சொல்லாத நிறத்தில் ஒரு மழை...!
கருப்பு சட்டமிட்ட ஜன்னலுக்கு வெளியே!
நான் வானம் பார்த்து கொண்டு இருந்தேன்!
எல்லாரும் சொல்வது போல அது நீல நிறமாக இல்லை!
அதன் நிறம் எனக்கு நினைவில்லாத ஒரு நிறமாகவே இருந்தது!
புன்னகைகளின் கல்லறைகளுக்கு மத்தியில் நான் காத்திருந்த நேரங்களில்!
வானம் இந்த நிறத்தில் இருப்பதை கவனித்து இருக்கிறேன்...!
மேகங்கள் அற்ற வெறுமையான வானத்தில் சில நட்சத்திரங்கள் இருந்தன!
அவை பற்றி எரிந்து கொண்டு இருக்கும் தீக்குச்சியை போல இருந்ததாக நினைவு..!
தனியாக நாம் சந்திக்கும் இடம் ஒன்று உண்டல்லவா!
அங்கே நான் காத்து கொண்டு இருப்பேன்..!
நீ வரும்போதெல்லாம் வானத்தின் நிறத்திலேயே உடையணிந்து வருவாய்!
அது உன் உடை நிறத்தை போல மாற்றம் கொண்டதாகவே இருந்தாக சொல்வாய்!
பின்னர் பிரிந்து இருந்த ஒரு தருணத்தின் உரையாடலின் போது!
நாம் வானம் பற்றியும் நிறம் பற்றியும் நிறைய பேசினோம்...!
நிறம் என்று ஏதுமில்லை என்றும் அது ஒரு அடையாளம் என்றும் பேசினோம்...!
நான் அடையாளம் கண்டு கொண்ட நிறங்களில் வானம் இருந்த போதெல்லாம்!
கருப்பு சட்டமிட்ட சன்னல்களுக்கு வெளியே மழை இருந்தது...!
!
2. நினைவுகள் சேமிக்கும் மரங்கள்!
----------------------------------------------------!
வெயில் நிறைந்து கிடைக்கும்!
வேப்ப மரங்களில் நிழல்களுக்கு வெளியே!
பெறும்பாலான மதிய நேரங்கள்!
கொஞ்சம் சோம்பலில்தான் கழிகின்றன!
நாங்கள் ஏதாவது மனனம் செய்து கொண்டிருப்போம்!
சிலர் வேப்பம்பழங்களை சேமித்து கொண்டு இருப்பார்கள்!
மாசிலாமணி வாத்தியாரின் மெல்லிய குரட்டை சத்தம்!
சாலையில் செல்லும் பேருந்தின் சத்தத்தில் கொஞ்சம் கலையும்!
நிறைய நினைவுகளை அந்த வேப்பமரம் சேமித்து வைத்திருக்கலாம்!
சில சிறுமிகள் பெண்களானது முதல்!
சில நண்பர்கள் விலகி நின்ற வரை... எல்லாம் நினைவுகளாக!
பெயர் மறந்து போன ஒரு வாத்தியாரின் மரணம் உட்பட!
முத்துக்குமார்
முத்துக்குமார்