கா….. கா….கா….. கா……!
1987 இல் காகம் கரைந்தது.!
உரிமைப்பசி!
இந்தியப் பாட்டி!
அப்போது சுட்டவடை இன்னும் பழுதாகவில்லை.!
ஆனாலும் அதன் அருமையை!
காகங்களும் அறியவில்லை.!
படையை நிறுத்தி!
வடையைச் சுட்டுக்கொடுத்த!
பாட்டிக்கு முன்புபோல்!
காகங்கள் பற்றி அதிகம் கவனம் இல்லை.!
ஆண்டுகள் ஓடினும் வடையைத் திருடும்!
நரியின் திட்டம் ஓயவில்லை.!
ஊழையிடத் தொடங்கின அவை.!
‘காகங்களுக்கு வடையெதற்கு!
காகங்களுக்கு உரிமை வடையெதற்கு’!
எலும்புகளை வாசம் காட்டி!
நரம்புகளுக்கு வார்த்தை ஊசியேற்றி!
‘எல்லோரும் நரிகளாவோம்!
வடைகளைப்பறிப்போம் வாருங்கள்’!
பெரும்பாண்மை தேடி பயணமாகின அவை!
தாடி வளர்த்த குழப்ப நரியின் தலைமையின் பின்னால்!
காற்றுத்தந்தி கொண்டு வந்த ஒலியை வாங்கிய!
வெண்புறாவொன்று!
1956 ஐ நினைத்துப்பார்த்து!
உடலைச்சிலிர்த்துக்கொண்டது.!
1983 இலும் பின்னரும் நடந்த!
உயிர்க்கொலையின் வலியதன்!
கண்ணால் ஒழுகியது
அரசையூர் மேரா