அது!
அவளாய் தான் இருக்கக்கூடும்!!
ஆழ் நித்திரையில்!
மெல்லிய இழைக்காற்று!
கவிதை பேசுவதும்,!
நினைவுகளை கையகப்படுத்தி!
கனவுகளை திரை போடுவதும், !
போர்த்திய போர்வையை!
கால் மாட்டில் இழுத்துவிடுவதும்,!
நிச்சயம்!
அவளாய் தான் இருக்கக்கூடும்!!
நாளை!
எப்படியும்!
அவளிடம் சொல்லிவிடுவதென்ற!
தீர்மானத்தோடு!
ஒவ்வொரு இரவும் விடைபெறுகிறது!!
ரசிகன்!, பாண்டிச்சேரி