இமைகள் விலக!
விழிகளின் ஸ்பரிசத்தால்!
கருத்தரித்து!
நொடியினும் வேகமாய்!
பிரசவிக்கும் குழந்தை!
பேசதுடிக்கும் உதடுகளுடன்!
ஊமையாக பயணிக்கிறது!
இருண்மையின் விலகல்!
இருண்மையின் தழுவல் என!
கண நேரமும் கண்காணிப்பில்!
பூனையின் பார்வையை!
புறக்கணித்து செல்லும்!
புலம்பல் ஒலிகள்!
குறுக்கும் நெடுக்குமான!
பயணத்தின்!
ஒரு கட்டத்தில்!
திரை விலகுகிறது.!
சிறு புன்னகையை உதிர்த்தோ!
விசும்பல்களின் நீர்வீழ்ச்சியாகவோ!
கவிஆக்கம்;: பாண்டித்துரை!
தொடர்புக்கு:006597345497

பாண்டித்துரை