எழுதினேன் எழுதினேன்!
எவர்முகமும் பாராமல்!
என்மனம் பார்த்து எழுதினேன்!
மனமொழியை எழுத்தாக்கி!
மற்றோர்க்கு மறுமொழியாய்!
வைத்தேன்!
எழுதினேன் எழுதினேன்!
மெய்மையை மெருகூட்டி!
பொய்மையைப் புதைத்து!
புரிதலைத்தரவே புதுக்கவிதை!
எழுதினேன்!
மறைத்து மறைத்து !
மார்பைக் காட்டி!
மற்றோர் பார்ப்பதில்!
மகிழ்சி கொள்ளும்!
மங்கையைப் போலே!
எனக்குள் ஏதோ!
எழில்மிகும் இனிமை!
இதனால் இதயம் திறந்து!
இன்னும் எழுதுவேன்!
புரிந்தவர் புணர்ச்சியில்!
புதுமைக்கருவாய்!
கவிதைக்குழந்தை !
களத்தில் பிறப்பாள்!
கண்டு மகிழ்வேன்!
தலைமுறை கண்ட!
தமிழும் வாழ்வாள்!
வாழும் தமிழை வாழ்த்தி!
எழுத வருவோர்க்கெல்லாம்!
வாழ்த்துச் சொல்லி!
வணங்கி நிற்பேன்.!
-கலாநிதி தனபாலன்

கலாநிதி தனபாலன்