மருத்துவக் குழல் - சஹ்பி எச். இஸ்மாயில்

Photo by FLY:D on Unsplash

தொலை காட்டியைப் போல் !
நீ எப்பொழுதும் உயரத்தையே பார்க்கிறாய் !
உன் காதல் மின்னல் !
அடிக்கடி கட்டிட உச்சியை நோக்கியே பாய்கிறது!
உனக்காக வானில் பட்டம் விட்டு சமிஞை செய்கிறேன். !
நீயோ என்னிடம் சிறகுடைந்த பட்டங்கள் கேட்கிறாய் !
கடிகார முட்களைப் போல் ஒவ்வொரு !
நிமிடமும் உன்னையோ தழுவுகிறேன் !
காதல் மதுக்கடையில் அதிகமாகக் !
குடிப்பவனுக்கு போதை ஏறுவதில்லை !
நான் உன் பெயரில் கவிதைகள் வரைகிறேன் !
நீயோ என்பெயரில் பதவிகள் தேடுகிறாய்!
காதல் கடிகாரத்தில் நாட்களை விட !
நிமிடங்களே மெதுவாகச் செல்லும்!
நீ வண்டுகளின் கால்கள் எண்ணுகிறாய் !
நான் பூக்களின் அழகை ரசிக்கிறேன்!
காதலில் கனவுகளை விட நிஜங்களே !
அதிகம் உண்மை பேசும் !
பகலில் என் காதலிக்காக உணர்வு !
வலையை வீசுகிறேன் !
இரவில் நீ உன் காதலனுக்காக !
அறிவு வலையை வீசுகிறாய்!
எனக்குத் தெரியும் நீயும் காதல் !
வீணை இசைக்கிறாய் என்று !
என்னவோ அது ஒரு நாளும் என் !
காதில் விழுவதில்லை!
குழல்களும் உன் இதயத் துடிப்பை !
ரசிக்க வேண்டுமென்கிறாய் !
என்னிடம் உள்ளது வெறும் செவிகள் மட்டுமே !
நான் கண்ணீரால் கடிதம் எழுதுகிறேன் !
அவற்றை நீ புன்னகையால் கிழித்தெரிகிறாய் !
காதல் சுவர்க்கத்தின் முடிவு நரகத்தின் வாயில்!
உன் காதல் ஒன்றுசேறும் நாளில் நானும் வருவேன் ஒரு காதல் மடலுடன் !
அது உனக்கல்ல என் மரணக் காதலிக்கு
சஹ்பி எச். இஸ்மாயில்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.