மண்ணின் குழந்தைகள் - இளந்திரையன்

Photo by engin akyurt on Unsplash

எப்போதும் போல் !
வாழ்க்கை இல்லை !
வாழ்க்கையின் அளவு !
புரிதல் இல்லை !
அப்போது போல் !
எல்லாமும் இல்லை !
இருந்ததும் எப்போதும் !
தொடர்ந்ததும் இல்லை !
!
எல்லோரும் போல் !
நானும் இல்லை !
இருப்புக்கான நம்பிக்கை !
எங்கும் இல்லை !
!
மனங்களின் ஆழத்தில் !
கவிந்தது போல் !
மரண பயம் - ஒரு !
மனப் பிரக்ஞை !
!
யாரைப் பார்த்தாலும் !
காற்றில் அசையும் !
நிழல்கள் போல் !
நினைவற்ற தோற்றம் !
!
புழுதித் தரையில் - கீறி !
முளைத்த புல் போல் !
கீழ் வானத்து செம்மை தேடி !
இன்றும் நான் !
!
- இளந்திரையன்
இளந்திரையன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.