இளைஞனே காதலித்து பார்!
பெண்ணை அல்ல உன்னை!
உன் இரத்தகுழாய்களுக்குள் புதுரத்தம் பாய்ந்து ஓடி வரும்!
இளைஞனே காதலித்து பார்!
பெண்ணை அல்ல உன் உழைப்பை!
உன் நரம்புகள் திசைதெரியாது உதவ தெரித்து ஓடி வரும்!
இளைஞனே காதலித்து பார்!
பெண்ணை அல்ல உன் தன்னம்பிக்கையை !
உன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு ஓளி பளீர் என்று வீசும்!
இளைஞனே காதலித்து பார்!
பெண்ணை அல்ல உன் முயற்சியை!
உன் முட்டுகட்டைகள் இருந்த இடம் தெரியாது ஓடி ஒளியும்!
இளைஞனே அடைய விரும்பு!
பெண்ணை அல்ல உன் இலட்சியத்தை !
உன் கால்கள் சிகரங்கள் நோக்கி வேகமாக ஏறத்தொடங்கும்!
- லலிதாசுந்தர்

லலிதாசுந்தர்