திரும்பிப் போகும் அணில் - சிதம்பரம் நித்யபாரதி

Photo by FLY:D on Unsplash

இன்று அவளுக்கு!
அணில் மேல் கோபம்!!
மாடியின் ஜன்னல் மூடாத!
என் மேல் கோபம்!!
கொஞ்சம் இடம் கொடுத்தாலும்!
குளியலறையில்!
பஞ்சு நார் எனக் குவித்துக்!
கூடு கட்டும்! !
சுத்தம் செய்ய முதுகு ஒடிகிறதாம்.!
எனக்கோ- !
ராமர் கோட்டு முதுகை வருடிட ஆசை!!
கற்பனையாய்!
வாலில் முத்தமும் உண்டு!!
அவ்வப்பொழுது!
கண்ணாமூச்௪¢ காட்டி ஓடிவிடும் அதற்கு!
இன்று ஜன்னல் திறக்காது!!
அரைகுறைக் கூடு கலைந்திருக்கும்!
என உள்ளுணர்ந்த துயரத்தில்!
தோட்டத்தில் அது சுற்றிடுமா?!
குறுகுறுக்கும் மனத்துடன்!
மூடிய ஜன்னலின் உட்புறம் நான்.!
- சிதம்பரம் நித்யபாரதி
சிதம்பரம் நித்யபாரதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.