறிய போது - உன் !
மனதுக்குள் இருந்து சிறந்த !
மகத்துவம் இன்னும் வெளிச்சமாகிறது