சில மனிதர்கள் இருக்கிறார்கள்!
அவர்கள்!
மரணித்துபோன!
மனிதர்கள்!
அவர்கள் வெறுமையாய்!
சுவாசிக்க தெரிந்தவர்கள்!
மடி கணணியோடு மட்டும்தான்!
அவர்கள்!
நட்பு பாராட்டிகொள்கிறார்கள்!
அவர்கள்!
புன்னகைக்க!
தெரியாத மனிதர்கள்!
கண்ணீரின் வாசனையை!
அறியாதவர்கள்!
ஒரு விளையாட்டு!
பொம்மையை போல!
காலம் அவர்களை!
உருட்டிக்கொண்டே இருக்கிறது!
அவர்கள்!
கோப்புகளுக்குள்ளும்!
கம்பி ரேழிக்குள் சுற்றும்!
கடிகாரத்திற்குள்ளும்!
அவர்கள்!
தொலைந்து கொண்டிருக்கிறார்கள்!
அவர்கள்!
சுவாசிக்க மட்டுமே!
மனிதர்களாக பிறந்திருக்கிறார்கள்
ஸமான்