என்னடி தோழி!
எப்படி சுகம்?!
சிட்டுக் குருவி!
இசை மறந்த எம்!
தேசத்தைப்பற்றி!
என்னத்தை சொல்ல -நான்!
துருப்பிடித்த துப்பாக்கிகள்!
எல்லைதாண்டியே வருவதால்!
சத்தமின்றி கொல்லும்!
சுவாச நோய் பற்றி.......!
வாகை மரங்கள்!
உதிரும் கண்ணீரில்!
அரசமரங்கள்!
உயீர்ப்பித்தல்!
பற்றி-எப்படி!
சொல்ல நான்!
வற்றிப் போகாத!
வரட்டுப் பிடியில்!
ஒற்றை காலில்!
நிற்கும் கொக்கை-பார்த்து!
வெக்கி போகும்!
தூரோகத்தை பற்றி!
எப்படி சொல்லுவேன்!
செம் பருந்தை புணரத்தூரத்தும்!
கானாங்கோழிகளின்!
நப்பாசை பற்றி!
யாரிடம் சொல்லுவேன்!
ஆறிடா ரணங்களில்!
ஆழ்மனதில் பதிந்திட்ட!
அவலங்கள் -ஈரம்!
காயாமல் இன்னும்!
பிசு பிசுக்கும்!
புயலடித்த தேசத்தில்!
சிதறுண்டு போன!
பறவைக் கூட்டங்களின்!
இருப்புகள் பற்றி!
உயிர்களை நிலைநிறுத்த!
உண்மைகளை உரு மறைக்கும்!
என் பேனாவை வைத்து!
எப்படி சொல்லுவேன்!
என் தேசத்தைப்பற்றி
மித்யா கானவி