கோடை விடுமுறைப் பள்ளித் தோட்டங்கள்.. முதல் கோணல்!
01.!
கோடை விடுமுறைப் பள்ளித் தோட்டங்கள்!
-------------------------------------------------!
துரத்தி வர!
வாண்டுகள் இல்லாமல்!
வண்ணம் இழந்து திரிகின்றன!
பட்டாம்பூச்சிகள்...!
பறித்துச் சூடிக் கொள்ளும்!
பாவாடைத் தோழிகளைக் காணாமல்!
வாடித் தொங்குகின்றன!
நந்தியாவட்டையும் செம்பருத்தியும்...!
பாட்டும் கூத்தும்!
ஆட்டமும் அமர்க்களமுமாய்!
அவர்களுடன் கழித்த நாட்களை!
அசைபோட்டபடி நின்றிருக்கிறது!
காற்று இறங்கிய!
பள்ளிப் பேருந்து...!
பொன்னாய்க் காய்ந்த!
இலைகளைக் கூட உதிர்க்காமல்!
ஆயிரம் ஆயிரம் இலைக் கண்களால்!
பார்வைக்கு எட்டிய தொலைவு வரை!
விழி வைத்துக் காத்திருக்கிறது!
எல்லோரையும் விடப் பெரிதான!
வாத மரம்...!
விடுமுறையில் ஒருவேளை!
அவர்கள்!
வேடந்தாங்கல் வரக்கூடும் என்று!
அங்கே போக!
வழி விசாரித்துக் கொண்டிருக்கின்றன!
கிளிகளும் மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும்...!
பள்ளி திறக்கும்!
நாள்!
கிழமை!
எதுவும் தெரியாத!
பள்ளிக்கூடங்களின் தோட்டத்து உயிர்களுக்கு!
இப்படித்தான் கழிகிறது!
ஒவ்வொரு விடுமுறைக் காலமும்!
என்பதை!
யார் எடுத்துச் சொல்வது!
விடுமுறைக்குப் பின்!
பள்ளி செல்ல அழும்!
குழந்தைகளுக்கு...?!
02.!
முதல் கோணல்!
-----------------------!
ஒரு பொய்...?!
ஒரு போலியான வாக்குறுதி...?!
சில ஆயிரம் ரூபாய் கையூட்டு...?!
பல ஆயிரங்களில் ஊழல்...?!
இவை எதுவும் இல்லை!
பிடிக்காத நிறத்திலான துண்டை!
அரசியலுக்காக!
அணியத் தொடங்கியதில்!
ஆரம்பமானது!
என்!
பொதுவாழ்வின் பொய்மை

இ.பு.ஞானப்பிரகாசன்