எல்லா வீடுகளையும் போன்று!
விடிவதில்லை!
இழவு வீட்டின் இரவு!
தூங்கா விழிகளுடன்!
இழப்பின் வலியுடன் கூடிய!
விடியாத இரவு அது!
பிரிந்த நண்பர்களையும்!
பேசாத சொந்தங்களையும்!
அழைத்து வந்து விடுகிறது!
மிக எளிதாய்...ஒரு மரணம்!
எல்லோரும் சேர்ந்து!
வழியனுப்புவர் கண்ணீருடன்!
இறந்தவரை!
இவையெல்லாம் வழக்கமான மரியாதை!
மரிப்பவருக்கு...!
ஆனால்!
வழியனுப்ப எவருமில்லை!
அழும் உறவுகள் எல்லாம்!
அகதிகளாய் எங்கோ!
பதுங்கு குழிகளுக்குள்!
பதுங்கியிருக்கிறது!
ஒரு தேசம்!
பாஸ்பரஸ் குண்டுகளுக்கு!
அஞ்சி!
நித்தம் நூறு சடலங்கள்!
மொத்தமாய்...கொத்துக் கொத்தாய்!
சாவின் குறைந்தபட்ச!
மரியாதையும் அற்று!
மனிதம் மறந்த மரங்களாய்!
ரத்தத்தின் மிச்சங்கள்!
வேடிக்கை பார்க்கும்!
அண்டை நாட்டில் அமைதியாய்
ஜெ.நம்பிராஜன்